எல்லை சாலை கழகத்தில் 540 காலியிடங்கள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
எல்லை சாலை கழகத்தில் 540 காலியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 அக்
2019
00:00

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தின் (பி.ஆர்.ஓ., ) சார்பில் 'மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (டிரைவர் இன்ஜின் ஸ்டேட்டிக்)' பிரிவில் 540 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: விண்ணப்பதாரர்கள் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. இப்பதவிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். இதனுடன் மெக்கானிக் மோட்டார் / வெஹிக்கிள்ஸ் / டிராக்டர்ஸ் ஆகிய பிரிவுகளில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, செய்முறைத்தேர்வு, மருத்துவத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் தரப்பட்டு உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 50. எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

முகவரி: Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015

கடைசிநாள்: 25.11.2019

விபரங்களுக்கு:www.bro.gov.in.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X