மாயமாய் மறைந்த வசீர்! (1)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
00:00

இஸ்கான் நாட்டு மன்னர் அல்பாஷா, சுழல் பஞ்சணையில் சொகுசாக கண் மூடி படுத்திருந்தார்; ஆஸ்தான பாடகன் மாலிக் தாகா, உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தான்.
'இய்யா... இய்யா... இய்யா... யா... யா... யா...' என, இசை பொங்கியது.
முதலமைச்சர் வசீர், 'நான் எப்படியாவது, இந்த நாட்டு மன்னராகணும்... அதற்கு என்ன வழி' என்று, உள்ளங்கையை குத்தி, அறைக்குள் அலைந்தார். அவரது அடியாள் ஆசாப், எஜமானின் தவிப்பைக் கண்டு, வேதனையுடன் நின்றான்.
'மன்னர் ஆகாவிட்டாலும் பரவாயில்லை; இனிமேல் அவரை பார்க்கவே கூடாது...' என்று புலம்பி தவித்தார்.
'மன்னரை பார்க்காமல் இருக்க, ஒரு வழி இருக்கு; நகரத்துக்கு, புதிய மந்திரவாதி வந்திருக்கிறான்; பார்க்கிற எல்லாவற்றையும், மாயமாக மறையச் செய்துவிடுகிறானாம்...' என்றான் ஆசாப்.
துள்ளிக்குதித்த வசீர், 'இதை ஏன், இத்தனை நாள் சொல்லவில்லை... உடனே புறப்படு... அவரை பார்க்கலாம்...' என்று, ஆசாபின் சட்டையைப் பிடித்து இழுத்தபடி ஓடினார்.
'அதாவது... மன்னரை, 'காலி' செய்ய நீங்க போட்ட திட்டங்கள் எல்லாம், படுதோல்வி அடைந்து விட்டதே...' என்று குழறினான்.
'மூடு வாயை... தோல்வி தான் வெற்றிக்கான படிகள்; மந்திரவாதி வீடு எங்கே காட்டு...' என்ற வசீர், 'மன்னரை மறைக்க, மந்திரவாதம் செய்து விட்டால், மன்னர் பதவியை சுலபமாக பிடித்துவிடலாம்' என எண்ணி, குதுாகலமடைந்தார்.
ஒரு மாளிகையைக் காட்டினான் ஆசாப். வாசல் கதவு திறந்தே இருந்தது.
'விருந்தினர்களை வரவேற்கும் பண்பாளர் போலிருக்கு; நீ இங்கேயே இரு; மந்திரவாதியை சந்தித்து வருகிறேன்...' என்றபடி வேகமாக நுழைந்தார் வசீர்; சட்டென ஏதோ ஒன்றில் மோதி விழுந்தார்.
பாவம், அவர் மூக்கு, 'விண்... விண்...' என்று வலித்தது. வீட்டின் முன் வாசல் கதவை, மந்திரம் போட்டு மறைத்திருந்தார் மந்திரவாதி. அது தெரியாமல் தான், கதவில் மோதி விழுந்தார் வசீர்.
அந்த சத்தம் கேட்டதும், மந்திரத்தால் கதவை திறந்து, வெளியே வந்த மந்திரவாதி, 'மன்னிக்கணும்... பொருட்களை மறையச் செய்யும் ஆற்றல் படைத்தவன் நான் என்பதை, இங்கு வருபவர்கள் மறந்து விடுகின்றனர்; என் மந்திர மகிமை, என் வீட்டு வாசல் கதவிலிருந்தே துவங்குகிறது. எனவே கவனமாக வாருங்கள்; வீட்டுக்குள் எங்கும் பொருட்கள் இறைந்து கிடக்கின்றன...' என்று எச்சரித்தார் மந்திரவாதி.
சுற்று முற்றும் பார்த்தார் வசீர். வீடு வெறிச்சோடி கிடந்தது. எந்த பொருளையும் காணமுடியவில்லை. 'மனுஷன் கொஞ்சம் பைத்தியமாக இருப்பானோ' என எண்ணியபடி, திரும்பினார். அப்போது, 'ஜாக்கிரதை... உங்கள் முன்னால், ஆடும் நாற்காலி ஒன்று உள்ளது...' என்றார் மந்திரவாதி.
கண்களை அகல விரித்துப் பார்த்த வசீருக்கு, வெற்றிடம் தான் தெரிந்தது; நாற்காலி எதையும் காணோம்; ஆனால், அந்தரத்தில் கால் மீது கால் போட்டப்படி, மந்திரவாதி அமர்ந்திருந்தார். இதைக்கண்டு திகைத்த வசீரிடம், 'நீங்கள் யார், என்ன வேண்டும்...' என்றார்.
வியப்பை உதறியபடி, 'நான் இந்த நாட்டு முதலமைச்சர்...' என, கையை உயர்த்தியபடி பேசினார். அப்போது, 'ஐயோ போச்சு... போச்சு...' என்று கத்தினார் மந்திரவாதி; உடனே, ஏதோ விழுந்து, உடையும் சத்தம் கேட்டது. எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை.
மந்திரவாதி பதட்டத்துடன், 'ஐயோ... என் அருமையான பூ ஜாடியை உடைத்து விட்டீரே...' என்று குனிந்து துழாவினார். அவர் வெற்று வெளியில் துளாவுவது போல் தெரிந்தது.
வசீருக்கு தலை சுற்றியது. மந்திரவாதி பலே ஆள் தான் என, எண்ணியபடி, 'காணும் பொருட்களை மறையச் செய்யும் மந்திரத்தை, சொல்லித் தர வேண்டும்...' என்றார்.
'அது ஏகப்பட்ட விலையாச்சே... ரொம்ப பணம் தரணுமே, உங்களால முடியுமா...'
'எவ்வளவு...'
'ஒரு, 10 ஆயிரம் வராகன்...'
'அவ்வளவா... முடியாது, ஆயிரம்...'
'இதென்ன கத்திரிக்காய் வியாபாரமா... பேரம் பேசாதீர்...'
'சரி... கேட்டதை தருகிறேன்...'
மந்திர வித்தையை கற்பிக்கும் விதமாக, 'மனுஷங்களை மாயமாக மறையச் செய்ய வேண்டும் என்றால், அவன் முன் நின்று, கைகளால், கண்களை மூடி, 'ஆப்ரகடப்ரா, உன்னைக் காண விரும்பவில்லை' என்று, மூன்று முறை கூற வேண்டும்; அடுத்த வினாடி மாயமாக போவான்...' என்றார்.
'ப்பூ... இவ்வளவு தானா...'
'ஆமாம்... ஆனால், சொல்லும் போது, அந்த மனுஷன், ஆடாமல் அசையாமல் உங்கள் முன் நிற்க வேண்டும்...' என்றார் மந்திரவாதி.
அந்த மந்திரத்தை அப்போதே சோதித்துப் பார்க்க விரும்பிய வசீர், 'ஆசாப்...' என்று அழைத்தார்.
'இதோ வருகிறேன்...' என்ற குரலை அடுத்து, 'மடார்' என்ற சத்தம் கேட்டது.
'முட்டாள்... முட்டாள்... கதவை திறந்து வர வேண்டாமா...' என்று கத்தினார் வசீர். காலடியில் வந்து விழுந்த ஆசாப், குடமிளகாய் மூக்கை அழுத்திப் பிடித்தபடி, 'கதவு ஏதும் கண்ணில் தெரியவில்லையே...' என்றான்.
'சரி... சரி... அப்படியே அசையாமல் நில்...' என்றபடி, கண்களைக் கையால் மூடி, 'அப்ரகடப்ரா, நான், உன்னை காண விரும்பவில்லை...' என்று, மூன்று முறை கூறினார். அடுத்த வினாடி ஆசாப்பை காணோம்.
மகிழ்ச்சியில் குதித்த வசீர், 'என் அருமை ஆசாப்... தேடி வந்தது வெற்றியில் முடிந்தது; வா, போகலாம்...' என்றார்.
'உன்னை காண விரும்பவில்லை என்பதை கூறவா, என்னைக் கூப்பிட்டீர்கள்...' என்று அப்பாவியாக கேட்டான், உருவமற்ற ஆசாப்.
அடுத்த வினாடி, 'மடார்' என்ற சத்தம் கேட்டது. தலை நிமிர்ந்து நடந்த வசீர், கண்ணுக்கு தெரியாத எதன் மீதோ மோதி, குப்புற விழுந்தார்.
'இங்கு நடப்பது எல்லாமே மாயமாக இருக்கிறது...' என்றான் உருவமிழந்த ஆசாப்.
சுதாகரித்து எழுந்த வசீர், 'பேசாமல் நட... அரண்மனைக்கு உடனே போவோம்...' என்று, தள்ளாடியபடி நடந்தார்.
அப்போது, 'ஐயோ நான் உருவமற்றுப் போனேனா...' என்று கதறினான் ஆசாப்.
'அதனால் என்ன...' என்று எரிந்து விழுந்தார் வசீர்.
'எப்படி முகச்சவரம் செய்து கொள்வேன்...' என்று பரிதாபமாக கேட்டவனுக்கு, பதில் கூறவில்லை வசீர்.
அரண்மனை வாசலுக்கு வந்ததும், 'இங்கேயே காத்திரு...' என்று ஆசாபிடம் கூறி, உள்ளே போனார் வசீர். வாயிற் காவலன், 'திருதிரு' என விழித்தான்; ஆசாப், அவன் கண்ணுக்கு தெரியாததால், தன்னிடம் தான் கூறுகிறார் என்று எண்ணி, 'அப்படியே ஆகட்டும்...' என்று விரைப்பாக நின்றான்.
காவலன் குரல் கேட்டு, எரிச்சலடைந்த வசீர், 'முட்டாள், உன்னைச் சொல்லவில்லை; ஆசாபிடம் கூறினேன்...' என்றார்.
குழம்பிய காவலன், ஆசாபின் குரல் கேட்டு, சுற்றும் முற்றும் தேடினான். காணாததால் பீதியடைந்து, ஈட்டியை போட்டு விட்டு, 'காப்பாற்றுங்கள்...' என்ற படி ஓட்டம் பிடித்தான்.
வழக்கம் போல், சுழல் திண்டில் சாய்ந்து கிடந்த மன்னர், வசீர் உள்ளே வந்ததும், 'உன்னைப் பார்த்து, ரொம்ப நாளாயிற்றே...' என்றார்.
'அசையாதிரும்... நகராதிரும்... அப்படியே படுத்திரும்...' என்று கூறிய வசீர், கண்களை மூடிக்கொண்டு, 'அப்ரகடப்ரா' என்று கூற ஆரம்பித்தார்.
சுழல் மெத்தையிலிருந்து எழுந்தபடியே, 'இப்படி நீ சொல்வது நாகரிகமற்ற செயல்...' என்று கடிந்தார் மன்னர்.
- தொடரும்...

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X