தேவையான பொருட்கள்:
தாக்காளிப்பழம் - 4
வெல்லம் - 100 கிராம்
முந்திரி பருப்பு - 10
நெய் - சிறிதளவு
தேங்காய், ஏலக்காய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
தக்காளிப்பழத்தை, நன்கு வேக வைக்கவும். வெந்து குழைந்ததும், வெல்லம் சேர்த்து கிளறவும். அத்துடன், துருவிய தேங்காயை அரைத்து சேர்க்கவும்.
இந்த கலவை, பாயாசம் பதத்துக்கு வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி, ஏலாக்காய் துாள் போட்டு இறக்கவும்.
சத்தான ருசி மிக்க, 'தக்காளி பாயாசம்' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர். குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பியதும் பரிமாறலாம்.
- ஆர்.மேரி ராஜா, சென்னை.
தொடர்புக்கு: 88074 86110