திருவினை தரும் முயற்சி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
00:00

நம்பிக்கு, அம்மா, அப்பா இல்லை; அவன் உறவெல்லாம் பாட்டி மட்டுமே. மிகவும், ஏழ்மையான குடும்பம். வயிற்றுப் பிழைப்புக்கு கூலி வேலை செய்தனர். பாட்டி, வயலில் வேலை செய்யும் போது, ஊர் மாடுகளை மேய்ப்பான் நம்பி. சூரியன் மறைந்த பின், வீடு திரும்புவர்.
நம்பிக்கு, படிக்கும் ஆசை ஏற்பட்டது. அவனைப் போன்ற சிறுவர்கள், பள்ளி போவதைப் பார்த்து ஏங்குவான். விருப்பத்தை பாட்டியிடம் கூறியபோது, 'நாமெல்லாம் படிக்க முடியாதுப்பா; அது பணக்காரங்களாலத் தான் முடியும்...' என்று பெருமூச்சு விட்டாள்.
'நாம ஏன், படிக்க கூடாது...'
'நாம வேலை செய்தால் தானே சாப்பிட முடியும்; படிக்கப் போயிட்டா, யாரு சோறு போடுவாங்க...'
இதை, நம்பியின் மனம் ஏற்கவில்லை; படித்தே தீருவேன் என்று தீர்க்கமாக முடிவு செய்தான்.
அந்த ஊரில், ஒரே பள்ளிக் கூடம், அதுவும், 5ம் வகுப்பு வரை தான் இருந்தது.
மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி விட்டு, பள்ளியின் வாசல் அல்லது ஜன்னல் ஓரத்தில் நின்று கொள்வான். வகுப்பில் நடக்கும் பாடங்களை கவனிப்பான்.
மூன்று மாதங்கள் வரை, 1ம் வகுப்பிலும், அதன்பின், 2ம் வகுப்பிலும் என, இரண்டு ஆண்டுகளில், 5ம் வகுப்பு வரை பாடங்களை கற்றான்.
பின், யார் துணையும் இன்றி, புத்தகங்களை படிக்க முடிந்தது. கையில் கிடைத்த பழைய செய்திதாள்களை படித்து, அறிவைப் பெருக்கிக் கொண்டான்.
படிக்கும் விஷயத்தை, ரகசியமாகவே வைத்திருந்தான். மாடு மேய்க்கும் சிறுவன், படிக்கிறான் என அறிந்தால், 'படிப்பவன், சரியாக மாடு மேய்க்கமாட்டான்' என, வேலை தர மாட்டர் என்று எண்ணினான்.
அந்த கிராமத்திற்கு வாரம் ஒருமுறை தான், தபால்காரர் வருவார்; அவர் ஊருக்கு வெளியே, எங்காவது நம்பியைப் பார்த்தால், அந்த ஊருக்கு வந்த கடிதங்களை கொடுத்து வினியோகிக்க சொல்லி, திரும்பிப் போய் விடுவார்.
மாடு மேய்த்து திரும்பியதும், அந்த கடிதங்களை, உரியவர்களிடம் சேர்த்து விடுவான் நம்பி.
அன்றும், இரண்டு கடிதங்களை நம்பியிடம் கொடுத்துச் சென்றார் தபால்காரர். அதில் ஒன்று, கிராம தலைவருக்கு வந்திருந்தது. அரசு அனுப்பியிருந்தது; அதில், 'அவசரம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனடியாக பாட்டியை சந்தித்து, 'மாடுகளை பார்த்துக் கொள்; கடிதத்தை, தலைவர் ஐயா கிட்ட கொடுத்துட்டு வரேன்...' என்றபடி ஓடினான்.
கடிதத்தைப் படித்த கிராம தலைவர், அதில் குறிப்பிட்டிருந்தபடி, உயர் அதிகாரியை வரவேற்கவும், மக்கள் குறை கேட்பு கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்தார். அன்று மாலை வந்த அதிகாரியிடம், மக்கள் குறைகளை தெரிவித்தனர். கிராமத்துக்கு தேவையான வசதிகளை செய்ய உத்தரவிட்டார்.
அன்று இரவு, நம்பியை தேடி வந்தார், கிராமத் தலைவர். சில பெரியவர்களும் உடன் வந்தனர். அவர்களைக் கண்டதும் திகைத்தாள் பாட்டி.
புன்னகை புரிந்த கிராம தலைவர், 'உங்க பேரன் காலையிலேயே கடிதத்தை கொடுத்ததால் தான், மக்களை கூட்டி, அதிகாரியிடம் குறைகளை சொல்ல முடிந்தது; அதனால, நம்ம ஊருக்கும் நல்லது நடந்திருக்கு...' என்றார்.
திகைத்து நின்ற நம்பியிடம், 'இந்த கடிதம் மிக முக்கியமானது என உனக்கு எப்படி தெரியும்...' என்று கேட்டார் கிராம தலைவர்.
'ஐயா... அந்த கடிதத்தின் முகப்பில், 'அரசு பணி, மிகவும் அவசரம்' என்று முத்திரை பதித்திருந்தது. அதனால் முக்கியத்துவத்தை உணர்ந்து ஓடி வந்தேன்...'
'உனக்கு தான் படிக்க தெரியாதே...'
இரண்டு ஆண்டுகளாக, கல்வி கற்ற வழி முறையை கூறினான். ஊர் பெரியவர்கள் கண் கலங்கினார். நம்பியை, முறையாகப் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார் கிராம தலைவர். பேரனின் ஆசை நிறைவேறியது கண்டு மகிழ்ந்தாள் பாட்டி.
குட்டீஸ்... படிக்க ஆர்வம் இருந்தால், வாய்ப்புகள் தேடி வரும் என்பதை நினைவில் கொள்ளுங்க... நன்றாக கற்றுணர்ந்து, வாழ்வில் முன்னேறுங்கள்.

ருக்மணி சேஷசாயி

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X