அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
00:00

மர்ம குறுவாய் தவளை!
தழும்பும் நீரில் புஷ்டியாய் மிதக்கும் தவளை; அதன் தவ்வல் தனி அழகானது.
நம் நாட்டில், கன்னியாகுமரி முதல், குஜராத் மாநிலம், சுங்கத் நகரம் வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், புதிய தவளை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டில்லி பல்கலைக்கழக ஆய்வாளர், சோனாலி கார்க், அவரது ஆய்வு வழிகாட்டி, முனைவர் சத்யபாமா தாஸ் பிஜூ என்பவருடன் இணைந்து, கேரள மாநிலம், வயநாட்டில் கண்டுபிடித்துள்ளார்.
இந்த தவளை இனத்துக்கு, 'மிஸ்டிசெலஸ்' என்று பெயர் சூட்டியுள்ளனர். லத்தீன் மொழி சொல்லான இதற்கு, நுண்மையும், மர்மமும் நிறைந்தது என்று பொருள்.
மிகவும் குட்டியானது; முதிர்ந்த தவளை, 15 மி.மீ., நீளம் வரை தான் இருக்கும். இனப்பெருக்க காலத்தில் மட்டுமே, வெளியில் வரும். மற்ற நேரங்களில், ரகசியமாக வாழும். அதன் வாழ்க்கை மர்மம் நிறைந்தது; வாய் மிகவும் குறுகலானது. எனவே தான், 'மர்ம குறுவாய் தவளை' என்கின்றனர்.
கள ஆய்வின் போது, வயநாடு குட்டை ஒன்றில், வித்தியாசமான தலைப்பிரட்டைகளை பார்த்த சோனாலி கார்க், ஆய்வகத்துக்கு எடுத்து சென்றார். அதன் மரபணுக்கள், ஏற்கனவே கண்டறியப்பட்ட, தவளை இனங்களுடன் ஒத்து போகவில்லை. எனவே, இந்த இனத்தில், முதிர்ந்த தவளையை தேடி ஆய்வைத் தொடர்ந்தார்.
தென்மேற்கு பருவ மழைக்காலத்தில், வயநாட்டில், ஒரு குட்டை அருகே புல்வெளியில், இந்த இன முதிர்ந்த தவளைகளைப் பார்த்தார். இனப்பெருக்கத்துக்காக, வெளியில் வந்திருந்தன; நான்கு நாட்கள் மட்டுமே தென்பட்டன. பின், மாயமாய் மறைந்துவிட்டன. ஆண்டு முழுதும் தேடியும் காண முடியவில்லை.
இனப்பெருக்க காலத்தில், நான்கு நாட்கள் மட்டுமே, வெளி உலகிற்கு வருகிறது என கண்டறிந்த, ஆய்வாளர் சோனாலி கார்க் கூறுகையில், 'முதன் முதலில், 2013ல், இந்த தவளையின், தலை பிரட்டையை பார்த்தேன்; இரண்டு ஆண்டுகள் தேடி, 2015ல் முதிர்ந்த தவளையைப் பார்த்தோம். அடுத்து, நான்கு ஆண்டுகள் தீவிரமாக முயன்ற பின் தான், விவரங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது...' என்றார்.
இது, முற்றிலும் வேறுப்பட்ட புதிய தவளை இனம். இதை, ஓரளவு சார்ந்துள்ள, மற்றொரு இனம், தென்கிழக்கு ஆசிய நாடுகளான, கம்போடியா, மலேஷியா, இந்தோனேஷியாவில் உள்ளன.
'உலகில் உயிரினங்கள் தோன்றிய காலத்தில் இருந்ததாக கருதப்படும், 'கோண்டுவானா பெருங்கண்டம்' பற்றிய ஆய்வுகளுக்கு, இந்த புதிய தவளை இனக் கண்டுபிடிப்பு உதவியாக அமையும்...' என்றார் முனைவர் சத்யபாமா.
உலகில், 34 பல்லுயிரின பெருக்க மண்டலங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையும், அதில் ஒன்று. இந்தியாவில் உள்ள தவளை இனங்களில் பெரும்பான்மை இங்கு தான் காணப்படுகின்றன. அவற்றில், 80 சதவீதம், உலகில் வேறு எங்கும் காணப்படாதவை.
ஒவ்வொரு உயிரினமும், உயிர்ச்சூழலுக்கு, ஏதாவது ஒரு வகையில் உதவிக் கொண்டே இருக்கின்றன. புலியும், யானையும் காட்டுக்கு எவ்வளவு அவசியமோ, அதுபோல, தவளையும், தேரையும் அவசியம்.
அனைத்து உயிரினங்கள் மீதும், அக்கறையும், அன்பும் செலுத்தி பாதுகாப்போம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X