இளஸ்... மனஸ்... (17)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
00:00

அன்புள்ள மெடோஸ்...
என் வயது, 42; பிளஸ் 2 வரை படித்துள்ளேன்; இல்லத்தரசியாக இருக்கிறேன்; என் கணவருக்கு வயது, 44;
அரசு அலுவலகத்தில், கடை நிலை ஊழியராக பணிபுரிகிறார். எங்களுக்கு ஒரு மகன்; இரண்டு மகள்கள். மூத்தவனுக்கு, 14 வயதாகிறது; 8ம் வகுப்பு படிக்கிறான். அனைவரையும், அரசு பள்ளியில் படிக்க வைக்கிறோம்.
வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறோம்; மிதிவண்டியில் தான், கணவர் வேலைக்குச் சென்று வருகிறார்.
மாதம் இருமுறை அசைவம் சமைப்பேன். தியேட்டருக்கு சென்று, சினிமா பார்க்க மாட்டோம்; பழைய வகை, 'டிவி' ஒன்று வைத்திருக்கிறோம். 80 வயதான மாமியார், படுக்கையில் கிடக்கிறார். அவரை நான் தான் கவனித்துக் கொள்கிறேன்.
வீட்டிலிருக்கும் கிரைண்டரில் மாவு அரைத்து, அதே மாவில் ஒரு வாரத்துக்கு தோசை சுட்டு பரிமாறுவேன்; மூன்றாவது நாளில், மாவு புளித்து, தோசையை வாயில் வைக்க முடியாது.
எவ்வளவு சிரமப்பட்டாலும், மகன், மகள்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க சபதம் எடுத்துள்ளோம்.
கடந்த, ஒரு ஆண்டாகவே, எங்கள் காதுபடவே, மகன் கீழ்கண்டவாறு புலம்புகிறான்...
'கடவுளுக்கு என் மேல என்ன கோபம்... ஏன் இந்த பிச்சைக்கார வீட்ல என்னை பிறக்க வெச்சான்... சொந்த வீடு இல்லை; நல்ல சாப்பாடு இல்லை... அப்பன், அம்மா மூஞ்சியை பாக்கவே பிடிக்கவில்லை. வீட்டை விட்டு எங்கயாவது ஓடி போயிரலாமான்னு தோணுது...' என, முகத்தில் அறைந்துக் கொள்கிறான்.
இவனை திருத்த என்னம்மா செய்யலாம்.

அன்புள்ள சகோதரி, நான் எழுதியுள்ள இந்த பதிலை, உன் மகனுக்கு படிக்கக் கொடுங்க.
கண்மணியே!
யாருக்கு மகனாய் பிறப்போம்... என்ன உருவ அமைப்புடன் பிறப்போம்... பிறந்ததும் இறப்போமா... முதியவனாகி இறப்போமா... என்பதெல்லாம், யாருக்கும் தெரியாத விடுகதை!
நாம் பார்க்கும் கோடீஸ்வரர்கள் எல்லாம், பிறவி பணக்காரர்கள் அல்ல; சாதாரணக் குடும்பங்களில் பிறந்து, கடின உழைப்பால் முன்னேறியவர்கள். பணம், புகழ், கல்வி, அதிகாரம், வாழ்க்கைத் துணை என, அனைத்தையும், நாம் தான் சுயமாய் தேடிக் கொள்ள வேண்டும்.
தமிழக மக்கள் தொகை, 7.5 கோடி; இவர்களில் அதிகபட்சம், 500 கோடீஸ்வரர்கள் இருக்கக்கூடும். மீதமுள்ளவர்களின் குழந்தைகள் எல்லாம், 'நாங்கள், பணக்காரராக பிறக்கவில்லையே...' என, புலம்பினால் ஏற்றுக் கொள்வாயா...
தொடர்ந்து, 500 ஆண்டுகள், கோடீஸ்வரர்களால் உயிர் வாழ முடியுமா...
கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவன், காலையில், உணவுக்குப் பதில், தங்கம், வைரத்தையா உண்ண முடியும்.
சட்டைப்பையில், 100 ரூபாய் வைத்திருக்கும் ஏழைக்கு, ஒரு கவலை என்றால், கோடி கோடியாய் குவித்து வைத்திருப்பவனுக்கு, லட்சம் கவலைகள்.
'பணக்காரன் ஆக வேண்டாம்; சாமியாராக போய் விடு' என, உன்னை கூறவில்லை; அரசுப் பள்ளியில் படித்த எத்தனையோ மாணவர்கள், பின்னாளில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர்.
குறிக்கோளுடன் படித்தால், மிக உயர்ந்த பதவிகளுக்கு போகலாம். அல்லது பட்டப்படிப்பை முடித்து, சுயதொழில் துவங்கி, கோடீஸ்வரனாக முயற்சி செய்யலாம்.
குழந்தை தொழிலாளி ஆக்காமல், உன்னை படிக்க வைக்கும் பெற்றோருக்கு நன்றியுடன் இரு. வாழ்க்கை ஒரு போர்க்களம்; வாளை சுழற்றி வெற்றி பெறாமல், புலம்பினால் தகுமா...
'உனக்கும் கீழே உள்ளவர் கோடி; அதை நினைத்து நிம்மதியை நாடு...' என்றார், கவிஞர் கண்ணதாசன்.
வாழ்வதற்கு பணமும் முக்கியம்; பணமே முக்கியமல்ல. உடல் ஆரோக்கியமும், போதும் என்ற மனமும் அமைந்தால், அதுவே பெரும் பொக்கிஷம்.
வானில் பறக்கும் விமானமும், பாதையில் நீண்ட துாரம் ஓடித்தான், வானில் ஏறும்; இருண்ட பக்கங்களையே பார்த்துக் கொண்டிருக்காமல், வெளிச்சப் பக்கத்தை தேடி பறப்பதற்கு முயற்சி செய் மகனே; வெற்றி உனதே!
- அன்புடன், மெடோஸ்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X