இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2019
00:00

மகள் வாழ்வில் ஒளியேற்றுங்கள்!
என் உறவினரின் மகள், கணவனை இழந்தவள். இரண்டு குழந்தைகளுக்கு தாய். வயது, 30க்குள் தான் இருக்கும். 'இனி, குழந்தைகளுக்காக வாழு...' என, பெற்றோரும், உறவுகளும் ஒதுங்கி விட்டனர். சமீபத்தில், அப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது.
அவளிடம் விசாரித்ததில், கண்ணீர் வடித்தபடி, 'புருஷன் செத்துட்டா, பொண்டாட்டி தினம் வாழ்ந்து சாவணுமா... எனக்கும், ஆசா பாசம் இருக்கும்ன்றது, ஏன் யாருக்கும் புரியல...
'ரெண்டு குழந்தை இருந்தா, ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க கூடாதா... என் குடும்பத்தினர், என்னை பார்க்கறப்ப, வருந்துறாங்களே தவிர, திரும்பவும் வாழ வைக்கணும்ன்னு நெனைக்க மாட்டேங்கிறாங்க...' என்றாள்.
அவரின் தாயாரை சந்தித்து, விபரம் சொன்னேன்.
'ஒரு பெண்ணாய் இருந்தும், அதிலும், பெற்றவளாய் இருந்தும், என் மகளின் மனதை நானே புரிந்து கொள்ளாமல் போனேனே...' என, கண் கலங்கியவர், கணவரிடம் விஷயத்தை பகிர்ந்துள்ளார். தற்போது, மனைவியை இழந்த சில வரன்களை பார்த்துக் கொண்டுள்ளனர்.
பெற்றோரே... துரதிர்ஷ்டவசமாக, தங்கள் வீட்டில், கணவனை இழந்த மகள் இருந்தால், தயவுசெய்து, மனம் விட்டு பேசி, அவள் மனதை புரிந்து செயல்படுங்கள்... கணவனை இழந்த பின், அவளது கதை முடிந்து விட்டதாக கருதாதீர்... மீண்டும் அவள் வாழ்வை ஒளிரச் செய்யுங்களேன், ப்ளீஸ்!
- பா. பாக்கியலட்சுமி, ராஜபாளையம்.

புது வகை, 'ஸ்வீட்' செய்யப் போகிறீர்களா?
'தீபாவளிக்கு, புதிதாக ஏதாவது இனிப்பு செய்து, விருந்தினரை அசத்தலாம்...' என்று, 'யூ - டியூப்' சேனலில் தேட, மில்க் பர்பி செய்முறை விளக்கம் கிடைத்தது.
அதில் குறிப்பிட்டிருந்த பொருட்களை, அதே அளவில் எடுத்து, செய்து காட்டிய முறைப்படியே செய்ய ஆரம்பித்தேன்.
நெய் தடவிய தட்டில், கலவையை கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும் என்று கூறியிருந்தது. அவ்வாறே, துண்டுகள் போட கத்தியை வைத்தது தான் தாமதம், துண்டுகள் விழாமல், கத்தியோடு திரண்டு வந்தது.
'அடடா... ஏதோ பக்குவம் தவறியிருக்கிறது...' என்று, சிறிது எடுத்து வாயில் போட்டேன். அது, பால்கோவா, மில்க் கேக் மற்றும் பர்பி என்று, எதிலும் சேர்த்தி இல்லாமல், வித்தியாசமான சுவையில் இருந்தது.
மில்க் அல்வா என்று பெயர் சூட்டி, தோழியருக்கு கொடுக்க, சாப்பிட்டவர்கள், ஜவ்வு மிட்டாய் வாயில் ஒட்டிய குழந்தைகள் போல், 'பேந்த பேந்த' விழித்தனர்.
'சுவை, நன்றாக தான் இருக்கிறது; ஆனால், என்னவோ குறைகிறது...' என்று சமாதானப்படுத்தினர்.
'நள மகாராஜா'வான, எங்கள் அலுவலக முதலாளிக்கு, ஒரு ஸ்பூன் ஸ்வீட் தர, சுவைத்து பார்த்தவர், 'இங்கிலாந்து மகாராணி, எலிசபெத்துக்கு, நம்மூர், 'ஸ்வீட்' செய்ய கற்றுக்கொடுத்தால், அவர் நாட்டு, 'ஸ்டைலில்' எப்படி செய்வாரோ, அதுபோல், 'அசட்டுபிசட்டு' என்று இருக்கிறது...' என்றாரே பார்க்கணும். சுற்றியிருந்தவர்கள், குலுங்கி, குலுங்கி சிரித்தனர்.
உஷ்... தோழியருக்கு தெரியாமல், உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன்... இப்படி தான், கராச்சி அல்வா செய்ய முயற்சித்து, அது, கெட்டியாக இறுகி, பர்பியை விட கடினமாக போய் விட்டது.
துண்டுகள் போட வராமல், சுத்தியலால் அடித்து உடைத்தும், கடிக்க முடியவில்லை. வெளியில் துாக்கி எறிய, தெருவில் படுத்திருந்த நாய் மீது விழ, அது, கல் விழுந்தது போல், 'லொள்' என்று அலறி ஓடியதும், என்னை பார்த்து நக்கலாக சிரித்தார், கணவர்.
தோழியரே... புதிய வகை பட்சணம் செய்யப் போகிறீர்களா... அதில், 'எக்ஸ்பர்ட்' ஆக உள்ள ஒருவரின் துணையோடு செய்து பாருங்கள் அல்லது பொருட்கள் வீணானாலும் பரவாயில்லை என்று, இரண்டு, மூன்று முறை சிறிய அளவில் செய்து பார்த்து, சரியான பக்குவம் தெரிந்த பின், செய்து அசத்துங்கள்; விஷ பரீட்சை வேண்டாம்.
எஸ். செந்தமிழ் வாணி, சென்னை.

இப்படியும் ஒரு தீபாவளி சீட்டு!
'மாதம், 200 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு பணம் செலுத்தினால், தீபாவளிக்கு, 3,000 ரூபாய் மதிப்புள்ள, 'பிராந்தி, ரம், விஸ்கி, பீர்' மற்றும் 'ஜின்' ஆகிய உற்சாக பானங்களும், 'சைடு டிஷ்' ஆக, சிப்ஸ், மிக்சர், ஊறுகாய், 'சிக்கன் 65' மற்றும் சோடா, 'கோக், பெப்சி' ஆகியவையும் வழங்கப்படும்...' என, சில இளைஞர்கள், விளம்பரம் செய்து, தீபாவளி சீட்டு ஆரம்பித்து, வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும், 5ம் தேதிக்குள் பணம் கட்டி விடவேண்டும். தவறினால், 20 ரூபாய் அபராதம். இடையில் பணம் கட்டாமல் நிறுத்தி விட்டால், கட்டிய பணம் மட்டுமே கடைசியில் தரப்படும். முழுமையாக பணம் கட்டியவர்களுக்கு, தீபாவளிக்கு,மேற்குறிப்பிட்ட சரக்குகள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்; பணமாக தரப்பட மாட்டாது.
இப்படி, ரிசர்வ் வங்கியின் சட்ட திட்ட விதிகளை போல, பல கண்டிப்பான விதிமுறைகள் உண்டு.
முன்பெல்லாம், பண்டிகையை கொண்டாடி மகிழ, தீபாவளி பலகாரங்கள், புத்தாடை, பட்டாசு என, தீபாவளி சீட்டு பிடிப்பது வழக்கத்தில் இருந்தது. இப்போது, சரக்கு மற்றும் 'சைடு டிஷ்'ஷுக்காக சீட்டு பிடிக்கும் சிந்தனை மேலோங்கி வளர்ந்துள்ளதை அறியும்போது, வேதனையாக உள்ளது.
- ஆர். பிரணவ், பாபநாசம்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
31-அக்-201913:48:44 IST Report Abuse
Girija @பா. பாக்கியலட்சுமி, ராஜபாளையம். இரண்டு குழந்தை பெற்றபின் இப்படி யோசிக்க வேண்டுமா? இந்திய ராணுவத்தில், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் கணவர்களின் மனைவிகளை நினைத்துப்பாருங்கள். கணவன் இருந்தும் இல்லைதான் அவர்கள் நிலை. அவர்களெல்லாம் குழந்தைகளுக்காக வாழ்வில்லையா? தற்போது எந்தப்பெண்ணும் ஒரு ஆண்மகனுக்கு இரண்டாம்தாரமாக மணம்செய்ய தயாரில்லை, ஏனென்றால் பின்னால் ஏற்படும் கொலை வரை செல்கிறது. கூடா நட்பு என்பதுபோல் கூடா உறவு என்பதுபோல் ஆகிவிடும். இருந்தும் மறு திருமணத்திற்கு விரும்பினால் முதலில் குழந்தைகளை விடுதிகளில் சேர்த்து அவர்கள் பாதுகாப்பாக வாழ வழிசெய்துவிட்டு அல்லது பெற்றோர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு சென்றுவிடுங்கள். இந்த உறவை எக்காரணம் கொண்டும் மீன்டும் தொடராதீர்கள் அது உங்கள் உயிருக்கும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்தாக முடியும்.
Rate this:
Cancel
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
30-அக்-201915:56:05 IST Report Abuse
Vasudevan Srinivasan தீபாவளிக்காக புதுவகை சுவீட் செய்ய யூடியூபில் தேடவேண்டிய அவசியம் ஏன் வந்தது..? அந்த காலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தபொழுது வளரும் பெண்களுக்கு வீட்டு பெரியவர்கள் சமையல் மற்றும் பலகாரம் செய்ய கற்றுக்கொடுத்து வளர்த்தோடு குடும்ப வழக்கங்களையும் சொல்லி க்கொடுத்தனர். ஆனால் இன்றோ பிரைவசி என்ற பெயரில் ஆளாளுக்கு தனிக்குடித்தனம் நடத்தி ஒன்றும் தெரியாமல் வாழ்கின்றனர் அந்த காலத்தில் கூட்டுக்குடும்பத்தில் பிரைவசி இல்லாமலா ஆறு ஏழு என்று பிள்ளைச்செல்வங்களை பெற்றனர்.. பொருளாதார சிக்கலை காரணம் காட்டி தனிக்குடித்தனத்தை நியாய படுத்தும் கூட்டத்துக்கு ஒரு விஷயம் பொருளாதார சிக்கல் என்பது அந்த காலத்திலும் உண்டு கூட்டுக்குடும்பத்தில் இருந்த பொது பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களின் வழி காட்டுதல் மற்றும் தலைமையில் அனைவரும் கட்டுப்பாடோடு ஆடம்பரம் படாடோபம் இல்லாமல் வாழ்ந்தனர்.. ஆனால் இன்றோ ஸ்கூல் போகும் சிறுவன் கூட விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறான்... ஐ-பேட் பயன்படுத்துகிறான்.. இன்னும் நிறைய சொல்லலாம் கூட்டுகுடும்பம்தான் சிறந்ததது நல்லது.. அது மட்டுமின்றி கூட்டுக்குடும்பமாக இருக்கும்போது ஒருவர் சிரியவரோ பெரியவரோ தவறு செய்ய யோசிப்பார் அய்யோ வெளில தெரிஞ்ச மானம் போய்டுமே என்று அப்படி மீறி தவறு செய்தால் அந்த பெரிய குடும்பத்தில் யாராவது ஒருவர் அவரை அன்பாவாகவோ அல்லது அதட்டியோ திருத்துவார்.. ஆனால் இன்று கேட்க ஆளில்லாமல் கேட்கவேண்டியவர்களுக்கு நேரமும் இல்லாமல் கலாச்சாரம் தள்ளாடுகிறது..
Rate this:
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
28-அக்-201911:28:08 IST Report Abuse
Divahar சரக்கு சீட்டுக்கு இங்கு விளம்பரம் தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X