கம்ப்யூட்டருக்கு புதியவரா? இமெயில் தொடக்க வரிகள் - ஏன், என்ன?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஏப்
2011
00:00

ஒருவர் இமெயில் பெறுகையில் அதன் தொடக்கத்தில்From, To, Subject தவிர இன்னும் நிறைய வரிகளில் சில தகவல்கள் தரப்படுகின்றன. இவை எல்லாம் என்ன? ஏன் இவை தரப்படு கின்றன? இவை குறித்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
முதலில் அனைத்து இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும், இது போல அனைத்து தகவல்களையும் காட்டுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். . இருந்தாலும் என்ன வெல்லாம் இருக்கலாம் என்று ஒரு எடுத்துக் காட்டினைப் பார்க்கலாம்.
ReturnPath: <murthy@dinamalar.in>
Received: from sundaram (dinamalargw.customer.net [64.246.98.197])
(authenticated)
by dinamalar.in (8.11.6/8.11.6) with ESMTP id 35TKe7Z16838
for <murthy@dinamalar.in>; Mon, 24 Nov 2008 15:40:06 0500
MessageID: <008201c743e5$a66754 b0$6401a8c0@murthy>
From: “I” <murthy@dinamalar.in>
To: “B” <sundaram@dinamlar.in>
Subject: Computer Malar readers questions
Date: Mon, 24 Nov 2008 15:40:01 0500
XPriority: 3
XMailer: Microsoft Outlook Express 6.00.2900.3028
XAntivirusStatus: Clean
XUIDL: [Hb”!d”S”!T_<!!ZZ[!!
XAntivirus: AVG for Email 7.5.432 [268.17.14/657]
MimeVersion: 1.0
இவற்றை ஹெடர்கள் என அழைக்கிறோம். சப்ஜெக்ட் லைன் தானே வேண்டும்; இவை எல்லாம் என்ன? என்ற சந்தேகம் வரலாம். ஏனென்றால் இமெயிலைப் பொறுத்தவரை இன் பாக்ஸில் நாம் முதலில் பார்ப்பது சப்ஜெக்ட் லைனும் அதில் தரப்பட்டுள்ள வையும் தான். இந்த ஹெடர்கள் எல்லாம் நாம் இமெயிலைத் திறக்கையில் நமக்குக் கிடைப்பவை ஆகும். பொதுவாக இந்த ஹெடர்கள் பல வரிகளில் இருப்பவை. இவற்றில் பலவகையான தகவல்கள் உள்ளன. மெயில் அனுப்பியவர், பெறுபவர், அனுப்பிய சர்வர், கால நேரம், வைரஸ் உள்ளதா இல்லையா எனப் பல தகவல்கள் தரப்படுகின்றன.
மேலே தரப்பட்டுள்ளவற்றைப் பார்த்தால் சற்று தலை சுற்றும். ஆனால் தகவல்கள் அப்படிப்பட்டவை அல்ல. நமக்குத் தேவயானவை தான். முதல் வரியிலிருந்து வருவோம்.
ReturnPath வரியைக் காண்போம். இமெயில் ஒன்று தன் பாதையில் செல்வதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இதிலுள்ள இமெயில் முகவரி தான் மீண்டும் அதனை அனுப்ப வழி காட்டுகிறது. அடுத்ததாக Received என்று தொடங்கும் வரி. இது தான் பெறுபவரின் இன்பாக்ஸ் முகவரி. இமெயில் ஒன்று பல மெயில் சர்வர்களின் வழியே தன் பயணத்தை மேற்கொள்கிறது. அப்போது இந்த மெயில் இன்னாரிடமிருந்து இதில் குறிப்பிடப்படும் முகவரிக்குத் தான் செல்ல வேண்டும் என்பதனை அவற்றிற்கு அறிவிக்கும் இடம் இதுதான். வழக்கமாக இதில் சேர வேண்டிய சர்வரின் இருப்பிடம், ஐ.பி. முகவரி ஆகியவை இருக்கும். இதில் இந்த இமெயில் அனுப்பப்பட்ட தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் ஒரு இமெயில் சேரவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்தால் அது ஏன் செல்லவில்லை என்ற விசாரணையை இதிலிருந்து தொடங்கலாம்.
அடுத்த வரி MessageID ஆகும். இமெயில் பயணிக்கத் தொடங்கிய முதல் சர்வரிலிருந்து அந்த இமெயிலுக்கு வழங்கப்பட்ட முதல் செயல் கட்டளை இதுதான். இதனை அடுத்து From: என யாரிடமிருந்து இது எனக் குறிப்பிடும் இடத்தைக் காணலாம். இதில் இமெயில் அனுப்பியவரின் பெயர், முகவரி இருக்கும். அடுத்ததாக To: வரி. இதில் இந்த இமெயில் யாருக்கு என்ற தகவலும் அவரின் முகவரியும் இருக்கும். அடுத்ததாகக் காணப்படும் வரி Subject: வரி. இது இருக்கும். ஆனால் இதில் எதாவது எழுதப்பட்டிருக்கலாம்; அல்லது எழுதப்படாமலும் இருக்கலாம். அது இமெயிலை அனுப்புபவரின் விருப்பம். (ஒரு சிலர் சப்ஜெக்ட் லைனில் ஒன்றும் இல்லை என்றால் அதனைத் திறந்து படிக்காமலேயா அழித்துவிடும் பழக்கம் கொண்டிருப்பார்கள் - கோபத்துடன்) இதன் பின் இமெயில் எந்த நாளில் அனுப்பப்பட்டது என்ற தேதி உள்ள date வரி.
இவற்றை அடுத்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் தான் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இந்த வரிகளில் எக்ஸ் எனத் தொடங்கும் வரிகள் எல்லாம் பல்வேறு முக்கிய தகவல்களை அளிக்கும் வகையாக இடம் பெறுகின்றன.
இது இமெயிலுக்கு அதனை எழுதியவர் தந்த முன்னுரிமை இடத்தினைக் காட்டுகிறது. முக்கியமானதா? அதி முக்கியமானதா? என இதில் தரப்படும். இவற்றைக் குறிக்க இங்கு எண்கள் தரப்பட்டிருக்கும்.
அடுத்தது XMailer என்ற வரி. இது இந்த இமெயில் எந்த புரோகிராமில் இருந்து அனுப்பப்பட்டது எனக் காட்டும் வரியாகும். எடுத்துக் காட்டாக இங்கே காட்டப்பட்டுள்ளது அவுட்லுக் எக்ஸ்பிரஸ்.
அடுத்தது XAntivirusStatus என்பது. இது மெயிலில் ஏதேனும் வைரஸ் இணைந்துள்ளதா எனக் காட்டும் வரி. இதிலிருந்து அந்த இமெயிலில் ஏதேனும் வைரஸ் இருந்ததா? அது நீக்கப்பட்டு உங்களுக்கு கிடைக்கிறதா? அல்லது அதனுடன் இருந்த அட்டாச்டு பைலில் வைரஸ் இருந்து அட்டாச்மெண்ட் நீக்கப்பட்டுவிட்டதா என்ற தகவல்கள் இங்கு காட்டப்படும்.
அடுத்து நாம் காண்பது XUIDL என்பது. இது இமெயில்கள் பி.ஓ.பி.3 வகை சர்வர்களால் அளிக்கப்படுகையில் அதனை எடுத்துக் காட்டும் வகையில் இதில் தகவல்கள் காட்டப்படும்.
அடுத்ததாக உள்ள XAntivirus என்னும் வரி இமெயிலை அனுப்பியவர் என்ன ஆண்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்துகிறார் என்று காட்டும்.
மேலே சொல்லப்பட்டவை எல்லாம் எக்ஸ் தகவல்களைக் காட்டும் எக்ஸ் வரிகள். இமெயில் ஹெடர்களில் இறுதியாக MimeVersion என்ற வரி கிடைக்கும். இது இமெயில் குறித்த ஒரு கான்டெக்ஸ்ட் தான். இமெயிலைப் பெறுபவர் புரிந்து கொள்வதற்காகக் காட்டப்படும் தகவல். இதுவும் ஒரு எண்ணால் தான் பதியப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டில் இது 1.0 ஆக உள்ளதைப் பார்க்கலாம்.
சரி, இவை எல்லாம் எதற்காக? ஒரு சில வேளைகளில் இந்த ஹெடர்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. சில தகவல்களைப் பெற இவை துணை புரிகின்றன. இவற்றைப் பெற நாம் ஹெடர்களை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் இதனைப் பெற மெசேஜில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties மீது கிளிக் செய்திடவும். இதில் பின் Details என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும். அனைத்து ஹெடர்களும் காட்டப்பட்டு தகவல்கள் கிடைக்கும். மற்ற இமெயில் புரோகிராம்களிலும் இதனைப் பெறலாம். பெறும் வழிகள் சற்றே, சற்றேதான் மாறுபட்டிருக்கும். சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் இவற்றில் சிலவற்றை மட்டும் காட்டும் வகையில் செட் செய்திடும்படி இருக்கும். நம் விருப்பப்படி முழுமையாகவோ பாதியாகவோ ஹெடர்களைப் பெறலாம்.
எப்படி இருப்பினும் இவை குறித்து அறிந்து வைத்திருப்பது நல்லதுதான்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X