கற்றுக்கொள்!
தர்மம் செய்ய
கற்றுக்கொள்...
தலைமுறைகள்
தழைத்தோங்கும்!
சேவை செய்ய
கற்றுக்கொள்...
எல்லையில்லா
சந்தோஷம் பிறக்கும்!
தியாகம் செய்ய
கற்றுக்கொள்...
திக்கெட்டும்
புகழ் மணக்கும்!
விட்டுக் கொடுக்க
கற்றுக்கொள்...
வஞ்சக பேய்கள்
விலகி ஓடும்!
இனிமையாக பேச
கற்றுக்கொள்...
ஈர்க்கும் ஆற்றல்
பெருக்கெடுக்கும்!
கருணை காட்ட
கற்றுக்கொள்...
சொர்க்க வாசல்
வழி திறக்கும்!
கல்வி புகட்ட
கற்றுக்கொள்...
லட்சிய பாதையில்
புகழ் ஒளி வீசும்!
மனித நேயத்தை
கற்றுக்கொள்...
பெயரும், புகழும்
கொடி கட்டி பறக்கும்!
— மணியட்டி மூர்த்தி, கோவை