பாத்திரத்தை துலக்க பயன்படுத்தும், 'ஸ்பான்ச்'சில், லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் குடியிருக்கும். ஒரே, 'ஸ்பான்ச்'சை தொடர்ந்து உபயோகித்தால், நம் கைகளில் பாக்டீரியாக்கள் படிந்து, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும். இதைத் தவிர்க்க, வாரம் ஒருமுறை, 'ஸ்பான்ச்'சை மாற்றவும் அல்லது பிளீச்சிங் பவுடர் கலந்த வெந்நீரில், 20 நிமிடங்கள் ஊற வைத்து அலசி எடுத்தால், கிருமிகள் அழிந்துவிடும். கழுவிய பாத்திரங்களை, வெயிலில் காய வைத்து, உடனுக்குடன் துடைத்து வைத்தால், தேவை இல்லாத துர்நாற்றத்தை தடுக்கலாம்.