கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஏப்
2011
00:00

கேள்வி: திடீரென என்னுடைய ஹார்ட் டிஸ்க்கில் இடம் காலியாகி வருகிறது என்று செய்தி வருகிறது. பைல்களை நீக்க உதவட்டுமா என்று ஒரு மெனுவும் கிடைக்கிறது. இது போல டிஸ்க் இடம் இல்லா நிலை ஏற்படுவதனை எப்படி அறிவது? நான் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன்.
-ஆ. சுனில் குமார், திருப்பூர்.
பதில்: அடிக்கடி செக் செய்து தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு தெரிந்து கொள்வது நல்லது. இதற்கு ஸ்டார்ட் அழுத்தி மை கம்ப்யூட்டர் அழுத்துங்கள். அல்லது டெஸ்க் டாப் விண்டோவில், மை கம்ப்யூட்டர் ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும். உடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ்களுக்கான ஐகான்கள் கிடைக்கும். இதில் நீங்கள் எந்த டிரைவிற்கு செக் செய்திட விரும்புகிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். அப்போது மெனு ஒன்று கிடைக்கும். இந்த மெனுவில் இறுதியாகக் கிடைக்கும் ப்ராபர்ட்டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடுத்தால் உடன் டிஸ்க் ஸ்பேஸ் குறித்து வட்ட வடிவில் ஒரு சார்ட் கிடைக்கும். இதில் ஏற்கனவே பயன்படுத்திய அளவு, மற்றும் இன்னும் பயன்படுத்தக் கூடிய அளவு நீலம் மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். படத்திற்கும் மேலாக அளவுகளில் தரப்பட்டிருக்கும். அதற்கும் மேலாக அந்த டிரைவில் என்ன வகை பைல்கள் உள்ளன என்று காட்டப்பட்டிருக்கும். டிரைவின் மொத்த கொள்ளளவும் தரப்பட்டிருக்கும்.

கேள்வி: பயர்பாக்ஸ் பதிப்பு 4 குறித்த உங்கள் கட்டுரையைப் படித்தபின், அதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறேன். பெரும்பாலான நேரங்களில், இணைய தள எழுத்துக்கள் கலங்கலாக, மங்கலாகத் தெரிகின்றன. ஏன்? இதனைச் சரி செய்திடத் தேவையான செட் அப் வழியைத் தரவும். நான் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன்.
-சு. மங்களா, சென்னை.
பதில்: உங்களைப் போலப் பல வாசகர்கள் கடிதம் எழுதி உள்ளனர். சிலர் பயர்பாக்ஸ் பிரவுசரில் தரப்பட்டுள்ள, ஹார்ட்வேர் ஆக்ஸிலரேசன் தொழில் நுட்பம் தான் இதற்குக் காரணம் என்றும், அதனை நீக்கினால் சரியாகிறது என்றும் கூறி உள்ளனர். இதனை நீக்க பயர்பாக்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில் Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பழைய மெனுபார் தேவை என அதனை உருவாக்கி வைத்திருக்கும் பயனாளர்கள், Tools > Options எனக் கிளிக் செய்திடவும். ஹார்ட்வேர் ஆக்ஸிலரேசன் பிரிவு Advanced > General என்று சென்றால் கிடைக்கும். இதில் “Use hardware acceleration when available” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பிரவுசரை மீண்டும் இயக்கினால், எழுத்துக்கள் தெளிவாகக் கிடைக்கும்.
ஆனால் ஹார்ட்வேர் ஆக்ஸிலரேசன் செயல்பாட்டினை நிறுத்திவிட்டால், இணையப் பக்கங்கள் இறங்குவது தாமதமாகலாம். மல்ட்டிமீடியா அப்ளிகேஷன்கள் இயங்கும் வேகம் குறையலாம்.
மாற்றாக, எழுத்துக்களைச் சரி செய்திட இன்னொரு வழியும் உள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கென AntiAliasing Tuner என்ற ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கிறது. இது எழுத்துக்களைக் காட்டுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கிறது. இதில் நான்கு வகை தோற்றங் களுக்கான ஆப்ஷன்ஸ் தரப்படுகிறது. இதனைச் சோதித்துப் பார்த்து, நீங்கள் விரும்பும் மாற்றத்திற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம்.

கேள்வி: அலுவலகக் கம்ப்யூட்டரில் சில பெர்சனல் பைல்களை, ஆடியோ, வீடியோ பைல்களைச் சில வாரங்களுக்கு சேவ் செய்து வைத்திட விரும்புகிறேன். இவற்றை மற்றவர்களின் கண்களில் பயன்படாமல் பாதுகாப்பது எப்படி? விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 3 யுடன் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ளது.
-பெயர் தராத வாசகர், திருப்பூர்.
பதில்: நீங்கள் பெயர் தரவில்லை என்றாலும், இந்த கேள்வி பல வகைகளில் கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வந்துள்ளன. எனவே பதில் அளிக்கிறேன். பைல்களை மறைத்து வைக்க சில தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் பாதுகாப்பானவை என்று 100% சொல்ல முடியாது. எனவே விண்டோஸ் சிஸ்டம் தரும் உதவியைப் பார்க்கலாம். விண்டோஸ் (டாஸ்) கட்டளைகளில் Attrib என்ற கட்டளை இதற்கு உதவும். Attrib என்பது ஒரு பைலுக்கு நாம் தரும் பண்புகளைக் குறிக்கும். இவை Read only, Hidden and System attributes என வகைப்படும்.
முதலில் கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட் ரேட்டராக லாக் இன் செய்து கொள்ளுங்கள். மறைக்க வேண்டிய பைல்களை எல்லாம் ஒரு போல்டரில் போட்டு வைக்கவும். அது E: ட்ரைவில் Personal என்ற பெயரில் இருக்கட்டும். எந்த பெயரையும் தரலாம். பின் Start பட்டன் அழுத்தி ரன் பாக்ஸில் CMDஎன டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி (command prompt)கிடைக்கும். இங்கு நீங்கள் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய மறைத்து வைத்திட வேண்டும் என்று திட்டமிடுகின்ற போல்டரின் பெயரை அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். இங்குள்ள எடுத்துக் காட்டின்படி அந்த கட்டளைச் சொற்கள் “attrib +s +h E:\Personal” என இருக்க வேண்டும். (மேற்கோள் குறிகள் டைப் செய்யப்படக் கூடாது) இந்த கட்டளை உங்கள் Data போல்டரை உ டிரைவில் மறைத்து வைத்திடும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம். இவ்வாறு மறைத்து வைத்திருப்பதை “Show hidden files and folders” என்ற கட்டளை கொடுத்தெல்லாம் பார்க்க முடியாது. இதனைப் பின்னர் வேண்டும் என்று எண்ணுகையில்“attrib s h D:\Data” , எனக் கட்டளை கொடுக்க வேண்டும். அப்போது இந்த போல்டர் காட்டப்படும்.

கேள்வி: வை-பி இயக்கம் குறித்து விளக்கம் தரவும். ஒரே மாதிரியான சாதனங்களைத் தான் இந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இணைக்க முடியுமா? வெவ்வேறு வகையான சாதனங்களையும் இணைக்க முடியும் என்றால் வழி என்ன?
-எஸ். சம்சுதீன், கோயம்புத்தூர்.
பதில்: இதற்கான பதிலை முன்பு ஒருமுறை கம்ப்யூட்டர் மலரில் தந்துள்ளேன். இருப்பினும் தாங்கள் கூடுதலாகக் கேட்ட சில விஷயங்களையும் இணைத்து இங்கே விளக்குகிறேன்.
வை-பி (WiFi– Wireless Fidelity) என்பது ஒரு வகையான நெட்வொர்க். தொழில் நுட்ப ரீதியாகச் சொல்வ தென்றால் இதை 802.11 நெட்வொர்க் என அழைப்பார்கள். இந்த நெட்வொர்க்கில் பல டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும். கம்ப்யூட்டர்கள், டிஜிட்டல் கேமராக்கள், மியூசிக் பிளேயர்கள், மொபைல் போன்கள் ஏன் சில இடங்களில் டிவிக்கள் கூட இதில் இயங்கும். எடுத்துக் காட்டாக உங்கள் கம்ப்யூட்டர் வை-பி யில் இயங்கக் கூடியது என்றால் வை-பி நெட்வொர்க் இயங்கும் இடத்தில், இதனை ஹாட் ஸ்பாட் என அழைப்பார் கள், உங்களால் இன்டர்நெட்டில் நுழைந்து இயங்க முடியும். இத்தகைய ஹாட் ஸ்பாட்கள் இன்று விமான நிலையங்கள், காபி ஷாப்கள், இரயில்வே ஸ்டேஷன்கள் போன்ற இடங்களில் உள்ளன. பொதுமக்களுக்கு இந்த இடங்களில் வை-பி இணைப்பு இலவசமாகவே கிடைக்கிறது. இந்த தொழில் நுட்பம் பலர் ஒருவருக்கொருவர் தங்களை இணைத்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது. WiFi எனப்படும் இந்த சொல் தொடர் WiFi Alliance என்ற நிறுவனத்தால் நமக்குக் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து பலவகை டிஜிட்டல் சாதனங்களை வை-பி இணைவு பெற்றது எனச் சான்றளித்து வருகிறது. அதாவது இந்த சான்றிதழ் பெற்ற எந்த ஒரு சாதனமும் அ தேபோல் சான்றிதழ் பெற்ற இன்னொரு சாதனத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக நீங்கள் எச்.பி. நிறுவனத்திடம் இருந்து வை-பி இணைவு தன்மையுடன் கூடிய லேப் டாப் வாங்கியிருக்கலாம். சோனியிடமிருந்து இதே தன்மையுடன் கூடிய டிஜிட்டல் கேமரா வாங்கியிருக் கலாம். இந்த இரண்டும் வை-பி நெட்வொர்க் இயங்கும் இடத்தில் எந்த வயர் தொடர்பும் இன்றி இணைப்பு பெற்று இயங்கும்.

கேள்வி: பயர் வால் பாதுகாப்பு கம்ப்யூட்டரில் உள்ளது. ஆனால் பல வேளைகளில், இதனால், செயல்படுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே வேகமாகச் செயல்பட வேண்டும் என எண்ணுகையில் இதன் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்த முடியுமா? அதற்கான செட்டிங்ஸ் என்ன?
-சே. அன்புக்குமார், மதுரை.
பதில்: பயர்வால் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் வேகத்தை மட்டுப் படுத்துகிறது என்று நீங்கள் எண்ணினால் அதன் இயக்கத்தினை தேவையற்ற போது நிறுத்தி வைக்கலாம்; பின் தேவைப்படும்போது இயக்கலாம். அதற்கான செட்டிங்ஸ் இதோ.
1. Start மெனு சென்று Control Panel செல்லவும்.
2. பின் Network Connections என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. பாப் அப் ஆகும் விண்டோவில் Local Area Connection என்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Properties டேப் மீது கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டேப்களில் Properties டேப் தேர்ந்தெடுத்து பின் Advanced Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இனி பயர்வால் தேவை என்றால் “Protect my computer and network by limiting or preventing access to this computer from the Internet’ என்பதில் செக் செய்திடவும். பயர்வால் தேவை இல்லை என்றால் இந்த டிக் மார்க்கை எடுத்துவிடவும். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.
5. நீங்கள் விண்டோஸ் பயர்வால் பயன்படுத்துபவராக இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள விண்டோஸ் பயர்வால் ஐகானில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் On (Recommended) என்பதனைத் தேர்ந் தெடுக்கவும். பயர்வால் இயக்கம் தேவை இல்லை என்றால் Off (Not Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
satyan - saudiarabia,இந்தியா
02-மே-201102:26:27 IST Report Abuse
satyan sir vanakkam,i am new to computer,i am using DELL vostro ,windows 7 ultimate.i am always watch your computer malar and knows little about computer.sir from last month a problem started in my computer.when i start my computer comes a box like below sir ie,( There was aproblem starting C:\users\user\App Data\Roaming\MICROS~1\STARTM~1\Programs\Start up\SCANQD~11.DLL The specified modul could not be found.) due to this problem ,yahoo messnager and skype programs often closing sir,please say solution sir.
Rate this:
Share this comment
Cancel
Gopukumar - marthandamkanyakumaridistrict,இந்தியா
29-ஏப்-201118:03:23 IST Report Abuse
Gopukumar im mailing from Kuwait.im using pentium4.last few days it showing your local disk c is full with Red signal.but that in side have only 3Gb proerties total space 24 Gb. plz give any solution. bye Harekrishna G_kuwait
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X