இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 நவ
2019
00:00

சல்மான்கானை கவர்ந்த, விஜய்!
தமிழில், விஜய் நடிக்கும் படங்களை, சில தெலுங்கு நடிகர்கள், 'பாலோ' செய்து வருகின்றனர். இந்நிலையில், ஹிந்தி நடிகர்கள், சல்மான்கான், அக் ஷய்குமார் போன்றோரும், விஜய் நடிக்கும் படங்களை, தொடர்ந்து பார்த்து, ரசித்து வருவதாக சொல்கின்றனர். இவர்களில் சல்மான்கான், விஜய் நடித்த, போக்கிரி படத்தின், ஹிந்தி, 'ரீ-மேக்'கில் நடித்தார்; அடுத்தபடியாக அவர் நடித்த, திருப்பாச்சி மற்றும் தெறி படங்களின், ஹிந்தி, 'ரீ-மேக்'கிலும் நடிக்க, ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
— சினிமா பொன்னையா

அதிரடி வேடத்தில், அமலாபால்!
சிந்துசமவெளி படத்தில், மாமனாருடன், 'செக்ஸ்' வைத்துக்கொள்ளும் மருமகள் வேடத்தில் நடித்தார், அமலாபால்; சமீபத்தில், ஆடை படத்தில், ஆடையே அணியாமல் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். அதையடுத்து, தமிழில், புதிய படங்கள் கிடைக்காத நிலையில், ஒரு தெலுங்கு படத்தில், பெற்றோர் கண் முன்னே, சுய இன்பம் செய்யும் பெண்ணாக நடிக்கப் போகிறார். இந்த படத்தை, நந்தினி ரெட்டி இயக்குகிறார். துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை; அழுகிறவளுக்கு துக்கம் இல்லை!
எலீசா

தாய்மொழி பேச தெரியாத, பிரியா ஆனந்த்!
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, வங்காளம், மராத்தி என, ஐந்து மொழிகளில் சரளமாக பேசும், பிரியா ஆனந்துக்கு, தெலுங்கு பேச தெரியாதாம். இத்தனைக்கும், தெலுங்கு அவரது தாய்மொழி. அதைப் பார்த்து, சில தோழியர், கிண்டல் செய்ததை அடுத்து, தற்போது, ஒரு ஆசிரியரை நியமித்து, தாய்மொழியை தீவிரமாக கற்று வருகிறார். கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு!
எலீசா

'ஹாலிவுட்'டை கலக்கப்போகும், காஜல்!
சினிமாவில், தன் எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த, காஜல் அகர்வால், தற்போது, கால் சென்டர் என்றொரு, 'ஹாலிவுட்' படத்தில் நடிக்கிறார். தன், 'கெட் - அப்'பை, 'ஹாலிவுட்' நடிகைகள் பாணியில் மாற்றுவதற்காக, 'டூ -- பீஸ்' கலாசாரத்தை கையில் எடுத்துள்ள, காஜல், தலை அலங்காரம் மற்றும் உடல் கட்டமைப்பை மாற்றியமைக்கும் பயிற்சிகளில் தீவிரமடைந்துள்ளார். இதற்காக, 'ஹாலிவுட்'டைச் சேர்ந்த சில, 'பாடி பிட்னஸ்' கலைஞர்களை அணுகியிருக்கிறார். கிடைக்காத சரக்கு கிடைத்ததைப் போல்!
— எலீசா

கமலின், மருதநாயகம் கனவு கலைகிறது!
கமல்ஹாசனின் கனவு படம், மருதநாயகம். இடையில், தடங்கல் ஏற்பட்டு, அப்படம் கிடப்பில் போடப்பட்டது. இப்போது, மீண்டும் துவங்கயிருக்கும் அந்த படத்தில், கமல் நடிக்கப் போவதில்லையாம். 'இதுபோன்ற சரித்திர படங்களுக்காக, நிறைய மெனக்கெட வேண்டி இருக்கும்; மேலும், அரசியல் பணிகள் இருப்பதால், இனி, என்னால் அதுபோன்ற படங்களில் நடிக்க இயலாது. அதனால், வேறு நடிகர் நடிப்பில், மருதநாயகம் மீண்டும் உருவாகும்...' என்கிறார். இந்நிலையில், விக்ரம் நடிக்க இருப்பதாக, பேச்சு அடிபடுகிறது.
— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!
அந்த, ஆங்கிலோ - இந்தியன் நடிகை, தன் அபிமான இயக்குனர்களின் மார்க்கெட் கவிழ்ந்து விட்டதால், பட வாய்ப்புகளுக்காக, 'அப்டேட்'டில் இருக்கும் சில இயக்குனர்களை துரத்துகிறார். அதோடு, தான் இங்கிலீஸ்காரி என்பதை நிரூபிக்கும் வகையில், தன்னை சந்திக்க வருவோருக்கு, காபி, டீ கொடுத்து உபசரிப்பதற்கு பதிலாக, மேல்நாட்டு சோம பானங்களைத்தான் கொடுக்கிறார். இதனால், அம்மணியை மரியாதை நிமித்தமாக சந்திக்க செல்வோர் கூட, வெளியே வரும்போது, போதையில் தட்டுத்தடுமாறியபடியே வருகின்றனர். அதேசமயம், போதை ஆசாமி இயக்குனர்களோ, அளவுக்கு அதிகமாக, அம்மணியின் அன்புக்கு பாத்திரமாகி, குடி கும்மாளமென்று கூத்தடித்து விட்டுத்தான், வெளியில் தலை காட்டுகின்றனர்.
'ஹாய், ஆண்ட்ரியா... உனக்கு பதவி உயர்வு கிடைத்ததற்கு, 'பார்ட்டி' வைக்கிறதா சொன்னியே... எங்க, எப்போன்னு நம்ம, 'செக் ஷன்' பசங்க, காத்திட்டு இருக்காங்க. ஆனா, உன் பிறந்தநாளுக்கு வெச்ச, உ.பா., 'பார்ட்டி' மாதிரி வெச்சு, சொதப்பிடாதடி...' என்று எச்சரித்தாள், சக தோழி.

சினி துளிகள்!
* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் 64வது படத்தில், முதல் முறையாக ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அவ்ளோதான்!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X