அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2019
00:00

அன்பு சகோதரிக்கு —
நான், 40 வயது ஆண். திருமணம் ஆகி விட்டது. ஒரு மகள் இருக்கிறாள். சீட்டு பிடிக்கும் தொழிலில் இருந்தேன். என் மனைவி, அரசு பள்ளி ஆசிரியை. எனக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. அனைவருக்கும் திருமணமாகி, தனித்தனியாக உள்ளனர். என் மனைவி, அவர் வீட்டுக்கு ஒரே மகள்.
இரண்டு ஆண்டுக்கு முன், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. 10 லட்சம் ரூபாய்க்கு சீட்டு போட்ட ஒருவர், சீட்டை எடுத்து, தொகையை கட்டாமல் தலைமறைவாகி விட, குடும்பம் நிலை குலைந்தது.
என்னிடமிருந்த சேமிப்பு பணம், புறநகரில் வாங்கி போட்டிருந்த நிலம் விற்ற பணம் எல்லாம் சேர்த்து, ஐந்து லட்சம் ரூபாய் வரை திரட்ட முடிந்தது. மீதமுள்ள, ஐந்து லட்ச ரூபாய்க்கு, உடன் பிறந்தவர்களிடமும், பெற்றோரிடமும் கேட்டேன்; அவர்களால் தர இயலவில்லை.
என் மனைவியின் பெற்றோர், கொடுத்து உதவினர். சீட்டு போட்டவர்களுக்கு கடனை அடைத்து, ஒரு வழியாக கரையேறினேன். தொழிலும் இல்லாமல், வேறு வேலையும் கிடைக்காமல், உள்ளூரிலேயே இருக்கும், மாமனாரின் ஆலோசனைபடி, அவர்கள் வீட்டோடு மாப்பிள்ளை ஆனேன்.
அவர்கள் செய்த உதவிக்கு கைமாறாக, மளிகை பொருட்கள் வாங்கி தருவது முதல், மின் கட்டணம் கட்டுவது வரை, அனைத்து வேலைகளையும் கவனிக்க துவங்கினேன். பின்னாளில், அவர்கள் வீட்டு வேலைக்காரனாக, அடிமையாக மாறி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.
மகள் கூட மதிக்காமல், என்னிடம் வேலை வாங்குகிறாள். பெற்றோரோ, உடன் பிறந்தவர்களோ எனக்கு உதவ முன் வரவில்லை.
இப்படியே எத்தனை நாட்கள் ஓட்ட முடியும். ஏதாவது கடை வைத்தோ, ஆட்டோ வாங்கி ஓட்ட நினைத்தாலும், மீண்டும் மாமனாரிடமோ, மனைவியிடமோ தான் பணம் கேட்க வேண்டும். அதை நினைத்தாலே குலை நடுங்குகிறது.
இந்த இக்கட்டான நிலையிலிருந்து எப்படி மீள்வது.
இப்படிக்கு,
உங்கள் சகோதரன்.


அன்பு சகோதரருக்கு —
ஏலச் சீட்டை நடத்துவதும், எடுப்பதும் ஒரு சூதாட்டத்திற்கு சமம்.
அதிக உழைப்பில்லாமல் பணத்தை சம்பாதிக்க நினைக்கும் சூதாடி, நீங்கள். 40 வயது வரை, எந்த வருமானம் வரும் பணியிலும் இல்லாமல், இளமையை தொலைத்து விட்டீர். உங்களின் இரு தம்பிகளுக்கும், ஒரு தங்கைக்கும் திருமணமாகி, தனித்தனி குடும்பங்களாக உள்ளனர். அவர்கள் எப்படி, ஐந்து லட்ச ரூபாய், வட்டியில்லா கடன் தருவர்.
பெண்ணை கட்டி கொடுத்த பாவத்திற்காக, மனைவியின் பெற்றோர், உங்களுக்கு உதவி இருக்கின்றனர். உங்களை, வீட்டு வேலைக்காரனாக, அடிமையாக இருக்க, அவர்களா வலுக்கட்டாயப்படுத்தினர்... இரண்டு ஆண்டுகளாக, எந்த வேலைக்கும் போகாமல், விரும்பி, வீட்டு மாப்பிள்ளையாக இருக்கிறீர்.
உங்கள் கடிதத்தில், நீங்கள் என்ன படித்துள்ளீர் என்பதை குறிப்பிடவில்லை. உங்களது கல்வித்தகுதி,
பிளஸ் 2 'பாஸ்' அல்லது 'பெயில்' ஆக இருக்கும் என, யூகிக்கிறேன்.
நீங்கள் சுயதொழில் செய்ய, பிறர் உதவியை எதிர்பார்த்து ஏன் நிற்கிறீர்...
எந்த முதலீடும் தேவைப்படாத, ஏதாவது ஒரு பணிக்கு போங்கள். சொந்த காலில் நின்று, மாதம், 8,000 - 10 ஆயிரம் ரூபாயோ சம்பாதியுங்கள். மனைவியும், அவரது வீட்டாரும், தம்பி - தங்கை வீட்டாரும், உங்களை மதிப்பர்.
முதலீடு தேவைப்படும் எந்த பணியும், உங்களுக்கு உகந்தது அன்று. உதவிகள் செய்வது, ஒரு வழி பாதை அல்ல. நீங்கள் நன்றாக இருந்த காலத்தில், உங்களின் தம்பிகளுக்கும் - தங்கைகளுக்கும் என்ன உதவி செய்தீர்?
மிக மோசமான ஆட்கொல்லி, சுயபச்சாதாபம். மனைவி மற்றும் மகள், மதிக்கவில்லை; பெற்றோரும், உடன் பிறந்தோரும், உதவவில்லை; சுயதொழில் செய்ய, மனைவியிடமோ, மாமனாரிடமோ தான், கை நீட்ட வேண்டியுள்ளது. இந்த மாதிரியான புலம்பல்களை எல்லாம், இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு, குடி பழக்கம் இருந்தால், அப்பழக்கத்தை தலை முழுகுங்கள். உடல் எடை அதிகமிருந்தால், உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள்.
உங்களின் அறிவுக்கும், கல்வி தகுதிக்கும் ஏற்ப, முதலீடு தேவைப்படாத எந்த பணி செய்யலாம் என்பதை மனைவியுடன் விவாதியுங்கள்.
பத்து லட்ச ரூபாய், ஏலச் சீட்டை எடுத்தவர், பணத்துடன் தலைமறைவானார் இல்லையா, அவர் மீது காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறீர்களா... கொடுத்திருந்தால், அவ்வப்போது காவல் நிலையம் சென்று, காவல் துறை நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.
தலைமறைவான நபரை, கண்டுபிடித்திருந்தது என்றால், நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். ஏமாற்று பேர்வழியிடமிருந்து எவ்வளவு பணத்தை திருப்பி வாங்க முடியுமோ வாங்குங்கள்.
எதிர் மறை எண்ணங்களை துாக்கி கடாசி விட்டு, புது மனிதனாகுங்கள் சகோதரரே...
ஐந்து ஆண்டுகள் உழைத்து, சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தில், ஆட்டோ வாங்கி ஓட்டுங்கள். பகல் பொழுதில், வேலை; இரவில், ஆட்டோ ஓட்டுதல். இரட்டை வருமானம், உங்களை மிடுக்கன் ஆக்கும். வாழ்த்துக்கள்!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asagh busagh - Munich,ஜெர்மனி
14-நவ-201910:56:26 IST Report Abuse
Asagh busagh நம் நாட்டில் பெரும்பாலும் அடுத்தவன் மேல் சவாரி செய்ய தான் எல்லா பயலுவளும் அலையுறான். எல்லாத்துக்கும் யாரவது உதவி செய்யணும்னு எதிர்பார்ப்பு. திருமணம் மூலம் வசதியாகிவிட மானம்கெட்டத்தனமா பேராசை. இதுனால தான் பலபேருக்கு தன்மானமே இல்ல, மேலும் அரசியல் பன்னாடைகிட்ட கை நீட்டி தலையை சொறிஞ்சு இலவசத்த வாங்குற பழக்கம். யாருகிட்டயும் கெஞ்சாம கிடைத்த வேலைய பார்த்து முன்னேறு. மனைவி, குடும்பத்தோடு மகிழ்ச்சியா இரு. மற்றவை எல்லாம் போக போக சரியாகிடும்.
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
12-நவ-201917:59:07 IST Report Abuse
M Selvaraaj Prabu //ஏலச் சீட்டை நடத்துவதும், எடுப்பதும் ஒரு சூதாட்டத்திற்கு சமம்.// //சீட்டு பிடிப்பது எல்லாம் ஒரு தொழிலா?// ஏன் இந்த கொலை வெறி? எந்த தொழில் செய்தாலும் அதில் நம்பிக்கை நாணயம் வேண்டும். இவரைத்தான் ஒருவன் ஏமாற்றினானே தவிர இவர் ஏமாற்ற வில்லையே? எப்படியோ, கடனை உடனை வாங்கி பணத்தை திருப்பி கொடுத்து இருக்கிறார். ஒருவர் அறிவுரை கேட்டால், அறிவோடு அறிவுரை சொல்லுங்கள். ஏமாந்தானே என்று போட்டு தாக்காதீர்கள். என்னமோ இவர்கள் எல்லாம் சுத்த யோக்கியர்கள் என்று நினைப்பு. உங்களை பற்றி உங்கள் வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் கேட்டால்தான் தெரியும் உங்கள் லட்சணம்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
14-நவ-201908:36:11 IST Report Abuse
Girijaசீட்டு பிடிப்பது எல்லாம் ஒரு தொழிலா? என்று கேட்டவர் தேசிய வங்கியின் சேர்மன், டெல்லிலீலீலீலா வேல செஞ்சு அங்க போரடிச்சு இனிமே அங்க ஒன்னும் செய்யறதுக்கு கிழிக்கறதுக்கு இல்லைன்னு, இந்த மண்ணை மாத்தலாமேன்னு, நாலு சாதிசனத்தை பார்க்கலாமேன்னு பொறந்த ஊருக்கு வந்திருக்காராம்,...
Rate this:
Cancel
sumithran - singapore,சிங்கப்பூர்
12-நவ-201914:14:46 IST Report Abuse
sumithran மிடுக்கன்..? அர்த்தம் என்ன..?
Rate this:
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
15-நவ-201903:49:37 IST Report Abuse
.Dr.A.Josephsmart...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X