வாண்டூஸ் ஆரோக்கியம் கற்கலாம் | செய்தி கட்டுரைகள் | News Stories | tamil weekly supplements
வாண்டூஸ் ஆரோக்கியம் கற்கலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஏப்
2011
00:00

துள்ளித்திரியும் பள்ளிப் பருவம் தான் கற்பதற்கு ஏற்ற பருவம்.
பசுமரத்து ஆணி போல், பார்ப்பதும், கேட்பதும், பதிந்து போவதும் இந்த வயதில் தான். எதிர்கால வாழ்க்கைக்கு பல்திறன்களை வளர்த்துக் கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. கோடைவிடுமுறையை குதூகலமாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கு மதுரையில் நடக்கும் பயிற்சி முகாம்கள்: எத்தனை நாள் தான் மற்றவற்றையே தெரிந்து கொள்வது? ஒரு மாறுதலுக்கு நம்மைப் பற்றி, நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துணவுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா? வழிகாட்ட அழைக்கிறது, மதுரை மனையியல் கல்லூரி. மதுரை ஒத்தகடை, விவசாயக் கல்லூரி வளாகத்தில் உள்ளது மனையியல் கல்லூரி. "காய்கறிகளா... சீ... பிடிக்காது' என்று சொல்லும் உங்கள் செல்லங்களுக்கு, அவற்றின் மகத்துவத்தை அழகாக விளக்கி சாப்பிட வைத்து விடுவர் பேராசிரியர்கள். ஆடல், பாடல், இசையுடன் கூடிய பயிற்சி மற்றொரு முக்கிய அம்சம். அப்புறம்... சிறுதானிய உணவுகள், வெண்பொங்கல், நூடுல்ஸ், உணவை "பேக்கிங்' செய்தல் பற்றியும் குட்டீஸ்களுக்கு கற்றுத் தருகின்றனர். பயிற்சிக்கு பின், உங்களுக்கும் சமைத்து கொடுக்க ஆரம்பித்து விடுவர்.
மே 9 முதல் 11 வரை, மூன்று நாட்களுக்கு கட்டணம் 300 ரூபாய். 10 முதல் 15 வயது வாண்டூஸ் பங்கேற்கலாம்.
பேராசிரியர் பானுமதியை 94422 19710 லும், உணவியல் நிபுணர் கலைச்செல்வனை 97871 50703 லும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X