என் பெயர் அறிவு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2019
00:00

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர், அரசு மேல்நிலைப்பள்ளியில், 1993ல், 6ம் வகுப்பு படித்தேன். எனக்கு ஆண்களுக்கான பெயரை, சூட்டிவிட்டனர் பெற்றோர்.
முதல் நாள் தமிழ் பாடவேளையில், வகுப்பில் பேசியதாக, என் பெயரை கரும்பலகையில் எழுதியிருந்தான் மாணவர் தலைவன். அதை வாசித்து, 'எழுந்து நில்...' என்றார் தமிழாசிரியை.
எழுந்து நின்ற என்னை பார்த்தவர், 'பையன் பெயரை தானே கூறினேன்... நீ ஏன், எழுந்திருக்கிறாய்...' என்றார்.
அது தான் என் பெயர் என்பதை கூறினேன்.
சக மாணவ, மாணவியர் ஏளனமாக சிரித்தனர்; மிகவும் அவமானமாக உணர்ந்தேன்.
அவர்களை அதட்டிய ஆசிரியை, 'படிப்பதற்கு பெயர், தடையே இல்லை; இந்த பெயர், வருங்காலத்தில் புகழை பெற்றுத் தரும்...' என்று, ஆறுதல் கூறினார்.
நன்றாக படித்து, அறிவியல் ஆசிரியையாக பணிபுரிகிறேன். இப்போது, 27 வயதாகிறது; அந்த சம்பவம், மனதை விட்டு மறைய மறுக்கிறது.
- பெயரை விரும்பாத வாசகி, திண்டுக்கல்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MUTHUKRISHNAN S - Sankarankovil,இந்தியா
16-நவ-201916:17:46 IST Report Abuse
MUTHUKRISHNAN S அருமையான பெயர் தான் உங்களுக்கு இருக்கும். வருத்தப்படவே வேண்டாம். இசக்கி என்ற பெயரை ஆண்கள் கூட வைத்திருக்கிறார்கள். முத்து என்ற பெயர் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பெயர் தான். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூட தவிடு என்ற பெயருடன் 15 வயது கொண்ட மாணவன் என்னிடம் பாடம் பயின்றான். பெயரில் என்ன இருக்கிறது? மேற்கிந்திய தீவு நாடுகளில் உள்ள பெயர்கள் சில கூறுகிறேன். இன்னும் புரியும். பூரன், நர்ஸ், ஹோல்டர், ஹோப். இன்னும் பல. எனவே மகிழ்ச்சியுடன் பெயரை வெளிப்படுத்துங்கள்.
Rate this:
Share this comment
MUTHUKRISHNAN S - Sankarankovil,இந்தியா
17-நவ-201909:34:39 IST Report Abuse
MUTHUKRISHNAN Sஉங்கள் வயது 37 தானே. மலரில் 27 என்று அச்சாகியுள்ளது. ஏனென்றால் நான் 1993ல் ஒன்பதாம் வகுப்பு படித்தேன். தற்போது என் வயது 40. என்னுடைய ஆறாம் வகுப்பு புத்தகத்தில் பெயரில் என்ன இருக்கிறது? என்ற துணைப்பாடம் இருந்தது. அதில் மண்ணாங்கட்டி என்ற பெயருடைய ஒருவன் வருத்தப்படுவதாகவும் பின்பு கோடீஸ்வரன் என்ற பெயருடைய ஒருவன் பிச்சை எடுப்பதையும் கண்ணாயிரம் என்ற பெயருடையவனுக்கு இரண்டு கண்களும் இருக்காததையும் அறிந்த பின்பு தன் பெயரை பற்றி கவலைப்பட மாட்டான். நாம் நல்லதை மட்டுமே செய்வோம். நம் பெயரை உச்சரிப்பதில் எல்லோரும் பெருமை அடையும்படி செய்வோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X