நீர்மாவும் தேவதையும்! (1)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2019
00:00

நீர்மா, நல்ல அழகி. நன்றாக படித்தவள்; அவளை மணம்புரிய, பலர் முன் வந்தனர். அத்தனை பேரையும், ஒதுக்கி விட்டாள்.
'அரச குமாரானைத் தான் மணந்துக் கொள்வேன்; அவன், எப்போதும் பட்டாடை அணிந்திருப்பான். அவனிடம், ஒரு அழகிய வண்டி இருக்கும். அதன் சக்கரங்கள், தங்கத்தால் ஆனவை. அவை, பளபளக்கும் நீல வண்ண துணியால் மூடப்பட்டிருக்கும்' என்று கனவு கண்டாள். அது பற்றி, பெற்றோரிடம் கூறி வந்தாள்.
ஒரு நாள் -
வெண்குதிரைகள் பூட்டிய, அழகிய வண்டி வரும் ஓசைக் கேட்டது. ஜன்னல் வழியாகப் பார்த்தாள். வண்டிச் சக்கரங்கள், அவள் கனவில் வந்தது போலவே, தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. தகதகக்கும் பட்டாடை அணிந்த, அரச குமாரனைப் போலிருந்தவன், அதிலிருந்து இறங்கினான்.
என்ன ஆச்சரியம்... அவன், நீர்மா வீட்டிற்குள் நுழைந்தான்; அவளது தந்தை முன் வந்து, மிகவும் பணிவுடன், 'நான் ஒரு அரச குமாரன்; நீர்மாவை மணந்து கொள்ள விரும்புகிறேன்; என் விருப்பத்தை, அவளிடம் தெரிவித்து, சம்மதத்தை கூறுங்கள்...' என்றான்.
தாமதிக்காமல் தகவலை, மகளிடம் கூறினார் தந்தை.
'அரச குமாரனை மணக்க முழு சம்மதமே...' என்றாள்.
ஆடம்பர மண்டபத்தில், திருமணம் நடந்தது; மணமக்கள், அழகிய வண்டியில் அமர்ந்தனர். சாட்டையால் அடிக்காமலே, குதிரைகள் தாவி ஓடின; காற்றில் பறப்பது போல் அந்த வண்டி பறந்தது.
நீர்மாவின் கனவு நனவாகியது. இவ்வளவு சீக்கிரம், கனவு பலிக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
இரவாகியது. அந்த அழகிய வண்டியின் தங்கச் சக்கரங்களிலிருந்து மின்னிய ஒளி, வழியெங்கும் படர்ந்திருந்த இருளை விலக்கியது.
அரச குமாரனின் மாளிகை முன், வண்டி நின்றது; அந்த மாளிகையைக் கண்டு, நீர்மா வியந்தாள். அறைகள் விசாலமாக இருந்தன. முற்றத்தில் நின்றால், வானில் நிலா பவனி வருவது தெரிந்தது. கட்டில்கள், மெத்தைகள், கண்ணாடிகள், அழகு சாதனப் பொருட்கள், அவளைக் கவர்ந்தன. அந்த ஆடம்பரக் கட்டிலில் படுத்தவுடனே, துாக்கம், கண்களைத் தழுவியது.
காலையில் விழித்ததும், ஒரு கோப்பை நிறைய பால் வழங்கப்பட்டது; எல்லாமே திருப்தி; அவளுக்கு ஒரு குறையுமில்லை; அதிர்ஷ்டக்காரி, கொடுத்து வைத்தவள்.
ஒரு சின்ன குறை, அவள் நெஞ்சை லேசாக உறுத்தியது. அரச குமாரன், அவளைப் பிரியாமல், எந்நேரமும் அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவனோ, வேட்டைக்குப் போவதாக சொல்லி, வாரத்தில், நான்கு நாட்கள் சென்று விடுவான்.
ஒரு நாள் -
பால் குடித்தபடியே, படுக்கையில் அமர்ந்து, சிந்தித்தபடியிருந்தாள் நீர்மா; கட்டிலின் கீழ் ஓடிய ஒரு எலி, படுக்கையின் மேல் தாவியது. அதை விரட்டினாள். அந்த எலியோ, ஆவல் பொங்கும் விழிகளால், பால் கோப்பையை பார்த்தது.
அந்த எலியை தாக்க, கையை உயர்த்திய போது, 'நான், மிகவும் பசியோடிருக்கிறேன்! கொஞ்சம் பால் கொடுத்து உதவு; கடவுள் உன்னை ஆசிவர்திப்பார்...' என்றது.
நீர்மாவுக்கு மிகவும் இளகிய மனம். பால் கோப்பையை, எலியின் முன் வைத்தாள்.
'மடக்... மடக்...' என, குடித்த பின், மகிழ்ந்து ஓடியது.
தினமும் காலையில், நீர்மா அன்புடன் கொடுக்கும் பாலை, குடித்து வந்தது எலி.
வேட்டைக்குச் சென்றிருந்த நீர்மாவின் கணவன், அன்றிரவு, நண்பர்களை அழைத்து வருவதால், சுவை மிக்க விருந்து தயாரித்து வைக்க தகவல் அனுப்பி இருந்தான்.
உற்சாகத்துடன் எழுந்த நீர்மா, 'விருந்து ஏற்பாடுகளை கவனிக்க போகிறேன்...' என்றாள்.
இதைக் கேட்ட எலி, 'நீ இரக்கமும், பண்பும் உள்ளவள்; என் பசிக்கு உணவளித்தாய். இப்போது, நான் கூறுவதை சற்று கவனமாக கேள். இன்று நள்ளிரவில் விழித்தெழுந்து, சாவித் துவாரத்தின் வழியாகப் பார்; சில விஷயங்கள் புரியும். மீண்டும் நாளை காலை சந்திக்கலாம்...' என்று கூறி ஓடியது.
எலியின் கூற்றை சிந்தித்தபடி இருந்தாள் நீர்மா.
அன்றிரவு, நீர்மாவின் கணவன், நண்பர்களோடு வீட்டுக்கு வந்தான்; அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் அவளை அழைத்து, 'வெகுநேரமாகி விட்டது; களைப்பாய் இருக்கிறாய்... போய் துாங்கு; நண்பர்களோடு கொஞ்சம் பொழுதை போக்க போகிறேன்...' என்று கூறி சென்றான் அவள் கணவன்.
நீர்மா படுக்கையறைக்கு வந்தாள்; துாக்கம் வரவில்லை; நள்ளிரவில், சாவி துவாரம் வழியாகப் பார்த்தாள்.
நிலா ஒளி பளபளத்தது. முற்றத்தில், அவளது கணவன், நண்பர்களுடன் ஆடிக் கொண்டிருந்தான். நீண்ட தலைமுடி உடலை மறைத்திருந்தது; தரையை தொட்டபடி வால் இருந்தது; அவர்கள் வவ்வால் போல் இருந்தனர். அவை மனிதர்களல்ல; வவ்வால் வடிவில் இருந்த அரக்கர்கள்.
என்ன கொடுமை... நீர்மாவை மணம் புரிய, எத்தனையோ இளைஞர்கள் போட்டியிட்டனர். அவர்களை எல்லாம் உதாசீனப்படுத்தியவளை, இளவரசன் வடிவில் வந்து, ஏமாற்றி மணந்து விட்டதே வவ்வால் அரக்கன்.
அவளுக்கு தலைச்சுற்றியது. பயத்தில் உடல் நடுங்கியது. வவ்வால் அரக்கர்கள், ஆரவாரத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.
'நாம், எப்போது, உன் மனைவியை அடித்து சாப்பிடுவது...'
'இப்போது வேண்டாம்... அவள், நன்றாக உண்டு, கொழுக்கட்டும்...'
இதைக் கேட்டு, நீர்மாவுக்கு பயத்தால் ரத்தம் உறைந்தது போல் இருந்தது.
வாழ வேண்டிய பருவத்தில், மரண ஓலை அனுப்ப அரக்கர்கள் அழைப்பு விடுக்கின்றனர். படுக்கையில் விழுந்து சிந்தித்தாள்; அவள் கணவனாக இருந்த வவ்வால் அரக்கன், 'அவள் நன்றாக உண்டு கொழுக்கட்டும்' என்று சொன்ன வார்த்தைகள், காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
நீர்மா, மிகவும் மெலிந்து இருந்தாள்; உடலில், சதைப்பிடிப்பு இல்லை; அவள் நன்றாக சாப்பிட்டு கொழுத்து மெழுகுப் பொம்மை போல ஆனதும், அடித்து, வறுவலும், குழம்பும் செய்து சாப்பிட காத்திருந்தனர் வவ்வால் அரக்கர்கள்.
- தொடரும்...

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X