அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2019
00:00

சரியாகும் சங்கடம்!
உணவுகளில், சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்கள், பூண்டு மற்றும் வெங்காயம். இவை, சுவையை மட்டும் அதிகரிப்பதில்லை; ஆரோக்கியத்தையும் அள்ளித்தருகின்றன.
ஆரோக்கிய துாதராக இருந்தாலும், பச்சையாக உண்டால், வாயில் ஒருவகை விரும்பத்தகாத நாற்றம் வீசும். எதிரில் வருபவரையோ, உரையாடுபவரையோ, அந்த வாசனை சங்கடப்படுத்தும்.
இதை, எளிதாக சரி செய்யலாம். அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்...
பூண்டு மற்றும் வெங்காயத்தில் வேதிப்பொருட்களின் வினை தான், விரும்பத்தகாத நாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 'அல்லிசின்' என்ற பொருள் உள்ளது. இது தவிர, 'மெதில் சல்பைட்' மற்றும் 'சிஸ்டைன் சல்பாக்சைடு' போன்ற வேதிப்பொருட்களும் உள்ளன.
பூண்டு, வெங்காயத்தை வெட்டும் போது, மெதில் சல்பைட் வெளியேறும்; பச்சையாக சாப்பிட்டால், இந்த வேதிப்பொருள், ரத்தத்தில் கலந்து, வினைபுரிந்து விரும்பத்தகாத நாற்றத்தை ஏற்படுத்தும்.
இவற்றை சாப்பிட்ட, 15 நிமிடங்களுக்கு பின், கொழுப்பு நீக்கிய பாலை குடித்தால், வாய் துர்நாற்றம் நீங்கும் என்று, ஊட்ட சத்து நிபுணர்கள் பரிந்துரைந்துள்ளனர்.
பூண்டு, வெங்காயம் சாப்பிட்ட பின், ஒரு ஆப்பிள் சாப்பிடலாம். ஆப்பிளில் உள்ள இயற்கை என்சைம், வேதிவினை புரிந்து, சல்பரின் வீரியத்தை குறைக்கும்; இதனால், விரும்பத்தகாத நாற்றத்துக்கு பதிலாக நறுமண வாசனை வீசும். இது, பல் மருத்துவர்கள் தரும் பரிந்துரை.
சாப்பிட்ட பின், வெதுவெதுப்பான நீர் குடித்தால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்; உடலில் தங்கியிருக்கும் நச்சுப்பொருட்களும் வெளியேறும்.
எலுமிச்சையில் உள்ள, சிட்ரிக் அமிலம், ஆன்டி பாக்டீரியல் பண்பு கொண்டது. இது, பூண்டு, வெங்காயத்தால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை விரட்டும். எலுமிச்சை சாறுடன், சுடுநீர் கலந்து, வாய் கொப்பளித்தால் நிவாரணம் கிடைக்கும்.


காக்கும் பாரம்பரியம்!
சளி, இருமலை போக்க, முன்பெல்லாம் வீட்டு வைத்தியம் கை கொடுத்தது. இன்று, லேசான தும்மல் வந்தாலே மருத்துவரிடம் ஓடுகிறோம். இந்திய மருத்துவ அறிவுரைப்படி, பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு மாறினால், உடல் நலத்தை சுலபமாக பேணலாம்.
இந்திய மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவுகளை உள்ளடக்கியது. இந்த மருத்துவத்துக்கு, 2,000 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் உண்டு.
பாரம்பரியத்தோடு, விஞ்ஞானமும் சேர்ந்தால், ஆரோக்கியம் நிச்சயம்.
ஏற்கனவே தயாரித்து, குளிர்சாதனப் பெட்டியில் அடைத்த குப்பை உணவை தவிர்த்தால், தொப்பையில்லாமல் வாழலாம். பாரம்பரிய உணவுகளை, அன்றாடம் சாப்பாட்டு மேஜைக்கு கொண்டு வர வேண்டும். சித்த மருத்துவம், 'உணவே மருந்து' என வலியுறுத்துகிறது. பாரம்பரிய உணவை பரிந்துரைக்கிறது.
இடுப்பு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, மிகை கொழுப்பு போன்றவற்றை, ஆயுர்வேத மருத்துவம் தீர்த்து நல்ல பலனை தரும்.
உடல், மனதை துாய்மையாக வைத்துக் கொள்வதே நலத்துக்கான அடிப்படை. இந்த சித்தாந்தம் புரிந்து விட்டால், நோய் வருவதை தடுக்கலாம்.
தமிழகத்தில், டெங்கு காய்ச்சலை தடுப்பதில், ஆங்கில மருத்துவமுறை கைவிரித்த போது, பாரம்பரிய மருத்துவத்தின் கொடையான, நில வேம்பு குடிநீரை வினியோகம் செய்தது அரசு நிர்வாகம். டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்தது. ஆரோக்கியம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
எளிய, பாரம்பரிய உணவு பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வோம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X