விந்தை பெருங்கடல்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2019
00:00

இயற்கையின் வரப்பிரசாதங்களில், பெருங்கடல்கள் விந்தையானது. உலகில், ஐந்து பெருங்கடல் உள்ளதாக பகுக்கப்பட்டுள்ளது. அவை, பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் தென் முனைக்கடல் என்பன.
பூமியில் உள்ள, 71 சதவீதம் தண்ணீர், பெருங்கடல்களில் தான் உள்ளது. இவை, ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. உலக நீரியல் நிறுவனம், 1953ல் பகுத்தது. பின், எல்லைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

பசிபிக்!
கிழக்கே அமெரிக்கா, மேற்கே ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களை எல்லையாக கொண்டது. புவியில், 30 சதவீதம் பரப்பில் உள்ளது. உலகில் மிகப்பெரியதும், அழகு மிக்கதும் இந்த பெருங்கடல்.
'பசிபிக்' என்பது லத்தீன் மொழிச் சொல்; இதன் பொருள் அமைதி. இந்த பெயரை சூட்டியவர், ஐரோப்பாவின் போர்த்துகீசிய மாலுமி பெர்டினான்ட் மெகல்லன்.
இதன் சராசரி ஆழம், 38 ஆயிரம் மீட்டர். மிகவும் ஆழம் மிக்கது, 'தி சேலஞ்சர் டீப்' என்ற பகுதி. சேலஞ்சர் என்ற கப்பல், 1875ல், இந்த பகுதியை கண்டறிந்தது.
உலகில், 75 சதவீதம் எரிமலைகள், பசிபிக்கடற்கரையை ஒட்டியே உள்ளன. அவை, ஒரு வட்டம் போன்ற வடிவமைப்பில் உள்ளன.
அதிகளவு மீன் கிடைப்பதும் இங்கு தான். வெப்ப அளவு, இடத்துக்கு இடம் மாறுபடும். சில பகுதிகளில் வெதுவெதுப்பாகவும், தென்துருவ அன்டார்டிகா பகுதியில், மிக குளிராகவும் இருக்கும். மிக அதிக பவளத்திட்டுகளைக் கொண்டது இந்த பெருங்கடல்.

அட்லாண்டிக்!
வட, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களை எல்லைகளாக கொண்டது. உலகின், இரண்டாவது பெருங்கடல். கிரேக்க புராணங்களில், டைட்டன் என்ற வனக் கடவுளுக்கு, அட்லாண்டிக் என்று பெயர். பூமி பரப்பில், ஐந்தில் ஒரு பகுதியில் இது அமைந்து உள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில், நீண்ட மலைத் தொடரை காணலாம்.
உலகின், 29 சதவீதம் அளவு தண்ணீர், இங்கு தான் உள்ளது. தென் அட்லாண்டிக்கில், பெரிய அலைகளும், கடும் காற்றும் எப்போதும் இருக்கும். அமெரிக்க வீராங்கனை எமெலியா எர்ஹார்ட் என்ற பெண், 1928ல் இந்த கடலை விமானத்தில் தனியாக பறந்து சாதனை படைத்தார். டைட்டானிக் கப்பல், 1912ல் பனிபாறையில் மோதி மூழ்கியது இங்கு தான்.

இந்திய பெருங்கடல்!
வடக்கே ஆசியா, மேற்கே ஆப்பிரிக்கா, கிழக்கில் ஆஸ்திரேலியா, தெற்கில் அன்டார்டிகாவை எல்லையாக கொண்டது. உலகின், மூன்றாவது பெருங்கடல். பூமியில், ஐந்தில் ஒரு பகுதியில் உள்ளது. 18 ஆசிய நாடுகள், 18 ஆப்பிரிக்க நாடுகள், 57 தீவுக் கூட்டங்களை இணைத்துள்ளது. எரிமலைகளுக்கு பஞ்சமில்லை.
பூமத்திய ரேகையை ஒட்டி உள்ளதால், தண்ணீர் எப்போதும் வெதுவெதுப்பாக இருக்கும். உலகின், 40 சதவீத எண்ணெய் வளம், இங்கு தான் உள்ளது. இதன் சராசரி ஆழம், 3,890 மீட்டர்.

ஆர்க்டிக்!
பூமியில் வடக்கு, அரை உருண்டை பகுதியில் உள்ளது. ஆர்க்டிக் வட்டம், வட துருவ பகுதிகள் மற்றும் அமெரிக்காவை எல்லைகளாக கொண்டது. ஜெல்லி மீன், திமிங்கலம், சீல், வால்ரசஸ் போன்ற உயிரினங்கள் இங்கு வசிக்கின்றன. பல பகுதிகளில் ஆழம் குறைவு.
ஆர்க்டிக் வட்டத்துக்குள் அமைந்துள்ளதால், தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். பெரும் பகுதியை, பனி மூடியிருக்கும்.

தென்முனைப் பெருங்கடல்!
எல்லையே வகுக்கப்படாத பெருங்கடல் இது. குளிர்காலத்தில், பனிக்கட்டியாகி மிதக்கும். உலகின், 90 சதவீத பனிக்கட்டி, அன்டார்டிகாவில் தான் உள்ளது. இந்த பகுதியில் பெய்யும் மழை அளவை விட, மிகவும் வறண்ட சகாரா பாலைவனத்தில் மழை பொழிவு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.
பனிக்கட்டிக்கு அடியில் உள்ள தண்ணீரில், 'கிரில்' என்ற ஒரு வகை பூச்சி வாழ்கிறது. இந்த கடலின் சராசரி ஆழம், 5,000 மீட்டர். அதிக படச ஆழம், 9,235 மீட்டர். இங்குள்ள பனிபாறை உருகினால், கடல் மட்டம், 65 மீட்டர் உயரும் அபாயம் உள்ளது.

குழந்தைகளே... கடலில் பல்லாயிரம் வளங்கள் உள்ளன. இவை சார்ந்து கவனம் செலுத்தி படித்தால், பெருந்தொழில்கள் செய்து வாழ்வில் முன்னேறலாம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X