இளஸ் மனஸ்! (21)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2019
00:00

அன்புள்ள மெடோஸ் ஆன்டிக்கு,
நான், பி.எஸ்சி., கணிதவியல், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதணும் என்று ஆசை. ஆனால், எப்படி தயாராவது என்று தெரியவில்லை.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் பல விதமாக உள்ளன. இதில், எந்த குரூப் தேர்வு எழுதினால், நல்ல வேலைக்கு போகலாம்.
பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண்கள் தான் எடுத்தேன். அப்போது, என் அப்பாவிடம் ஒருவர், 'உங்க பொண்ணு இவ்ளோ தானா...' என்று ஏளனமாக கேட்டார். அது, மனதை காயப்படுத்திய போதும், என்னிடம் கோபப்படவில்லை; சிரித்து தான் பேசினார் அப்பா.
பெற்றோரின் மனக் காயத்தை ஆற்ற, இந்த தேர்வில் கட்டயாம் தேர்ச்சி பெற வேண்டும் என, சபதம் செய்துள்ளேன். அதுக்கு ஒரு வழி காட்டுங்க ஆன்டி.
தினமும் படிக்க வேண்டும் என்று நினைத்து தான் உட்காருகிறேன்; ஆனால், மனம், பாதை மாறி விடுகிறது. மனதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுங்க.

அன்பு மகளே...
நன்கு படித்து, அரசு பணியில் சேர்ந்து, சமூகத்தில் மதிப்புடன் வாழ விரும்புகிறாய்; உன் எண்ணம் ஈடேற, மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற டி.என்.பி.எஸ்.சி.,
தமிழக அரசு அலுவலகங்களில், உதவியாளர் முதல், வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட, முதன்மைப் பணிகளுக்கு, போட்டித் தேர்வுகள் மூலம், ஆட்களை தேர்வு செய்கிறது.
அந்தந்த பணிகளுக்கு ஏற்ப,
குரூப் 1 முதல், 8 வரையிலும் மற்றும் இதர தொழில்நுட்ப பிரிவு பணிகளுக்கும், தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பில் கலெக்டர், வரைவாளர், நில அளவர் உள்ளிட்ட பணிகளுக்கு, குரூப்- 4 தேர்வு நடத்தப்படுகிறது. குறைந்தபட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இத்தேர்வில் பங்கேற்கலாம். நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைக் காட்டிலும், கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால், வயது வரம்பு கிடையாது.
எழுத்துத் தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தாலே போதுமானது; நேர்முகத்தேர்வு கிடையாது; மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அவ்வப்போது தேர்வுகள் குறித்த அறிவிப்பை, அதன் இணைய தளத்தில் வெளியிடுகிறது.
இதுவரை, தனியே நடத்தப்பட்டு வந்த, கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வும், இனி, குரூப்- 4ல் சேர்க்கப்பட உள்ளது.
இளநிலை உதவியாளர் முதல், முதன்மை பணி அதிகாரி வரையிலான பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை, தேர்வாணையம் வெளியிடுகிறது.
அரசு பணியாளர் தேர்வுகள் குறித்து,தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in, www.tnpscexams.net,
www.tnpscexams.in என்ற இணையதளங்களில் விபரங்களை அறியலாம்.
இத்தேர்வுகளில் பங்கேற்க, இணையவழியில் தான் விண்ணப்பிக்க வேண்டும்; முதலில், 150 ரூபாய் செலுத்தி, நிரந்தரமாக பதிவு செய்து கொள்ளலாம். அப்போது வழங்கப்படும், பதிவு எண் மற்றும் கடவுச் சொல் மூலம், பல்வேறு அரசு பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பல நிறுவனங்கள், அரசு பணியாளர் தேர்வுக்கு பயிற்சி அளிக்கின்றன; அரசு சார்பிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மகளே... நீ அங்கு சென்று, தேவையான தகவல்களை பெறலாம்.
பொதுஅறிவு, நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளும் ஆர்வம், தீவிர கல்விப் பயிற்சி, விடா முயற்சி இருந்தால், இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, அரசு பணியில் சேரலாம்.
அரசு பணியாளர் என்ற அடையாளத்துடன், பெற்றோர் முன் பெருமிதத்துடன் நிற்க வேண்டும் என்பது உன் விருப்பம். அது நிறைவேற வேண்டுமென்றால், கடினமாக உழைக்க வேண்டும்; உன் முயற்சி வெல்ல வாழ்த்துக்கள் செல்லமே!
- அன்புடன், மெடோஸ்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X