இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
00:00

மாற்றி யோசியுங்கள்!
நண்பரின் மகன், பி.காம்., முடித்து, வேலை தேடிக் கொண்டிருந்தான். சரியான வேலை எதுவும் அமையாததால், மனமுடைந்திருந்த அவனை, ஆறு மாதங்களுக்கு பின், சமீபத்தில் சந்தித்தேன். மனுஷன் ரொம்ப, 'பிசி!'
இரண்டு மொபைல் போன்களை வைத்தபடி, அங்கொன்றும் இங்கொன்றுமாய் உத்தரவுகளை பிறப்பித்து, வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டிருந்தான்.
'என்ன தொழில் செய்றப்பா...' என்றேன்.
'ஹெல்ப் லைன் பிசினஸ்...' என்றான்.
'அப்படீன்னா?'
'சார்... மின் கட்டணம் மற்றும் தொலைபேசி கட்டணம், எல்.ஐ.சி., பாலிசி, 'டிவி' ரீசார்ஜ் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் என, சின்ன சின்ன வேலைகளை பார்ப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. அத்தகைய வேலைகளை ஒரு குறிப்பிட்ட தொகை பெற்று, நான் செய்து கொடுக்கிறேன்.
'இதனால், அவர்களுக்கு அலைச்சல் மிச்சம்; வேலையும் திருப்தியாக முடிகிறது. இதற்காக, எல்லா வேலைகளுக்கும் ஆள் வைத்துள்ளேன்; இந்த, 'பிசினஸ்' சுமுகமாக போகிறது...' என்றான்.
எதையும் மாற்றி யோசித்தால், வேலை இல்லை என்ற நிலையை கட்டாயம் மாற்றலாம் என்பதற்கு, இவன் ஓர் உதாரணம்.
ப. காளிதாசன், புதுக்கோட்டை.

ஜொள்ளர்கள் ஜாக்கிரதை!
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள், தோழி. அதன் மேலாளர், அவ்வப்போது அவளை, தன் அறைக்கு வரவழைத்து, அலுவலக வேலைகளை செய்ய சொல்வார். கூடவே, 'ஜொள்' வழிய வழிய, 'உங்களுக்கு, இந்த புடவை நல்லா இருக்கு மேடம்... 'ஹேர் ஸ்டைலும்' சூப்பர்...' என்று, கீழிருந்து மேல் வரை, அவளது அழகை ரசித்தபடி விமர்சிப்பார்.
அவரின் வார்த்தைகளை, காதில் வாங்காமல், சொல்லும் அலுவல்களை மட்டும் முடித்து, வெளியே வந்து விடுவாள்.
ஒருநாள், 'உங்களுக்கு, பண கஷ்டம் இருந்தா சொல்லுங்க, மேடம்... நான் உதவி பண்றேன்... எந்த நேரத்திலும், எந்த உதவிக்காகவும் தயங்காம என்னை அணுகலாம்...' என்றிருக்கிறார்.
உடனே அவள், 'காலிங் பெல்'லை அழுத்தி, பியூனை உள்ளே வரவழைத்தாள். புரியாமல் பேந்த பேந்த முழித்த மேலாளரிடம், 'இதோ, நம் ஆபீசில், இவர் தான் ரொம்ப ஏழ்மை நிலையில் இருக்கார். வாங்கற சம்பளம், 15 நாட்களுக்கு கூட வர்றதில்லை... உங்களோட கருணை குணத்தை இவர் மேல் காட்டினா, நல்லா இருக்கும்...' என்று, 'கூலாக' கூறி, அறையை விட்டு வெளியேறினாள்.
அதன்பின், தோழி இருக்கும் பக்கமே திரும்பவில்லையாம், அந்த மேலாளர்.
வேலை செய்யும் இடத்தில், பெண்களை நோக்கி வரும் காம அம்புகளை, சாதுர்யமாக கையாள வேண்டும். அப்போது தான், இதுபோன்ற, 'ஜொள்ளர்'களுக்கு உறைக்கும்.
கே. ஜெகதீஸ்வரி, கோவை.

இளமை துள்ளல் வேண்டும்!
சமீபத்தில், அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற பெண் அதிகாரி, நான். பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், என் எண்ணங்களையும், மனதையும் உற்சாகமாகவும், இளமையாகவும் வைத்துக் கொண்டிருப்பவள்.
ஆனால், எனக்கு, 'வாட்ஸ் - ஆப்' மூலம், நண்பர்கள் மற்றும் தோழிகள், முதுமை தொடர்பான, 'பிரைவேட் மெசேஜ்'களையும், வயதான பின், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய துணுக்குகளையும் தொடர்ந்து அனுப்பி வருகின்றனர்.
'வயது என்பது முதுமை அல்ல, அனுபவம் என்று எண்ணுகிற பெண், நான். எனவே, இது எனக்கு மிகுந்த எரிச்சலை கொடுக்கிறது. முதுமையை நினைவுபடுத்தும் செய்திகளை எனக்கு அனுப்ப வேண்டாம்...' என, நண்பர்களுக்கு, 'வாட்ஸ் - ஆப்'பில் பதில் தெரிவித்து விட்டேன்.
ஓய்வு பெற்றவர்களுக்கு, 'வாட்ஸ் - ஆப்'பில் செய்திகளை அனுப்பும் நண்பர்கள், இதுபோன்ற விஷயங்களை தவிர்த்து, இளமை துள்ளல் நிறைந்த செய்திகளை அனுப்பி, அவர்களை உற்சாகப்படுத்தலாமே!
பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி (ஓய்வு), கடையநல்லுார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
17-நவ-201921:20:52 IST Report Abuse
வழிப்போக்கன் ஜெகதீஸ்வரி என்பவரின் பதிவு மிகவும் கோபத்தையும் வருத்தத்தையும் தருகிறது அந்த தோழி , அந்த மேலாளரை பற்றி காவல் துறை மற்றும் மகளிர் அமைப்பிடம் குற்றம் சாட்டி இருக்க வேண்டும் . இல்லை எனில் குறைந்தபட்சம் அந்த நிறுவன உரிமையாளரிடம் சொல்லி இருத்தல் வேண்டும் . இதனை பற்றி விழிப்புணர்வு நம்மிடம் இல்லை என்பதே உண்மை . மூக்குடைப்பது , அவமானப்படுத்துவது என்பது அந்த மேலாளரிடம் இருந்து இவர் தப்பிக்கலாம் ஆனால அவர் அதனை மற்றும் ஒரு பெண்ணிடம் முயற்சிப்பதை நிறுத்த முடியாது. இதுவரை அவர் செய்து வந்த sexual harassment க்கு தணடனையோ , எச்சரிப்போ இல்லாது போகும் . எதற்கு வளர்த்த வேண்டும் , முள்ளில் சேலை பட்டது எனில் சேலைக்கு நஷ்டம் என்ற மனப்பான்மை ஒழிந்தால் தான் இவர்கள் மாற முடியும் . இங்கு இளம் பருவத்தினருக்கு இது பற்றி சொல்லி தரப்படுகிறது . அதனை இந்தியாவில் முக்கியமாக இது போன்ற பத்திரிகைகளில் எழுத வேண்டும். முதலில் இதனை வன்மையாக (செருப்படி என்று ஆரம்பிக்காது ) திண்ணமாக - இந்த மாதிரி பேசுவது எனக்கு அசௌகரியம் , ஏற்பு இல்லை என்று சொல்லுங்கள் . பலர் , இது போல ஜொள்ளு விடுபவர்கள் , கோழைகள். அவர்கள் இதனை ஏழ்மை நிலையில் அவர்களின் பொருளாதார நிலையை வைத்து வீழ்த்த நினைப்பார்கள். ஆனால் வெளியே தெரிந்தால் தங்கள் கவுரவம் என்று பயப்படுவார்கள் (பெண்கள் தங்கள் மானம் என்பதை போலவே). ஆகையால் முதல் எச்சரிக்கை, மறுப்பு அவர்களை நிறுத்தும் . அடுத்த செல்போனில் உங்களுக்கு நீங்களே ஒரு ஈமெயில் அனுப்பி - இன்று இப்படி நடந்தது என்று பதிவு செய்து கொள்ளுங்கள். ஈமெயில் முக்கியம் அது ஒரு பேட்டர்ன் என்பதை பின்னால் சுட்டி காட்ட உதவும் . அதாவது நீங்கள் , உங்கள் பார்வை தவறு என்று பேச முடியாது - சில நேரங்களில் " இன்று உங்கள் அலங்காரம் அற்புதம்" என்ற பாராட்டு உண்மையான பாராட்டாக இருந்து இருக்கலாம் உங்களுக்கு தவறாக பட்டு இருக்கலாம் அல்லது அவர் எல்லோரிடமும் இயல்பாக இப்படி பேசும் குணாதிசயம் படைத்தவர் ஆக இருக்கலாம். ஒரு sexual harassment குற்றச்சாட்டு ஒருவரின் வாழ்க்கையை அழிக்கும் தன்மை கொண்டது . அதற்காக அதனை பதிவு செய்து அவரின் தொடர் அத்துமீறல்களை வெளிப்படுத்த விழையுங்கள் . இது இந்த பெண்ணுக்கு மட்டும் அல்ல எல்லா பணிபுரியும் பெண்களுக்கும் தெரிய வைக்க வேண்டும் . இதுதான் உங்கள் கையில் (செல்போன்) மிக பெரிய ஆயுதம் . அது போல உங்கள் சக ஊழியர்களிடம் , தோழிகளிடம் இதனை பற்றி பேசி விடுங்கள். அந்த கோழைகள் பின்வாங்க விடில் பின்னர் முதலாளியிடம் இதனை காட்டுங்கள். அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பல அமைப்புகள் உள்ளன , காவல் துறை இருக்கிறது. வேலை போய் விடும் என்பதை விட அந்த வேலை இதனால் பாதுகாக்கப்படும் என்பதே மிக முக்கியம் . இத்தனை விவரம் தேவை இல்லை எனினும் (அட நாம் தப்பித்து விட்டோம் ) இந்த தோழி வேலையை விட்டதும் மற்றும் ஒரு இளம் பெண் (இவரை போல புத்திசாலித்தனமாக இருக்க தெரியாதவர்) மாட்டி கொள்வார் இது பாலியியல் வன்முறை தாண்டி குற்றஉணர்வில் ஒரு பெண் தற்கொலை வரை செல்ல கூடும், இவர் பாலியியல் அத்துமீறல் செய்ப்பவர் எனில் இவர் தடுக்கப்பட வேண்டியது அவசியம் ,, அவரிடம் இருந்து தப்பிப்பது மட்டும் ஒருவரின் நோக்கம் ஆக இருக்க கூடாது ..அதனை பப்ளிஷ் செய்து, துணுக்காக நன்றாக இருக்கும் மற்றபடி எந்த வித நன்மையையும் தராது . ஆகையால்தான் இந்த மனப்பான்மை வருத்தத்தை தருகிறது
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
17-நவ-201918:43:18 IST Report Abuse
கதிரழகன், SSLC கடைய நல்லூருல எத்தினி ஒய்வு பெற்ற அரசு பெண் அதிகாரி இருக்க போராக? இதுக்கு நேரா பேரையே சொல்லி இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
17-நவ-201917:08:06 IST Report Abuse
pattikkaattaan அறுபது வயதை தொட்டும் இளமையாக இருக்கவேண்டும் என்று நினைப்பதற்கு வாழ்த்துக்கள் .. மற்றவர்களுக்கு எத்தனையோ வகையில் சேவை செய்து துடிப்புடன் இருக்கலாம் .. ஆனால் சிலர் நாற்பத்தைந்து வயதை கடந்துவிட்டாலே, சோம்பிக்கிடக்கின்றனர் .. அலுவலகத்தில்கூட ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை .. சிறு வயதினர்களை அதிகாரம் செய்து தங்கள் வேலைகளையும் அவர்கள் தலையில் கட்டிவிடுகின்றனர் .. இன்னும் சிலர் சதா ஆஸ்பத்திரிக்கு நடந்து , மளிகை சாமான்போல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர் .. தங்கள் பணிகளை ஒழுங்காக செய்தாலே இளமையுடன் இருக்கலாம் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X