சேலைக்குள் சிணுங்கும் பாசிமணி சலங்கைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2011
00:00

சாதாரண சேலை, ஜாக்கெட்டை கூட, அழகாய் எடுத்துக் காட்டுவது பாசி மணிகள் தான். சேலையின் முந்தானைப் பூக்கள், பார்டரில் உள்ள பூக்களில் ஒற்றை பாசிமணிகளை கோர்க்கலாம். சிறு பாசிகள், முத்துக்கள், சலங்கைகள், இலைகள் என தோரணங்களாய் கைகளின் முன்புறம் கோர்த்தும், ஜாக்கெட்டின் பின்புற கழுத்தில் அழகுபடுத்தியும் சேலைக்கு பொருத்தமாக அணியலாம். கிடைக்குமிடம் : மதுரை கீழ அனுமந்தராயன் கோயில் தெருவில் உள்ள சூர்யா லேஸ்.

சிறுமணிகள் : மற்றவர்களின் கண்களை உறுத்தாமலும், அதே சமயத்தில் "கையில் நான் இருக்கிறேன்' என்பதை போல கொஞ்சும் பாசிமணிகள் ஒன்றின் விலை ஒரு ரூபாய். கையின் ஒவ்வொரு பகுதிக்கும் மூன்று அல்லது ஐந்து மணிகள் வைக்கலாம்.

குஞ்சங்கள்: சடையின் கீழ் மாட்டும் குஞ்சம் போல கண்ணைக் கவரும் அழகு மணிகள் இரண்டு ரூபாய் முதல். மூன்று மணிகள் மட்டும் வைத்தால் கம்பீரமாக இருக்கும். போனஸாக வளையம் சேர்த்து காதிலும் மாட்டிக் கொள்ளலாம்.

இலைத் தோரணம்: சிறு சிறு இலைகளால் ஆன தோரணங்களின் விலை இரண்டரை ரூபாய் முதல். பாந்தமாக கையுடன் ஒட்டிக் கொள்ளும் அழகே அழகு.

சலங்கைகள்: காலில் மட்டும் தான் சலங்கை அணிய வேண்டுமா? கையிலும், கழுத்திலும் தைப்பதற்காக உருவாக்கப்பட்ட வெள்ளி, தங்க சலங்கைகள் இரண்டு ரூபாய் முதல். கை அசைக்கும் போதெல்லாம் சிணுங்கும் சலங்கையின் ஓசையை ரசிக்கலாம்.

ஒற்றைச் சரம்: ஐந்து வைக்கும் இடத்தில் ஒற்றை ஆளாய் கம்பீரம் தரும் அழகுச் சரம் இது. வண்ணங்களை வாரியிறைத்து எண்ணங்களை மிஞ்ச வைக்கும் இச்சரத்தை வளையத்துடன் சேர்த்து காதணியாகவும் அணியலாம். "ஷேப்டி பின்' ஆக மாற்றலாம். மெல்லிய செயினில் கோர்த்து டாலராகவும் அணியலாம்.

ஜாக்கெட்டை தைத்த பின், நிதானமாக நாமே அழகுபடுத்தலாம். பளிச்னு மத்தவங்க பார்வை நம்ம மேல படும். கூடவே கொஞ்சம் பொறாமையும் படுவாங்க. ஜாக்கெட்டில் குட்டை கை வைத்தால் தான் நல்லா இருக்குமுங்கோ. அதையும் சொல்லிட்டோம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X