இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
00:00

ரஜினி, 'சென்டிமென்ட்!'
தர்பார் படத்தில், அப்பா - மகள், 'சென்டிமென்ட்' கதையில் நடித்துள்ள, ரஜினி, தன், 168வது படத்தில், அண்ணன்- - தங்கை, 'சென்டிமென்ட்' கதையில் நடிக்க போகிறார். முக்கியமாக, கூட்டுக் குடும்பங்கள் மாறி தனிக்குடித்தனமாகி விட்ட நிலையில், உறவுகளின் முக்கியத்துவம் யாருக்கும் தெரிவதில்லை. அதனால், இந்த படத்தில், உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லும் கதையில் நடிக்கிறார்.
சினிமா பொன்னையா

நிவேதா பெத்துராஜின் இரண்டு ஆசைகள்!
டிக் டிக் டிக் படத்தில், நீச்சல் உடையில் நடித்து இளசுகளின் நெஞ்சை அள்ளியவர், நிவேதா பெத்துராஜ். கவர்ச்சி கன்னியான, 'ஹாலிவுட்' நடிகை, மர்லின் மன்றோவின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க வேண்டும் என்ற பெரிய ஆசை, இவருக்கு உள்ளதாம். அதேபோல், விஜயுடன், 'டூயட்' பாடும் ஆசையும், தனக்கு இருப்பதாக சொல்லும் நிவேதா, 'இந்த இரண்டு வாய்ப்புகளும் கிடைத்தால், சொக்க வைக்கும் கவர்ச்சிக் கவிதையாக என்னை வெளிப்படுத்துவேன்...' என்கிறார்.வருந்தி வருந்திப் பார்த்தாலும், வருகிறபோது தான் வரும்!
எலீசா

'மீம்ஸ்'களுக்கு கவலைப்படாத, இந்துஜா!
பிகில் படத்தில், 'விக்' வைத்து நடித்த, இந்துஜாவின் தோற்றத்தை கிண்டல் செய்து, சில ரசிகர்கள், 'சோஷியல் மீடியா'வில், 'மீம்ஸ்' வெளியிட்டு வருகின்றனர். ஆனால், அதைப் பார்த்த அவருக்கு, கொஞ்சம் கூட கோபம் வரவில்லை. 'பொது வாழ்க்கைக்கு வந்து விட்ட பின், விமர்சனங்கள் எழுவது சகஜம். அதனால், என்னைப் பற்றிய, 'மீம்ஸ்'களைப் பார்த்து வருத்தப் படாமல், நானும் அந்த படங்களைப் பார்த்து, 'என்ஜாய்' பண்ணுகிறேன்...' என்கிறார். காரியத்திலே கண் அல்லாமல், வீரியத்தில் இல்லை!
எலீசா

'ஹீரோ'க்களை மிரட்டும், நந்திதா!
நயன்தாரா மற்றும் த்ரிஷா பாணியில், அட்டகத்தி நந்திதாவும், கதையின் நாயகியாக களத்தில் இறங்கி விட்டார். ஆனால், அவர்களைப் போல் அல்லாமல், 'ஆக் ஷன்' வழியில் பயணிக்கும் அவர், சண்டை காட்சிகளில், 'ஹீரோ'க்களுக்கு இணையாக, செம, 'கெத்து' காட்டி வருகிறார். கயிறில் தொங்கியபடி, பறந்து பறந்து அடித்து, துவம்சம் செய்யும் சண்டை காட்சிகளைப் பார்த்து, கோலிவுட், 'ஹீரோ'க்களே மிரண்டு நிற்கின்றனர். பட்ட பாட்டுக்கு பலன் கை மேல்!
- எலீசா

உயிர் தோழனுடன் இணைந்த, பாரதிராஜா!
பாரதிராஜா இயக்கிய, முதல் படமான, 16 வயதினிலே துவங்கி, கடலோரக்கவிதைகள், என்னுயிர்த்தோழன், புதுநெல்லு புதுநாத்து மற்றும் நாடோடித்தென்றல் என, தொடர்ச்சியாக படங்களுக்கு இசையமைத்து வந்தார், இளையராஜா. அதன்பின், அவர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, பாரதிராஜா- - இளையராஜா கூட்டணி தொடரவில்லை. இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்குப் பின், சமீபத்தில், சொந்த ஊரான தேனிக்கு சென்ற இடத்தில், வைகை நதிக்கரை ஓரத்தில் மீண்டும் சந்தித்து பேசியுள்ளனர். இந்த செய்தியை வெளியிட்டுள்ள, பாரதிராஜா, 'இயலும், இசையும் இணைந்தது; இதயம் என் இதயத்தைத் தொட்டது...' என்று, 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!
திருமணத்திற்கு பின், காதல் மனைவி நடிப்பதற்கு, 'கிரீன் சிக்னல்' கொடுத்தார், 'பிக்-அப்' நடிகர். ஆனால், மனைவி மற்ற நடிகர்களுடன், 'டூயட்' பாடுவது பிடிக்கவில்லை. அதனால், மனைவியை மீண்டும் நடிக்க அழைத்த இயக்குனர்களை தொடர்பு கொண்டு, 'அவர், இனிமேல் நடிக்க மாட்டார்...' என சொல்லி, வந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பியிருக்கிறார், நடிகர். கணவரே தன் படங்களுக்கு, 'ஆப்பு' வைத்து வரும் சேதியறிந்து, செம கடுப்பாகி விட்டார், நடிகை. இதையடுத்து, 'சினிமாவில் நடிக்க தடை போட்டால், கோர்ட்டு படியேறி விடுவேன்...' என்று, நடிகரை கடுமையாக எச்சரித்துள்ளார், அம்மணி. இதனால், பீதியில் கிடக்கிறார், 'பிக்-அப்' நடிகர்.
'ஏண்டா டேய், பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பிட்டு, ஆர்யா மாதிரி புலம்பிக்கிட்டு இருக்கியே... வெளியே போனால் நாலு பேருகிட்ட பேசி, பழக வேண்டியிருக்கும்... இதெல்லாம் தெரிஞ்சுதானே, வேலைக்கு அனுப்பினே... போய் வேலையை பாருடா...' என்று மகனுக்கு அறிவுறுத்தினார், அப்பா.

சினி துளிகள்!
* ஹிந்தி நடிகை, கத்ரினா கைப் தயாரித்து வெளியிடும், அழகு சாதன பொருளின் விளம்பர படத்தில் நடித்துள்ளார், நயன்தாரா.
* மனைவி சாயிஷாவுடன், ஐதராபாத்தில் குடியேறியிருக்கிறார், ஆர்யா.

அவ்ளோதான்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
22-நவ-201916:17:09 IST Report Abuse
Vasudevan Srinivasan 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா அவர்கள் 'இசைஞானி' இளையராஜா அவர்களின் துணையின்றி எடுத்த படங்களின் பட்டியலில் 'கிழக்கு சீமையிலே' ஒன்றைத்தவிர எதுவும் பெரிய வெற்றியை தரவில்லை என்பது உண்மை இப்படி சொல்வதால் நான் இயக்குனர் இமயத்தின் திறமையை பழிப்பதாக கொள்ளவேண்டாம்... நான் சொல்வது எப்படியென்றால்.. இமத்த்தின் சிஷ்யன் திரைக்கதை திலகத்தின் 'தூறல் நின்னு போச்சு' படத்தில் வரும் காட்சியை போலத்தான்.. அந்த காட்சி: ..குழந்தை மாமா நீங்க வாறீங்கன்னு எனக்கு புது சட்டை போட்டுவிட்டாங்க இது நல்ல இருக்கா..? பாக்யராஜ்: ரொம்ப நல்லாயிருக்கு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பூ போட்ட மாதிரி இருந்தா இன்னும் நல்லா இருக்கும் என்பார் அதுபோலத்தான்.. இசைஞானியின் இசையோடு இருந்தால் பாரதிராஜாவின் கலைநயம் இன்னும் மிளிரும் இது நிதர்சனமான உண்மை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X