ஒன் மேன் ஆர்மி ஜஸ்வந்த் சிங்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
00:00

இந்தியா - சீனாவிற்கு இடையே மூண்ட போர், நவம்பர், 15, 1962ல், முடியும் தருணம். எல்லையில் உள்ளவர்களை, இந்திய ராணுவ உயர் அதிகாரிகள், திரும்ப வரச்சொல்லினர்.
கர்வால் ரைபல்ஸ் படை பிரிவை சேர்ந்த, ஜஸ்வந்த் சிங், திரிலோக் சிங் மற்றும் கோபால் சிங் ஆகிய மூவரும், தோல்வியுடன், திரும்ப மனமில்லாமல், வேறு ஒரு முடிவை எடுத்தனர்.
சீன முகாம்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த நவீன ரக இயந்திர துப்பாக்கிகளை, எதிரிகள் அயர்ந்த நேரத்தில், திரிலோக் சிங் மற்றும் கோபால் சிங், அள்ளி வருவது என்றும், அவற்றை ஜஸ்வந்த் சிங், பத்திரப்படுத்துவது என்றும் முடிவானது.
அதன்படியே இருவரும், எதிரி முகாமிலிருந்து, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை எடுத்து வந்தனர். கடைசியாக, இன்னும் கொஞ்சம் ஆயுதங்களை எடுத்து வரலாம் என, சீன எல்லைக்குள் நுழைந்தவர்கள், ராணுவத்தினர் கண்ணில் பட்டு விட்டனர்; இருவரையும் சுட்டு கொன்றனர்.
இக்காட்சியை, மறைவிலிருந்து பார்த்து, கொதித்து போனார், ஜஸ்வந்த் சிங்.
'விடிந்ததும், இந்திய எல்லைக்குள் நுழைய வேண்டியது தான்...' என, நினைத்தனர், சீன வீரர்கள்.
இதற்காகவே காத்திருந்த, ஜஸ்வந்த் சிங், சீன ராணுவம், இந்திய எல்லையில் கால் வைத்ததுமே, குண்டுகளை மழையாக பொழிந்தார்.
இதை கொஞ்சமும் எதிர்பாராத, சீன ராணுவத்தினர், கொத்து கொத்தாக செத்து விழுந்தனர். உயிர் பிழைத்தோர், வேறு வழியாக, குண்டு வந்த திசையை நோக்கி ஓடினர்.
மற்றொரு இடத்திலிருந்து, இயந்திர துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும், மேலும் பல எதிரிகளை கொன்று குவித்தார், ஜஸ்வந்த் சிங்.
இப்படி, தன் இருப்பிடத்தை மாற்றி மாற்றி, எதிரிகளை பந்தாடிய, ஜஸ்வந்த் சிங்கின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், சீன வீரர்கள் பின்வாங்கினர். 72 மணி நேரம் நடந்த, இந்த போரில், ஜஸ்வந்த் சிங், தனி ஒருவனாக செயல்பட்டு, 300க்கும் மேற்பட்ட, சீன ராணுவ வீரர்களை கொன்றார்.
கடைசியில், இத்தனையும் செய்தது, தனி ஒரு ஆள் என தெரிய வந்ததும், ஜஸ்வந்த் சிங்கை, சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.
இன்னும் சில நொடிகளில், தன்னை சிறைப்படுத்தி, எதிரி நாட்டில் அழைத்து போய் சித்திரவதை செய்வர் என்பதை உணர்ந்து, தன்னைத் தானே சுட்டு, இறந்து போனார். நாட்டுக்காக, ஜஸ்வந்த் சிங் தன் உயிரை அர்ப்பணித்த போது, அவருக்கு வயது, 21.
ஜஸ்வந்த் சிங்கின் இறந்த உடல் மீது சரமாரியாக சுட்ட எதிரிகள், அப்போதும், ஆத்திரம் தணியாமல், அவரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றனர்.
போர் ஒப்பந்தங்கள் எல்லாம் கையெழுத்தான பின், என்ன நடந்தது என்பதை, சீன ராணுவ உயர் அதிகாரி விசாரித்து அறிந்தார். கோழையை போல, ஜஸ்வந்த் சிங் தலையை கொய்து வந்ததை கண்டித்து, அவரின் வீரத்தை புகழ்ந்து, மார்பளவு வெண்கல சிலையை தயார் செய்து, ராணுவ மரியாதையுடன் கொடுத்தனுப்பினார்.
அருணாசல பிரதேசத்தில் உள்ள, தவாங் என்ற இடத்தில், ஜஸ்வந்த் சிங்கின் சிலையும், அவர் காவல் காத்த இடமும், 'ஜஸ்வந்த்  கர்' என்ற பெயருடன், நினைவாலயமாக, கம்பீரமாக காட்சியளிக்கிறது.
திரிலோக் சிங் மற்றும் கோபால் சிங்கிற்கு, 'வீர் சக்ரா' விருதும், ஜஸ்வந்த் சிங்கிற்கு, 'மகாவீர்' சக்ரா விருதும் வழங்கி, கவுரவித்தது, மத்திய அரசு.

எல்.எம். ராஜ்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
23-நவ-201919:56:13 IST Report Abuse
chakra "தன்னைத் தானே சுட்டு, இறந்து போனார்" கோழைகள்தான் தற்கொலை செய்து கொள்வார்கள் . நம்பறமாதிரி கதை சொல்ல கூடாதா
Rate this:
Share this comment
Cancel
kandasamy sundaresan - bangalore ,இந்தியா
23-நவ-201919:24:21 IST Report Abuse
kandasamy sundaresan தமிழ் நாட்டில் திருமாவளவன், குளத்தூர் மணி, சீமான், வேல்முருகன், தி.மு. காந்தி, ஸ்டாலின், வை. கோபாலசாமி, திருட்டு செட்டியார்,ஓசி சோறு போன்றவர்கள் இருக்கும்வரை தியாகம், நாட்டு பற்று போன்ற வார்த்தைகள் அசிங்கமான வார்த்தைகளாக கருதப் படும். இங்கு இந்திய தேசியம், இந்து மதம் எல்லாம் தவறாகவும் கேவலமாகவும் பேசப்படுகிறது அப்படி பேசும் அவர்கள் தங்களை தாங்களே ஹீரோக்களாக போற்றி கொள்ளுகிறார்கள். தற்சமயம் தமிழ் நாட்டு கடுமையான குழப்பத்தில் இருக்கிறது. மக்களை நல்ல வழி காட்ட ஒரு நல்ல தலைவன் இல்லாமல் தமிழ் நாடு தவிக்கிறது. ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ சர்க்கரையாக கருதப்படுவது போல் மேற்சொன்ன வர்கள் தலைவர்கள் என்ற பெயரில் சுற்றி வருகிறார்கள். இந்தகொடுமை சீக்கிரம் முடியவேண்டும். கடவுளை நம்புகிறோம். காலம் மாறும் காட்சி சீக்கிரமாக மாறும்.
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
21-நவ-201910:34:39 IST Report Abuse
Rangiem N Annamalai தவங் சென்று அவர் சிலைக்கு மாலைபோட்டு மரியாதை செய்ய வேண்டும் என முடிவு செய்த்துள்ளேன் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X