ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்! | கண்ணம்மா | Kannamma | tamil weekly supplements
ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 நவ
2019
00:00

* 'நீட்' தேர்வில் ஆள் மாறாட்டம் பண்ணின மாணவர்களை பிடிச்சதுலேயும், அவங்களை மருத்துவ படிப்புல இருந்து நீக்கினதுலேயும் சந்தோஷம்!
இப்போ... இதுக்கு முன்னாடி நடந்த 'நீட்' தேர்வுகள்ல, இந்தமாதிரியான முறைகேடுகள் எதுவும் நடக்கலைன்னு, எந்த அடிப்படையில நாம நம்புறது; மருத்துவமே படிக்காம வைத்தியம் பார்க்குறவன் போலி மருத்துவர்னா, தப்பான வழியில தப்பா மருத்துவம் படிச்சுட்டு வர்றவனுக்கு பேரு என்ன?

* 'சாலை விபத்துகளுக்கு 80 சதவீதம் காரணமா இருக்குறது ஓட்டுனர்களோட கவனக்குறைவு தான்'னு தமிழக போக்குவரத்து ஆணையர் சொல்றார்!
இதுதான் உண்மையான சூழல்னா, ஒரு விபத்து நடந்ததுக்கு அப்புறமா, அந்த இடத்துல ஏன் வேகத்தடை அமைக்கணும்; 'இது விபத்து பகுதி'ங்கிற பலகை ஏன் வைக்கணும்; ஆக, கவனக்குறைவுங்கிறது ஓட்டுனர்கள்கிட்டே மட்டும் இல்லை!

* 'திருக்குறளை உலக பொது நுாலாக அறிவிக்க யுனெஸ்கோவிடம் கோரிக்கை; இந்திய அளவில் பொது நுாலாக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை'ன்னு சொல்ற நம்ம தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர், 'இறைமாட்சி' அதிகாரத்துல வர்ற குறளை மேற்கோள் காமிச்சு, நம்ம முதல்வர்கிட்டே எப்போ கோரிக்கை வைக்கப் போறார்!

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X