ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே கீழே திருப்பிப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி சரியான விடையை முயற்சிசெய்து கண்டுபிடியுங்கள்.
1. அயோத்யா வழக்கில் எத்தனை நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்புச் சொன்னது?
அ. 1
ஆ. 3
இ. 7
ஈ. 5
2. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய சிவசேனை எம்.பி.யின் பெயர் என்ன?
அ. உத்தவ் தாக்கரே
ஆ. வேணுகோபால்
இ. அரவிந்த் சாவந்த்
ஈ. தேவேந்திர ஃபட்நவிஸ்
3. எந்த மாநிலத்தில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது?
அ. குஜராத்
ஆ. டில்லி
இ. பீகார்
ஈ. மேற்கு வங்கம்
4. மறைந்த டி.என். சேஷன் எந்தப் பதவியில் இருந்து புகழ்பெற்றவர்?
அ. தலைமைத் தேர்தல் ஆணையர்
ஆ. தலைமை இராணுவ ஜெனரல்
இ. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
ஈ. தலைமை போஸ்ட் மாஸ்டர்
5. எந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது?
அ. கேரளம்
ஆ. மத்தியப் பிரதேசம்
இ. ஆந்திரம்
ஈ. மகாராஷ்டிரம்
6. நமது அண்டை நாடு ஒன்றில், அதிபர் தேர்தல் நடைபெற்றது. எந்த நாடு அது?
அ. பூடான்
ஆ. பாகிஸ்தான்
இ. இலங்கை
ஈ. மியான்மர்
7. கீழ்க்கண்டவற்றில் எந்த நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது?
அ. தென் கொரியா
ஆ. ஜிம்பாப்வே
இ. பிரான்ஸ்
ஈ. இந்தோனேசியா
8. ஹாங்காங்கில் நடைபெற்றுவரும் ஜனநாயகப் போராட்டத்துக்குப் பெயர் என்ன?
அ. பிளாசம் எவ்ரிவேர்
ஆ. பை பை சீனா
இ. நீதிவேண்டி போராட்டம்
ஈ. கேப்சர் அமெரிக்கா
9. BRICS என்பது எந்தெந்த நாடுகளைக் குறிக்கும்?
அ. பிரிட்டிஷ், ருமேனியா, ஈரான், காங்கோ, தென் அமெரிக்கா
ஆ.பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா
இ. பொலிவியா, ருவாண்டா, இந்தோனேசியா, கம்போடியா, சௌதி அரேபியா
ஈ. பெல்ஜியம், ருவாண்டா, ஈராக், கனடா, சுரினாம்
10. நவம்பர் 14, என்ன நாளாக அனுசரிக்கப்பட்டது?
அ. உலக முதியோர் தினம்
ஆ. உலக ஒவ்வாமை தினம்
இ. உலக நீரிழிவு தினம்
ஈ. சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
விடைகள்:
1. ஈ, 2.இ, 3.ஆ, 4.அ, 5.ஈ 6.இ 7.ஆ 8.அ, 9.ஆ, 10. இ