துணிச்சலுக்கு மறுப் பெயர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2019
00:00

டிச., 7 - சோ நினைவு நாள்

அரசியல் விமர்சனம், இப்படி தான் இருக்க வேண்டும் என்று, இலக்கணம் வகுத்தவர், சோ. அச்சமின்மைக்கு அடையாளமாக திகழ்ந்தவர். மிகச் சிறந்த அறிவாளி. ஒப்பற்ற திறமையாளர். நகைச்சுவை, எழுத்து மற்றும் பேச்சிலும் தன்னிகர் அற்றவர். மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவர் உருவாக்கிய, 'துக்ளக்' இதழில், நீண்ட காலம்பணியாற்றி வரும், உதவி ஆசிரியர், சத்யா, சோ பற்றிய நினைவுகளை, பகிர்ந்து கொள்கிறார்:
'துக்ளக்' இதழ் ஆரம்பிக்கப்பட்ட விதமே அலாதியானது. தன் நண்பர்களிடம் வைக்கப்பட்ட, ஐந்து ரூபாய் பந்தயத்திற்காக, 'நான் பத்திரிகை ஆரம்பித்தால் வாங்குவீர்களா...' என்று, தமிழ் விளம்பரம் ஒன்றை, 'ஹிந்து' ஆங்கில பதிப்பில் வெளியிட்டார்.
'ஹிந்து' நாளிதழில் தமிழில், வெளியான, முதல் விளம்பரம் அது தான். பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், உடனே பதில் எழுதினர்.
'ஆனந்த விகடன்' உதவி ஆசிரியர் பாலாவை, சோவிடம் அனுப்பி, 'விகடன் ஆரம்பிக்கும் புதிய பத்திரிகைக்கு, சோ ஆசிரியராக இருக்க விருப்பமா...' என்று கேட்டார், விகடன் அதிபரும், உரிமையாளருமான, எஸ்.பாலசுப்ரமணியன்.
சம்மதித்தார், சோ. புதிய பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டபோது, சற்றும் யோசிக்காமல், 'துக்ளக்' என்றார்.
சோவின், விவேகா பைன் ஆர்ட்ஸ் குழு, அப்போது மேடை ஏற்றி வந்த மாபெரும் வெற்றி நாடகம், முகமது பின் துக்ளக்.
சோவை ஆசிரியராகவும், விகடன் அதிபரின் நண்பர், ஆர்.வெங்கட்ராமனை பதிப்பாளராகவும் நியமித்து, ஜனவரி, 14, 1970ல், 'துக்ளக்' இதழ் வெளி வந்தது. இதழின் விலை, 40 பைசா.
* மாதம் இரு முறையாக வெளிவந்த, 'துக்ளக்' இதழ், ஜன., 14, 1996 முதல், வார இதழாக வெளிவர ஆரம்பித்தது. 1970 முதல் 2016 வரை, 46 ஆண்டுகள், ஆசிரியராக பணியாற்றினார், சோ
* இந்திரா, கருணாநிதி, வி.பி.சிங் உட்பட பலர், அவரது அரசியல் விமர்சனங்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்
* தலைவர்கள், தன்னிடம் நட்பு ரீதியில் சொல்லும் தகவல்களை, எக்காரணம் முன்னிட்டும், அவர்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொண்டதில்லை. விமர்சிப்பவர்களாலும், அவர் விரும்பப்பட காரணமே, சோ மீது அவர்கள் கொண்ட இந்த நம்பிக்கை தான்
* 'விடுதலைப்புலிகள் ஓர் அழிவு சக்தி...' என்று, நாட்டில் வெளிப்பட்ட முதல் குரல், சோவுடையது. மத்திய - மாநில அரசுகள் கூட, அதன் பிறகே, அவரின் நிலைப்பாட்டுக்கு வந்தன. அத்தகைய தீர்க்க தரிசனம் அவருடையது
* சோ நடித்தது; 150 திரைப்படங்கள். கதை, வசனம் எழுதி, இயக்கியது; நான்கு படங்கள்; 21 நாடகங்கள். 6,000த்திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். ஆன்மிக நுால்கள் - 5, தொடர்கதை - 4, சமூக நுால்கள் - 8. 'துக்ளக்'கில் வெளியான கட்டுரைகள் உட்பட பல படைப்புகள், தனி புத்தகங்களாக வெளி வந்துள்ளன
* கடந்த, 2001ல், ஜெயலலிதா, 'துக்ளக்' அலுவலகத்திற்கு வந்து, சோவை சந்தித்தார். துக்ளக் ஊழியர்களை, அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார், சோ. அப்போது, 'சத்யா என்பவர், பெண் என்று நினைத்தேன்...' என்று சொல்லி சிரித்தார், ஜெ.,
* ஸ்டாலின், அழகிரி, வைகோ, மூப்பனார், சுப்பிரமணிய சாமி, ஓ.பி.எஸ்., இல.கணேசன் மற்றும் ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகள், பல்வேறு சமயங்களில், 'துக்ளக்' ஆபீசில், சோவை சந்தித்து பேசியுள்ளனர்
* வாசகர்களுக்கு எது அவசியம், எது முக்கியம், எந்த விஷயமெல்லாம் தெரிய வேண்டும் என்று அலசி ஆராய்ந்து, அவற்றை மட்டுமே, 'துக்ளக்' இதழில் எழுதுவார்
* 'எமர்ஜென்சி' நேரத்தில், அதிகமாக, 'சென்சார்' செய்யப்பட்ட தமிழ் பத்திரிகைகளில், 'துக்ளக்' முக்கியமானது. அந்த நேரத்தில், புது பத்திரிகைக்கு தணிக்கை கிடையாது என்ற சலுகை விதியை பயன்படுத்தி, 'பிக்விக்' என்ற பெயரில், மாதமிரு முறை ஆங்கில இதழை ஆரம்பித்து, அரசுக்கு எதிரான கருத்துகளை அதில் எழுதினார். அந்த இதழ், இரண்டு ஆண்டு வெளிவந்தது
* ஜன., 14, 2012ல் நடந்த, 'துக்ளக்' ஆண்டு விழாவிற்கு, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த, மோடியும், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியும் வந்திருந்தனர். 'மோடியின் திறமை, அரசியல் சாதுர்யம் ஆகியவற்றிற்காக, அவரை, பிரதமர் வேட்பாளராக, அத்வானி அறிவிக்க வேண்டும்...' என்றார். 'மோடியை பிரதமராக்குவது, இந்தியாவிற்கு நல்லது...' என்று, முதல் குரல் கொடுத்தவர், சோ. பின்னர் அது, நிரூபணமானது
* கடந்த, 2016ல், பிரதமர் மோடி, சென்னை வந்தபோது, உடல்நல குறைவாக இருந்த, சோவை, அவர் வீட்டில் சந்தித்து பேசினார். அவரை, 'ராஜகுரு' என்றே அழைப்பார், மோடி
* ஏப்ரல் 1, 1970ல், வாசகர்களை முட்டாளாக்க, சென்னை, மயிலாப்பூர் உட்லாண்ட்ஸ் ஓட்டலில், 'சோ பேசுவார்...' என்று, அறிவிப்பு பலகை வைத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில், பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், அங்கு கூடி விட்டனர். உட்லாண்ட்ஸ் அதிபர், சோவுக்கு தொலைபேசியில் நிலைமையை விளக்கினார். முற்றிலும் இதை எதிர்பார்க்கவில்லை, சோ.
வாசகர்களை கவுரவிக்க வேண்டும் என கருதி, உடனே, உட்லாண்ட்ஸ் ஓட்டலுக்கு விரைந்தார். வாசகர்கள் கேள்வி கேட்க, அவற்றுக்கு பதில் சொன்னார். நிகழ்ச்சி பெரிய, 'ஹிட்' ஆனது. பின், ஆண்டுதோறும், திருவிழா போல நடைபெற்ற, 'துக்ளக்' ஆண்டு விழாக்களுக்கு, இந்நிகழ்ச்சி அச்சாரமானது
* சென்னை தவிர மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், வேலுார், சேலம் மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும், துக்ளக் ஆண்டு விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன
* 'துக்ளக்' அட்டை படம் முடிவு செய்யும்போது, ஆசிரியர் குழுவுடன் சேர்ந்து விவாதிப்பார். அதுவே, ஒரு மினி அரட்டை அரங்கமாக தான் இருக்கும். பாரதியார் மீது அளவற்ற அபிமானம் கொண்டவர். 'துக்ளக்' அட்டை படங்களுக்கு பாரதியார் பாடல்களை பயன்படுத்துவதை பெரிதும் விரும்புவார். பாரதியாரின் பல பாடல்களை மனப்பாடமாக கூறுவார்
* 'துக்ளக்' ஊழியர்களின் வீட்டில் நடைபெறும் திருமணம் போன்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சென்று, அவர்களை கவுரவிப்பார்
* கடந்த, 1984ல், 'துக்ளக்' இதழின் விற்பனை, 2.75 லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது
* வாசகர்கள் மற்றும் பொதுமக்களிடையே, 'துக்ளக்' ஆண்டு விழாக்கள் பிரபலமானதால், அந்நிகழ்ச்சி, 'சிடி'யில் வந்து விற்பனையிலும் சாதனை படைத்தது
* ஆறு ஆண்டுகள், ராஜ்ய சபா உறுப்பினராக பணியாற்றினார், சோ. பார்லிமென்ட் உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு அளிக்கப்பட்ட தொகையை, தகுதியுள்ள அரசு பள்ளிகளுக்கு வழங்கினார். அதோடு அந்த நிதி எந்தெந்த பள்ளிகளுக்கு, எதற்காக அளிக்கப்பட்டது என்ற முழு தகவல்களையும், 'துக்ளக்' இதழில் பகிரங்கமாக வெளியிட்டார்.
இப்படி ஒரு நெஞ்சுரம் மிகுந்த பத்திரிகையாளர் இனி தோன்றுவாரா என்பது சந்தேகமே. அவர் போல் எழுத்து மற்றும் பேச்சு திறன் பெற்றவர், யாரும் இல்லை. நேர்மையும், அறிவாற்றலும் மிகுந்தவர். எங்களுக்கு ஆசானாக, அவர் அமைந்தது நாங்கள் பெற்ற பேறு.
சோ மறைந்தாலும், அவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற அளவுகோலை மனதில் கொண்டே, 'துக்ளக்' இதழை நடத்தி வருகிறோம். அவர் இல்லாவிட்டாலும், எந்த விஷயத்தில் எப்படி முடிவெடுப்பார் என்பது எங்களுக்கு பழகி விட்டது. அந்த அளவுகோலின்படியே எழுதி வருகிறோம் என்று முடித்தார், சத்யா.

'படப்பிடிப்பில், எம்.ஜி.ஆர்., இருக்கும்போது, சிகரெட் பிடிக்க வேண்டாம்...' என்று, ஒரு பிரபல இயக்குனர், சோவிடம் கூறினார். அதற்கு, 'அவர் இருக்கும்போது, நான் சிகரெட் பிடிக்க மாட்டேன்; ஆனால், நான் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர்., வந்தால், அவருக்காக, சிகரெட்டை அணைக்க மாட்டேன்...' என்றார்.
அப்பல்லோ மருத்துவமனையில் சோ, சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அவரிடம் பிரத்யேக கோரிக்கை ஒன்றை வைத்தார். 'நான் உயிரோடு இருக்கும் வரை, நீங்களும் வாழ வேண்டும். நான் போன பிறகு தான் நீங்களும் போக வேண்டும்...' என்றாராம். அவர் கேட்டுக் கொண்டது போலவே, ஜெயலலிதா இறந்து, இரண்டு நாட்களுக்கு பின் தான், சோ இறந்தார்.
டி.எல்.சத்யநாராயணன் என்ற இயற்பெயரை, 'சத்யா' என்று சுருக்கி வைத்தார், சோ. பல பத்திரிகைகளில் ஏற்கனவே, கதை, கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார், சத்யா. தமிழக அரசின் வனத்துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற உடன், பிப்., 1996 முதல், 'துக்ளக்' வார இதழில், உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 1,500 அரசியல் கட்டுரைகள், 300 நகைச்சுவை கட்டுரைகள், 'டிவி' தொடர்கள், நான்கு மேடை நாடகங்கள், 24 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

எஸ். ரஜத்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chitra - Coimbatore,இந்தியா
04-டிச-201914:10:46 IST Report Abuse
Chitra திரு சோ அவர்கள் எனக்கு பிடித்த உண்மையான, நேர்மையான, பகிரங்கமாக எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாக கருத்துக்களை கூறும் மனிதர். அவரைப்போல் இன்னொருவர் இன்னும் நம் நாட்டில் இல்லை. நன்றி
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
04-டிச-201911:26:34 IST Report Abuse
elakkumanan திரு சோ அவர்கள் ஒரு தீர்க்க தரிசி...அவரது நகைச்சுவை திறன் யாருக்கும் வாய்க்காத வரம். நேர்மையின் உச்சம். ஒரு வார்ட் மெம்பரை தெரிந்தாலே, கோடிகளை அள்ளும் இக்காலம். பிரதமர்களை அறிந்தும், எந்த சூழ்நிலையிலும், தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தாத உயர் குடி பிறப்பு. அது அவரது கருத்து என்று அனுமதிக்கும் நேர்மை. இன்று அரிதிலும் அரிது. தேச நலனை மற்ற எல்லா நலனை விட முதன்மையாக நினைத்தவர். என் போன்ற வாசகர்களுக்கு, வாசிப்பின் மூலம் நேர்மை, தைரியம், தேசப்பற்று , உண்மை வரலாறு போன்றவற்றை கற்றுக்கொடுத்தார். துக்ளக்கில் வந்த எந்த கருத்துக்கும் நான் ஆதாரம் தேடியதே இல்லை. அந்த நம்பிக்கை(அது போன்ற வாசகர்களின் நம்பிக்கை ) அவருக்கு, அவரின் எழுத்துக்கு, அவரின் உயரிய பண்புக்கு, எழுத்து நடைக்கு இறைவனின் கொடை. எனக்கு, தனிப்பட்ட முறையில், அவரின் இழப்பு. தேசம் ஒரு வழிகாட்டியை, நேர்மையின் உருவம் இழந்துவிட்டது. அவருக்கு சில இக்கட்டான சமயங்களில், (முக்கியமாக திமுக எப்போதாவது சரியான நிலைப்பாட்டுடன் இருக்கும்போது ) அவரின் பதில்களில் உள்ள நேர்மை, நகைச்சுவை நான் மிகவும் ரசித்தது. வேறு வழியில்லை, இது தவறுதான் என்பதை வாசகருக்கு அவர் சொல்லும் விதமே அலாதி. சாரி சார். நாற்பது வருட நினைவுகளை எழுத விழைந்து விட்டேன். கர்வத்துடன்நான் ஒரு 28 வருட துக்ளக் வாசகன் என்பதை பதிவு செய்கிறேன். இந்த கர்வம்அவரின் எழுத்தால் விளைந்தது......அவர் ஒரு மஹா பிறவி.................
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
03-டிச-201910:06:40 IST Report Abuse
Yaro Oruvan திரு சோ அவர்கள் ஒரு மாமேதை.. அவரது எழுத்துக்களை படிக்க படிக்க பேரானந்தம்.. ஒவ்வொரு துக்ளக் இதழ் வரும்போதும் தலையங்கத்தை முதலில் படித்து முடிப்பேன்.. அப்போது கடைசி வரி படிக்கும்போது இன்னும் ஒரு வாரம் காத்திருக்கவேண்டும் என்று ஏக்கம் வரும்.. அவரை போல தைரியமாக மனதில் பட்ட கருத்துக்களை சொல்ல வேறு எந்த பத்திரிகையாளரும் பிறக்கவில்லை.. பிறக்கப்போவதும் இல்லை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X