சர்க்கரை கோளாறால் குழந்தைகள் பாதிப்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2019
00:00

சர்க்கரை கோளாறு குழந்தைகளை பாதிக்குமா?
சர்க்கரை கோளாறு என்பது நோயல்ல. கணையம் சுரக்கும் இன்சுலினை, நம் உடம்பு தேவையான அளவு பயன்படுத்தத் தவறுவது அல்லது போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் போவதே சர்க்கரை கோளாறு என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நிலைகளிலும், ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.சர்க்கரை கோளாறு, குழந்தைகளையும் பாதிக்கும். ஆண்டுதோறும், சர்க்கரை கோளாறால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. 10 - 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், சர்க்கரை கோளாறால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சர்க்கரை கோளாறின் வகைகள் என்ன?
டைப் - 1: கணையம், இன்சுலின் ஹார்மோனை அறவே சுரக்காத நிலை இது. இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது ஒன்று தான் இதற்கு தீர்வு. பிறந்த குழந்தைகளுக்கும், இந்தப் பிரச்னை வரலாம்.
டைப் - 2: கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரக்காதது. சிலருக்கு, இன்சுலின் சுரந்தாலும், அது ரத்தத்தில், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வேலையை சரிவர செய்யாது. வாய் வழியாக மருந்துகளை சாப்பிட்டு, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.வளர்ந்தவர்களிடம் இப்பிரச்னை அதிகம் உள்ளது. மரபியல் காரணிகளால் வரும் சர்க்கரை கோளாறை, டைப் - 1 அல்லது டைப் - 2 என்றும், பிறந்து ஆறு மாதங்களுக்குள் உள்ள சில குழந்தைகளுக்கு, ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதை, டைப் - 1 சர்க்கரை கோளாறு என்றும், பல நேரங்களில் தவறாக முடிவு செய்கின்றனர்.
இன்னும் சிலருக்கு, வேறு பல காரணங்களால், ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பது தெரிந்தாலே, டைப் - 2 சர்க்கரை கோளாறு என்று முடிவு செய்கின்றனர். இவர்களுக்கு, குறைந்த அளவு மருந்து அல்லது பல நேரங்களில் மருந்து இல்லாமல், வாழ்க்கை முறை மாற்றத்திலேயே, ரத்த சர்க்கரை கட்டுக்குள் வந்து விடும்.எனவே, ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தாலே, சர்க்கரை கோளாறு என்று முடிவு செய்யாமல், என்ன நிலையில் இருக்கிறது என்பதை உறுதி செய்து, அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும்.

பொதுவான அறிகுறிகள் என்ன?
சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அளவிற்கு அதிகமான தாகம், உடல் எடை குறைவது உள்ளிட்டவை, பொதுவான அறிகுறிகள். இவற்றை கவனிக்காமல் விட்டால், 'டயாபடிக் கீடோஅசிடோசிஸ்' என்ற இன்சுலின் பற்றாக்குறையால், ரத்தத்தில், 'கீடோன்' எனப்படும், அமிலங்கள் அதிகமாக சேர்ந்து, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கு நிலை ஏற்படலாம்.

குழந்தைளுக்கான உணவு முறைகள்?
வளரும் பருவத்தில், ஊட்டச்சத்து மிக்க உணவை, குழந்தைகளுக்கு தர வேண்டும். அதே நேரம், வெள்ளை நிற உணவுகளான, ரொட்டி, பாஸ்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அத்துடன், சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரையில் செய்த உணவுகளான, பிஸ்கட், கேக், சாக்லெட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை, ரத்த சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கும். பதிலாக, பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் அதிகம் சாப்பிட தர வேண்டும். இவற்றில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து அதிகம் உள்ளன.ஒவ்வோர் உணவிலும், முழு தானியங்கள், காய்கறிகள் இடம் பெற வேண்டும். சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தால், ரத்த சர்க்கரை அளவு குறைந்து, 'ஹைப்போகிளைசீமியா' என்ற நிலை ஏற்படலாம்.

குழந்தைகளின் வாழ்க்கை முறையில் மாற்றம் தேவையா?
டைப் - 1 கோளாறு இருக்கும் குழந்தைகள், அடிக்கடி ரத்த சர்க்கரையின் அளவை, பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். திட்டமிட்டு, முறையான, தேவையின் அடிப்படையில் உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இன்சுலின் உட்பட, டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் எடுக்க வேண்டும். சர்க்கரை கோளாறு, 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்து, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்காமல் இருந்தால், ரத்த நாளங்களை அதிகமாக பாதிக்கும். இதனால், கண்கள், சிறுநீரகங்கள், நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் வரலாம்.

டாக்டர் வசந்தி திருவேங்கடம்
குழந்தைகள் சர்க்கரை கோளாறு மருத்துவ ஆலோசகர்,
காஞ்சி காமகோடி சைலட் டிரஸ்ட் மருத்துவமனை,
சென்னை
044- 4200 1800

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
28-நவ-201910:30:02 IST Report Abuse
mohan ஆயிரக்கணக்கான வருடங்களாக , காலையில் எழுந்தவுடன் , நம் பெற்றோர், புளி தண்ணீர் கொடுப்பர்... தினமும் சாப்பிட்ட சாப்பாடு, கம்பு, கேழ்வரகு, அரிசி, தினை, சாமை, சோளம், இன்னும் பல கிழங்குகள், தோட்டத்தில் என்ன என்ன கிடைக்குமோ, அத்தனை காய் கறிகள், சுதந்திரம் வாகிய பின், நாகரீகம் என்கின்ற பெயரில், காலையில் தோசை, எப்படி இருக்கும்... தினமும், மூன்று வேலை, அரிசியின் மறு வடிவங்கள். தினமும், புளி தண்ணீருக்கு பதில், காபி, இதில் அளவுக்கு மீறிய சர்க்கரை, பூரியில், உப்பு.. தோசையில் உப்பு, என்னை, சர்க்கரை.. நீங்கள் தினமும் ஒரு ரூபாய் காயினை உண்டியலில் அறுபது வருடம் போட்டால், உண்டியலில் என்ன இருக்கும், ஒரு ரூபாய் காயின் தான் இருக்கும். அதே போல், நாகரீகம் என்ற பெயரில், சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் வடிவங்களை, தினமும், உண்ணும் போது , உடம்பு என்கின்ற உண்டியலில் என்ன இருக்கும். சர்க்கரையும், உப்பும் தான் இருக்கும்...சீனாவில், யாருமே சர்க்கரை எடுத்து கொள்வதில்லை, ஏனென்று கேட்டால், சர்க்கரை ரத்த திற்கு கேடானது என்கின்றனர்... நாம் இங்கே இனிப்பு என்கின்ற பெயரில் மூளை சலவை செய்ய பட்டு இருக்கிறோம், சற்று அறுபது வருடங்களுக்கு முன்பாக இருந்து.. காலையில் எழுந்தவுடன். முதல் நாள் இரவு செய்த கம்பங்க்கூழ் அல்லது கேழ்வரகு கூல் 6 மணிக்கு சாப்பிடுங்கள், எட்டு மணிக்கு களி சாப்பிடுங்கள், பதினோரு மணிக்கு, சுண்டல், அல்லது எதாவது ஒரு காய் சாப்பிடுங்கள், ஒரு மணிக்கு அரிசி சாதம் சாப்பிடுங்கள், மாலை ஐந்து மணிக்கு எதாவது ஒரு பலம் சாப்பிடுங்கள். ஏழு மணிக்கு கழிவறை செல்லுங்கள். எட்டு மணிக்கு, தினை, சாமை, சோளம் ஆகியவற்றின் சாதம் சாப்பிடுங்கள். இட்லீ, தோசை, ஆகியவற்றை மாதம் ஒரு முறை, எதாவது விசேஷம் என்றால், சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு இரு முறை கழிவறை செல்வதை வழக்க மாக கொள்ளுங்கள்...காலை ஐந்து மணி, மாலை ஏழு மணி..தினமும், காலை, மாலை, சாப்பிட்ட பின் ஒரு கிலோ மீட்டர் நடந்து பழகுங்கள்.. காலையில் ஐந்து மணிக்கு வாக்கிங் செல்வதை இதனுடன் சேர்க்க வேண்டாம்.. சமைக்க பட்ட பச்சை காய்கறிகளுடன், .purpil நிறமுள்ள , சிகப்பு நிறமுள்ள காய்கறிகளை சாப்பிடுங்கள்.. தினமும் குறைந்தது வயதிற்கேற்ப , மூன்று லிட்டர் தண்ணீர் இல் இருந்து 5 லிட்டர் தண்ணீர் வரை குடியுங்கள்.. திடமான சமுதாயத்தை பெறலாம். இதை படித்த பல பேர் சொல்வார்கள், இவன் என்னடா கிறுக்கனா.. காலையில் டிப்பன் சாப்பிட வேண்டாம் என்று சொல்லும் கூட்டம் தான் அதிகம்.. ஆம். நம் வாழ்க்கை பாதையை, கடந்த ஒரு நூற்றாண்டாக மாற்றி விட்டோம், அதனுடைய விளைவு, தான் முப்பது வயதில் இருந்து எல்லா மாத்திரைகளும்.. அலுவலக வேலை பளுவாக இருந்தால், தினமும், யோகாசன பயிற்சி செய்யவும்.. வாழ்க வளமுடன், உடல் பயிற்சி, ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரின், சுதர்சன கிரியா.. உலகத்தில் இதை தவிர வேறு ஒன்றும் வேண்டியதில்லை... ஒரு சில சதவிகித பேருக்கு நவீன சிகிச்சைகள் தேவை படலாம்.. அதற்காக, எல்லோரையும் அதில் சேர்க்க கூடாது.. கூடிய மட்டும், ஆரோக்கிய மான சமுதாயம் உருவாவதற்கு என்ன வழியோ , அதை பின் பற்ற லாம்...
Rate this:
Share this comment
Cancel
27-நவ-201920:28:55 IST Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani) குழைந்தைகளுக்கு ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா போன்றவற்றை தவிர்த்து காய்கறி சூப் கொடுத்தால் சர்க்கரையை தவிர்க்கலாம். நம் குழந்தைகளுக்கு நாமே தீங்கு விளைவித்துக்கொண்டிருப்பதை நிறுத்தவேண்டிய நேரம் இது
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
27-நவ-201918:15:06 IST Report Abuse
 Sri,India சூப்பர் தகவல் . பரம்பரை பரம்பரையாக சர்க்கரை நோய் வர மதுவே காரணம் ...மேலும் சிகரெட் , மது குடிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதே உண்மை . மலட்டுத்தன்மை பெற மதுக்கடைக்கு வாங்க என போர்டு வைக்க வேண்டும் அந்த அளவிற்கு நவீன நிரந்தர ஆண்மை நீக்க சிகைச்சையை மதுக்கடைகள் செய்கின்றன .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X