மனோரஞ்சிதம் பூ சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், அரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எம்.ரீகன் கூறியதாவது:பூந்தோட்டத்தில், மனோரஞ்சிதம் பூ ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளேன். இது, மரமாக வளரும் செடி என்பதால், அதிக இடைவெளி விட்டு செடிகளை நட்டுள்ளேன். 18 மாதங்களுக்கு பின், மனோரஞ்சிதம் பூ அறுவடைக்கு வரும். இந்த பூவுக்கு, சந்தையில் எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. மூன்று பூக்கள், 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.ஒரு ஏக்கர் நிலத்தில், மனோரஞ்சிதம் பூ சாகுபடி செய்தால், நீர் பாசனம் மற்றும் இயற்கை உர நிர்வாகத்தை முறையாக கையாண்டால், ஓராண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 98943 62484