பயறு வகை பயிர்களில், அதிக மகசூல் பெறுவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எஸ்.வீரராகவன் கூறியதாவது:கார்த்திகை பட்டத்தில், வேர்க்கடலை, எள், உளுந்து, பச்சை பயறு ஆகிய பயறு வகை பயிர்களை பயிரிடலாம். விதைப்புக்கு முன், ஏர் மற்றும் டிராக்டரில், நிலத்தை ஓட்டி பண்படுத்த வேண்டும். பின், கன ஜீவாமிர்த கரைசலை, நிலத்தில் ஊற்றி, உழவு செய்த பின், வேர்க்கடலை மற்றும் பயறு வகை களை விதைக்கலாம்.அவ்வாறு விதைக்கும் போது, வேர்க்கடலை உள்ளிட்ட பயறுகளில், தானியங்கள் திரட்சியாக வளர்ந்து, கூடுதல் மகசூல் கிடைக்கும். அதாவது, 15 மூட்டை மகசூல் பெறுமிடத்தில், 18 மூட்டைகள் மகசூல் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 98941 20278 கன ஜீவாமிர்தம் தயாரிப்புஇரண்டு கூடை உலர்ந்த மாட்டு சாணம், 5 லிட்டர் கோமியம், 5 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு வகை மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, ஒரு பேரலில் ஊறவைக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு பின், கடிகாரம் சுழலும் திசையில் நன்கு சுழற்றி, அந்த கரைசலை வயலில் தெளிக்க வேண்டும். நீர் பாசனத்தின்போது, நிலத்தில் தங்கிய கரைசல் நேரடியாக செடிகளின் வேருக்கு செல்லும்.