அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2019
00:00

அன்புள்ள சகோதரிக்கு —
நான், 75 வயதாகும் ஆண். மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி விட்டது. இரு பேரக் குழந்தைகள் உள்ளனர்.
நான், சொந்தமாக துணிக் கடை வைத்து, கார், பெரிய வீடு என்று வாழ்ந்தவன். பற்றாக்குறை இல்லாமல், வருமானத்துக்கு தக்கபடி குடும்பம் நடத்தியவன். வந்த மருமகள், ஆடம்பர பிரியை; வரவுக்குள் செலவு செய்ய தெரியாதவள்.
நாங்கள் குடியிருக்கும் வீடு, பழைய மாடலில் இருப்பதாக கூறி, அதை மாற்றி, புது மாடல் பங்களா கட்ட விரும்பினாள்.
'வியாபாரம் சற்று நலிந்துள்ளது. அதை சரி செய்த பின், வீட்டை புதுப்பிக்கலாம்...' என்று, மகனும், மனைவியும் கூறினர்.
ஆனால், இது எதையும் கண்டு கொள்ளாமல், தன் அப்பாவிடம் சொல்லி, வீட்டை புதுப்பிக்க, 'கான்ட்ராக்டரை' ஏற்பாடு செய்து விட்டாள். விஷயம் கை மீறி போனதும், கவுரவம் கருதி, இந்த ஏற்பாட்டுக்கு உடன்பட வேண்டியதாகி விட்டது.
வீடு புதிதாக, ஆடம்பரமான உள் அலங்காரம் என, கம்பீரமாக காட்சியளித்தது. இதற்காக பல லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டது.
தற்சமயம், துணிக் கடை நஷ்டமடையவே, விற்று விட்டோம். கிடைத்த பணத்தில் கொஞ்சம் கடனை அடைத்தோம். வீடும் அடமானத்தில் உள்ளது.
என் மகன், குறைவான சம்பளத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்கிறான்.
நானும், மனைவியும் தனியாக ஒரு குடிசை வீட்டில் வசிக்கிறோம். மகன் குடும்பம் தனியாக உள்ளது. அவன் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்படுகிறான். எங்களாலும் உதவ முடியாத நிலை. முதலாளியாக பல பேருக்கு சம்பளம் கொடுத்த நானும், வேறு ஒரு, 'ரெடிமேட்' துணி கடையில், மாத சம்பளத்துக்கு வேலைக்கு செல்கிறேன்.
இவ்வளவுக்கு பிறகும், மருமகள் திருந்தவில்லை. குழந்தைகளை உயர்தர, 'கான்வென்டில்' சேர்த்து, மேலும் மேலும் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறாள்; மகனும் இதை தடுக்க முடியாமல், விழி பிதுங்கிக் கொண்டுள்ளான்.
மருமகளை திருத்தவும், மீண்டும் வசதியுடன் வாழ்வில் உயரவும், வழி சொல்லுங்கள்.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரன்

அன்பு சகோதரருக்கு —
வீண் ஆடம்பரமும், கடன் வாங்குதலும், புற்றுநோயை விட ஆபத்தான உயிர்கொல்லிகள். குடி நோயாளி கூட, ஒருநாள் திருந்துவான். ஆனால், கடன் வாங்கி பழக்கப்பட்டவன், ஆயுளுக்கும் திருந்த மாட்டான். கடன் வாங்கும்போது, குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை திருப்பி தரவேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்.
ஏமாந்தவனிடம் கடன் வாங்கி, திருப்பி தராமல் ஏமாற்றி விடுவோம் என்ற எண்ணத்துடன், தொடர்ந்து கடன் வாங்க வாங்க, முற்றும் நனைந்த மனோபாவம் வந்து விடும். உங்கள் மருமகள் இந்த பட்டியலில் இருக்கிறாள்.
மருமகளின் வீண் ஆடம்பரத்தை கண்டித்து, தடுக்காதது உங்களின் குற்றமே.
பல லட்சம் செலவு செய்து வீட்டை புதுப்பிக்க, உங்கள் மருமகள் கிளம்பும்போதே, நீங்கள் நெற்றிக்கண் காட்டி தடுத்திருக்க வேண்டும். அப்போதே தடுக்காமல், வீண் புலம்பல் எதற்கு?
மேலும், இரு பேரக் குழந்தைகளை, உயர்தர, 'கான்வென்டில்' சேர்ப்பதை, நீங்களும், உங்கள் மகனும் கறார் கண்டிப்புடன் தடுத்து, அரசு பள்ளியில் சேர்த்திருக்கலாம்.

மாமனார் ஸ்தானத்தில் நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பார்ப்போம்...
* மருமகள் என்ன படித்திருக்கிறாள் என்பதை, உங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. அவளை ஏதேனும் வேலைக்கு அனுப்புங்கள். ஒவ்வொரு ரூபாய் சம்பாதிக்கவும் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது என்பதை உணர்வாள்; பணத்தின் அருமை புரிபடும். வீண் ஆடம்பரமும், கடன் வாங்குதலும் எவ்வளவு தவறான விஷயங்கள் என்பதை, ஒரு மனநல ஆலோசகர் மூலம், மருமகளுக்கு வலியுறுத்துங்கள். தவறான வழிகாட்டல் வேண்டாம் என, சம்பந்தி வீட்டாரை கண்டியுங்கள். மருமகள் திருந்தினாலே, கவிழ்ந்த உங்கள் குடும்பம் மீண்டும் தலைதுாக்கும்
* இரு பேரக் குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேருங்கள். வீட்டிலேயே துணி வியாபாரம் செய்யுங்கள். இது, தற்காலிக ஏற்பாடு
* அடுத்த, 10 ஆண்டுகளுக்கு, 10 ஆண்டு திட்டம் வடிவமையுங்கள். அடமானத்தில் உள்ள வீட்டை நல்ல விலைக்கு விற்று, அடமான தொகையை கட்டியது போக மீதி பணத்தை, இரண்டாக பிரியுங்கள். ஒரு பங்கில், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் நிலம் வாங்கி, எளிமையாக ஒரு வீட்டை கட்டுங்கள் அல்லது சொற்ப விலைக்கு ஏற்கனவே கட்டிய வீட்டை வாங்குங்கள். இரண்டாவது பங்கில், புதுப்பிக்கப்பட்ட நிர்வாகத்திறனுடன் ஒரு மிகச்சிறிய துணிக்கடையை மீண்டும் ஆரம்பியுங்கள்
* கடை வருமானம், குடும்ப செலவுகளை, தினசரி கணக்கு எழுதுங்கள். 10 ரூபாய் வரவு வந்தால், செலவு, எட்டு ரூபாயை தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
* உங்களது சீர்திருத்தங்களுக்கு, மருமகள் அடங்க மறுத்தால், அவளது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். சிறிது காலம் கணவரையும், குழந்தைக ளையும் பிரிந்திருந்தால், அவள் திருந்த வாய்ப்பு உண்டு
* கஞ்சத்தனம் வேறு, சிக்கனம் வேறு. ஆடம்பரம் அறவே கூடாது. கடன் வாங்காமல் வருமானத்திற்குள் வாழ வேண்டும் என்பதை, பேரக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்
* வீட்டில் நான்கு கைபேசி இருந்தால், இரண்டாக குறையுங்கள். 45 வயது மகனை, நவீன உலகத்தில் வெற்றிகரமாய் வாழக்கூடிய குடும்பஸ்தனாக மாற்றுங்கள்
* கிடைக்கும் சொற்ப வருமானத்திலும் சிறிதளவை சேமிக்க பழகுங்கள். பூட்டுகள், சாவி இல்லாமல் உருவாக்கப் படுவதில்லை. அழுது புலம்பாமல், பிறர் மீது குற்றச்சாட்டு வைக்காமல், துவண்டு விழாமல், சமயோசிதமாக செயல்பட்டால், வெற்றி நமதே.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.B.RAM - bangalore,இந்தியா
09-டிச-201915:37:42 IST Report Abuse
V.B.RAM மருமகளை திருத்தவும், மீண்டும் வசதியுடன்???? வேண்டாம் பெரியவரே தயவுசெய்து சொல்கிறேன் , வன்கொடுமை, வரதட்சிணை கொடுமை என்று ஏதாவது பொய் கேசு போட்டு கணவன் , நீங்கள், உங்கள் மனைவியை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவாள், ஜாக்கிரதை,
Rate this:
Share this comment
Cancel
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
08-டிச-201918:55:08 IST Report Abuse
வழிப்போக்கன் ஏமாந்த மருமகள் மீது பழி .. இவர் எழுதியதில் - கவுரவம் பார்க்க அதற்கு உடன்பட நேரிட்டது - இதில் இருந்து தெரிவது என்ன ? இவருக்கும் அந்த "வில்லி " மருமகளின் வருங்கால திட்டம் பிடித்தது புது வீடு பெருமை தந்தது ஏன் அவருக்கு மரியாதை கூட , ( போலி ) கவுரவம் பார்த்தது யார் ? மருமகளா அல்லது இந்த அறிவில்லாத வயதானவரா .. அந்த திட்டம் சில தடுமாற்றங்களால் கடனில் தள்ள உடனே வந்தவள் மீது பழி தன வயது - குடிசையில் வாழ்கிறேன் - என்ற சுய பச்சாதாபம் .. அந்த வீடு உங்கள் மகனின் வீடு (எழுதி தந்து விட்டால் ) அது அவரின் பொறுப்பு ஒருவேளை மருமகளிடம் கடை பொறுப்பை தந்து இருந்தால் (ஆணாதிக்கம் பார்க்காது ) அவரும் நவீன ரகமாக அதனை இளைய சமுதாயம் கண்ணில் பட மாற்றி விற்பனையை அதிகரித்து இருக்க கூடுமே ? அதனை விட்டு வயதானவர் மட்டுமே என்று கடை வைத்து இருந்தால் எப்படி பிசினஸ் நடக்கும் ? யாருக்கு வியாபார புத்தி இல்லை ? துணிக்கடை நஷ்டம் என்பதை போகிற போக்கில் சொல்வது .. அத்னை ஆராய முடியவில்லை .எளிய வியாபார பொருளாதாரமே தெரியவில்லை மேலும் கடன் வாங்கி கல்வி கற்பது நல்லதே (பிச்சை புகினும் கற்பது நன்றே - அதனை அசுரத்தனம் ஆக அசுரன் படத்தில் கூட நம் தமிழர்களுக்கு புரியும் மாறு சொல்லி இருப்பார்). வீடு நிலம் கடனில் காணாமல் போகலாம் ஆனால் கல்வி போகாது ஆகையால் மருமகளை குறை சொல்வதை நிறுத்துங்கள் . உங்கள் மகன் சமாளிக்க முடியவில்லை எனில் அவனை "வளர்க்க பாருங்கள் ". உங்கள் தோல்விகளை மருமகளின் மீது சுமத்தாதீர்கள் . அட வயதாகி விட்டதே இப்பொழுதேனும் உண்மையாக இருக்கலாமே எரிச்சல் அடையும் மற்றவர்கள் மூடி கொண்டு அமருங்கள் .. இதனை எழுதியவர் என்னவோ என் கருத்தை படிக்க போவதில்லை
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle Belgaum,இந்தியா
09-டிச-201910:05:53 IST Report Abuse
தாண்டவக்கோன்அறிவில்லாதா வயதானவரா USA வில் இருந்தால் எதோ பெரிய அப்பாடக்கர் என்று பலபேருக்கு நினைப்பு .. பிச்சை புகினும் கற்பது நன்றே தான் அதுக்குன்னு கடன் வாங்கி கான்வென்டில் தான் படிக்கவேண்டும் என்று யாரும் கூறவில்லை .....
Rate this:
Share this comment
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
10-டிச-201900:41:54 IST Report Abuse
HoustonRajaஇந்த முதியவர், தன் மகன் தனது கட்டுப்பாட்டில் இல்லாமல் தனது மருமகளின் பேச்சை கேட்டு நடக்கிறானே என்ற கோபத்தில் (Judgemental Anger) மருமகளின் மீது பழி போடுவதாகவே தெரிகிறது.. வீடு புதுப்பித்தலில் விருப்பமில்லை, ஆனால், அதன் விளைவு இவருக்கு பிடித்திருக்கிறது.. (இந்த கடிதத்தில் தெரியும்) உட்சபற்ற புகார், வசதிக்கு மீறி கான்வென்டில் படிக்க வைப்பது.. மற்றபடி, வியாபாரம் நொடிந்ததற்கோ, பணப்பிரச்னைகளுக்கோ இவரே கூட மருமகளை நேரடியாக குற்றம் சாட்டவில்லை.. தலைமுறை இடைவெளியும், மருமகள் ( பொதுவாகவே, பெண்கள்) ஆண்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்ற இவரின் "தற்காலத்திற்கு பொருந்தாத" எதிர்பார்ப்பும் தான் இந்த கடிதத்தில் தெரியும் தெளிவான பிரச்சனை.....
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
10-டிச-201904:51:04 IST Report Abuse
கதிரழகன், SSLCஇந்த வழி போக்கன் வேணுமினே ஊடு சால் பாய்வாரு...
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-டிச-201916:57:39 IST Report Abuse
D.Ambujavalli ‘அடங்கா மனைவி அடிமைப் புருஷன் குடும்பத்துக்கு ஆகாது, ஆனையைப் போலே பூனை தின்றால் ஜீரணமாகாது’ என்ற பாடலுக்கு உதாரணமாக உள்ளது இந்தப் பதிவு குடும்பம் முழுக்க காரணமாக மருமகள் இருந்தால், பொறுமை மீறிய நிலையில். அவளைக் ‘கழட்டி’ விட்டு குடித்தனத்தைக் காப்பதிலும் தவறில்லை இந்த அளவு ஆடம்பரத்தில் ருசியுள்ளவள் திருந்துவது அரிது
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle Belgaum,இந்தியா
09-டிச-201910:10:10 IST Report Abuse
தாண்டவக்கோன்கருத்து அருமை .. மேன்மக்கள் மேன்மக்களே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X