தொடரும் ஓ.எஸ். குறிப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2011
00:00

சென்ற இதழில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பான சில சொற்களுக்கான விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை வரவேற்று பல வாசகர்கள் எழுதி உள்ளனர். கம்ப்யூட்டர் அறிவியல் படிக்கும் மாணவர்கள் பலர், தாங்கள் ஏற்கனவே சொற்களை அறிந்து பயன்படுத்தி இருந்தாலும், பல கூடுதலான தகவல்கள் கம்ப்யூட்டர் மலரில் தரப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இன்னும் சில தொழில் நுட்ப சொற்களுக்கு விளக்கம் தரவும் எனக் கேட்டு, பல சொற்களையும் குறிப்பிட்டு அனுப்பி உள்ளனர். இவர்களின் விருப்பத்திற்கிணங்க, ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பான மேலும் சில தொழில் நுட்பச் சொற்களுக்கு விளக்கம் இங்கே தரப்படுகிறது.
1. Embedded Object (எம்பெடட் (பதித்தல்) ஆப்ஜெக்ட்): அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில் உருவாக்கப்பட்டு, இன்னொரு அப்ளிகேஷனில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டில் பதிக்கப்படும் ஆப்ஜெக்ட். எடுத்துக்காட்டாக அடோப் போட்டோஷாப் அல்லது எம்.எஸ். பெயிண்ட் புரோகிராமில் உருவான ஆப்ஜெக்ட் ஒன்றை, வேர்ட் டாகுமெண்ட்டில் எம்பெட் செய்வது. ஆப்ஜெக்ட் அல்லது படத்தினை அப்படியே ஒட்டாமல், எம்பெட் செய்வதன் மூலம் அந்த ஆப்ஜெக்டின் ஒரிஜினல் பார்மட் அப்படியே வைக்கப் படுகிறது. இவ்வாறு பதிக்கப்பட்ட ஒரு ஆப்ஜெக்ட்டை, அதன் ஒரிஜினல் புரோகிராம் மூலம் எடிட் செய்திடலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஆப்ஜெக்ட் ஒன்றைப் பதித்திட OLE (Object Linking and Embedding) என்று அழைக்கப்படும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
2. Event (நிகழ்வு): புரோகிராம் ஒன்றினால், அறியப்படும் ஒரு நிகழ்வு. கம்ப்யூட்டர் செயலாக்கம் அனைத்துமே, நிகழ்வுகளின் தொடர்ச்சியே. எடுத்துக் காட்டாக, மவுஸ் கிளிக் செய்வது ஒரு நிகழ்வு. கீ ஒன்றினை அழுத்துவது மற்றொரு நிகழ்வு. மேக் இன்டோஷ் மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தும் இத்தகைய நிகழ்வுகளாலேயே இயக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதில் செயல்பாடுகள் தான் சிஸ்டம் செயல்பாடுகள்.
3. File Handle (கோப்பு அடையாள எண்): பைல் ஒன்று திறக்கப்படுகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதற்கென ஓர் எண்ணை ஒதுக்குகிறது. இதனையே பைல் ஹேண்டில் என அழைக்கிறோம். பைலை ஆப்பரேட்டிங் சிஸ்டம் அணுகுகையில், பைல் ஹேண்டிலைப் பயன்படுத்தும். இந்த பைல் ஹேண்டில் களுக்கென கம்ப்யூட்டரின் மெயின் மெமரியில் தனி இடம் ஒதுக்கப்படும். இந்த மெமரியின் அளவைப் பொறுத்து, எத்தனை பைல் ஹேண்டில்கள் இங்கு தங்க வைக்கப்படலாம் என்பது முடிவாகும். அதாவது ஒரே நேரத்தில் எத்தனை கோப்புகள் திறக்கப்பட்டு பயன்படுத்தப் படலாம் என்பதனை அறியலாம். டாஸ் மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், அதிக பட்சம் எத்தனை பைல்கள் திறக்கப்படலாம் என்பதனை CONFIG.SYS என்ற பைலில் உள்ள FILES= என்ற ஸ்டேட்மெண்ட்டில் வரையறை செய்திடலாம்.
4. Interrupt (நிகழ்வினைச் சுட்டும் ஒரு சிக்னல்): ஒரு புரோகிராம் இயங்கு கையில், நிகழ்வு ஒன்று ஏற்படும் போது, அதனை, புரோகிராமிற்கு எடுத்துக் காட்டுவது இந்த இன்டரப்ட் எனப்படும் சிக்னல் ஆகும். இது போன்ற ஒரு சிக்னல் கிடைக்கையில், அந்த புரோகிராம் அதற்கான குறிப்பிட்ட செயல்பாட்டினை மேற்கொள்ளும். இவ்வாறு ஒரு சிக்னல் அனுப்பப்படுகையில், புரோகிராம் தன் தொடர் செயல்பாட்டினைத் தற்காலிக மாக நிறுத்தி வைத்து, சிக்னலுக்கான செயல்பாட்டில் இறங்கும். இன்டரப்ட் சிக்னல்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு கீ அழுத்தலும், ஒரு இன்டரப்ட் சிக்னலை அனுப்பும். பிரிண்டர் போன்ற பிற துணை சாதனங்களும் இன்டரப்ட் சிக்னல்களை அனுப்பலாம். இந்த வகை இன்டரப்ட் hardware interrupt என அழைக்கப்படுகிறது. புரோகிராம் ஒன்றினால், ஏற்படுத்தப்படும் சிக்னல்கள் software interrupt என அழைக்கப்படுகின்றன. இதனை a trap அல்லது an exception எனவும் அழைக்கின்றனர். பொதுவாக, ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர், 256 வகையான சாப்ட்வேர் இன்டரப்ட் மற்றும் 15 வகையான ஹார்ட்வேர் இன்டரப்ட்களை சப்போர்ட் செய்கிறது.
5. Job (பணி): கம்ப்யூட்டர் சிஸ்டம் செயல்படுத்தும் ஒரு வேலைக்கு Job என்று பெயர். இந்த வேலை ஒரே ஒரு புரோகிராம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களால் மேற்கொள்ளப் படலாம்.
6. Kernel கெர்னல் (மையம்): ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றின் மத்திய தொகுப்பு. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதலாவதவாக லோட் செய்யப்படும் பகுதி இதுதான். மெயின் மெமரியில் எப்போதும் இடம் பெறும். மெமரியில் எப்போதும் இருப்பதால், இது அளவில் சிறியதாக இருப்பது நல்லது; சிறியதாகவே இருக்கும். ஆனால் அதே நேரத்தில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மற்ற பகுதிகளுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் தந்து கொண்டே இருக்கும். இதன் முக்கிய சேவைகளைக் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், மெமரி நிர்வாகம், செயல்பாடு, செயல்பாடுகளின் நிர்வாகம், டிஸ்க்கை செயல்படுத்தல் ஆகியவற்றைக் கூறலாம்.
7. MBR மாஸ்டர் பூட் ரெகார்ட்: கம்ப்யூட்டர் பூட் செய்யப்படுகையில், இயக்கப்படும் முதல் புரோகிராம். எனவே ஹார்ட் டிஸ்க்கின் முதல் செக்டாரில் இது தங்கிச் செயல்படும். பூட் செயல்பாட்டி னை இது தொடங்கி வைக்கும். இதற்கு பார்ட்டிஷன் டேபிள் என்ற அமைப்பைப் பார்த்து, எந்த பிரிவில் இயக்கத் தொடக்கத்தினை மேற்கொள்ளலாம் என்று கணித்து மேற்கொள்ளும். பின்னர், புரோகிராமைக் கட்டுப்படுத்துவதனை, அந்த பிரிவில் உள்ள பூட் செக்டாருக்கு மாற்றிவிடும். பூட் செயல்பாட்டினை அது தொடர்ந்து எடுத்துக் கொள்ளும். டாஸ் மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், FDISK/MBR என்ற கட்டளையுடன், MBR புரோகிராமினை நீங்கள் உருவாக்கலாம்.
இது குறித்து படிக்கையில், உங்கள் மனதில் MBR virus என்ற பெயர் நினைவிற்கு வரலாம். இந்த வைரஸ் ஒரு பொதுவான அபாயகரமான வைரஸ். மாஸ்டர் பூட் ரெகார்ட் புரோகிராமிற்குப் பதிலாக, தன் குறியீடுகள் அடங்கிய புரோகிராமினைப் பதிந்து வைக்கும். ஒவ்வொரு முறை கம்ப்யூட்டர் தொடங்கும்போதும் MBR செயல்படுத்தப் படுவதால், இது மிகவும் ஆபத்தான விளைவுகளைத் தரும். முன்பு இந்த வகை வைரஸ் மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. குறிப்பாக பிளாப்பி டிஸ்க் வழியாக இவை பரவின.
8. Task Switching (டாஸ்க் ஸ்விட்சிங்) பணி மாற்றம்: புரோகிராம் ஒன்றில் செயல் பட்டுக் கொண்டிருக்கையில், இன்னொரு புரோகிராமில் இயங்கும் பணியை மேற்கொள்ளும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சூழ்நிலையை இந்த சொற்கள் குறிக்கின்றன. டாஸ் சிஸ்டத்திலும் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள பல பயன்பாடு புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இது multitasking என்பதல்ல. multitasking பணியில், சி.பி.யு. புரோகிராம்களுக் கிடையில், முன்னும் பின்னுமாக இயங்கி, அனைத்து புரோகிராம்களையும் ஒரே நேரத்தில் இயக்கும். எடுத்துக்காட்டாக, இணையத்தில் ஒரு தளத்தினை பார்த்து, அதன் பக்கத்தில் உள்ள தேவைப்பட்ட டெக்ஸ்ட்டை காப்பி செய்து, அடுத்த பக்கத்திற்கு செல்ல, அதற்கான லிங்க்கில் கிளிக் செய்கிறீர்கள். உடனே, டெக்ஸ்ட் எடிட்டர் ஒன்றைத் திறந்து, காப்பி செய்த டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்கிறீர்கள். பேஸ்ட் செய்திடும் நேரத்தில், உங்கள் பிரவுசர், பார்க்கப்பட்டுக் கொண்டிருக் கும் தளத்தின் அடுத்த பக்கத்தைத் திறக்க முயற்சி எடுத்துத் திறக்கும்.
Task Switching பணியில் சி.பி.யு. முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த புரோகிராம்களில் இயங்குவதில்லை. ஒரு நேரத்தில் ஒரே ஒரு புரோகிராமினை மட்டுமே இயக்கும். ஆனால், மாற்றத்தினை மிக அழகாக எடுத்துக் கொடுக்கும். இதனைச் சில வேளைகளில் context switching என்றும் அழைக்கின்றனர்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X