கவனத்திற்கு | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
கவனத்திற்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 மே
2011
00:00

ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio): ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன.

பூட் டிஸ்க் (Boot Disk): கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவையான சிஸ்டம் பைல்களைக் கொண்ட, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிடி அல்லது டிவிடி. பொதுவாக, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான், பூட் டிஸ்க்காக இருக்கும். இதில் பிரச்னை ஏற்படுகையில், சிஸ்டம் பைல்கள் கொண்ட பூட் டிஸ்க் மூலம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம்.

அனலாக் (Analogue): எந்த ஒரு சிக்னல் தன் மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக் காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்களிலிருந்து வேறுபடு கின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புகளுக் கிடையே மாறுகின்றன. இதனை உணர, தொடர்ந்து வேகமாக நகரும் நொடி முள் கொண்ட கடிகாரத்தின் முகப் பக்கத்தினையும், டிக் டிக் என ஒவ்வொரு விநாடியாக நகரும் விநாடி முள் கொண்ட கடிகார த்தை யும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முதலில் குறிப்பிட்டது அனலாக் சிக்னல் தருவதாகும். இரண்டாவது டிஜிட்டல் சிக்னல். இரண்டாவதாகச் சொன்னது, ஒவ்வொரு எண்ணாக, ஒரே மதிப்பில் மாறுகிறது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X