இறைவனை சென்றடையும் பொங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2010
00:00

வாரியார் அருளுரை
* இறைவனுக்கு நிவேதனம் செய்த சர்க்கரைப் பொங்கல் ஏழைகளின் வயிற்றுக்கு வராது. ஏழைகளுக்கு இட்ட சர்க்கரைப் பொங்கல், இறைவனைச் சென்றடைந்து விடும்.
* வயலில் என்ன விதைக்கின்றோமோ அதுவே விளைந்து நமக்கு பலன்தரும். அதுபோல பிறருக்கு நாம் என்ன செயல் செய்கிறோமோ அதுவே நமக்கு வினைபயனாக வந்து இன்பதுன்பங்களைக் கொடுக்கும்.
* உயிருக்கு உயிராக இறைவன் இருக்கிறார். எனவே தான் மனிதன் மற்றவர்களுக்குச் செய்யும் தொண்டினைக் கடவுள் தனக்குச் செய்ததாக எடுத்துக் கொள்கிறார். பிறருக்கு உதவுகின்ற குணநலன் கொண்ட மனிதன் உயர்வடைவான்.
* நாம் செய்த நல்வினை, தீவினை பயன்களை நாம் அனுபவித்தே தீர வேண்டும். அதனால், செய்யும் செயல் ஒவ்வொன்றையும் நன்மையுடையதாக பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.
* சங்கீதம், கவித்துவம், துணிச்சல், தானதர்மம் ஆகிய நான்கு குணங்களும் நம்முடன் பிறவியிலே ஒட்டிக் கொண்டு வந்து பலன்தருபவையாகும்.
*பசு வாழ்ந்தால் பால் கொடுக்கும். பாம்பு வாழ்ந்தால் நஞ்சு கொடுக்கும். அதனால் பாம்புக்குப் பால் வார்ப்பது போல தீயவர்களுக்கு உதவாதீர்கள். பசுவுக்கு புல் இடுவதுபோல, நல்லவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுங்கள்.
*பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியவழிநடப்பவர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் அழிந்துபோகும்.
* நாம் எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். ஆனால், நன்றி மறந்த பாவத்தைச் செய்தால் தெய்வம் ஒருபோதும் மன்னிப்பதில்லை.
* பிறர் குற்றங்களை மன்னித்து விடுவது மனிதத்தன்மை. அதை அப்படியே மறந்து விடுவது தெய்வீகத்தன்மை. அத்தன்மையை உண்மையான பக்தியால் மட்டுமே பெறமுடியும்.
* நம் உடம்பின் நிழல் நம்மைத் தொடர்ந்து விலகாது வருவதைப் போல, நாம் செய்த நல்வினையும், தீவினையும் என்றும் நம்மை விட்டு நீங்காமல் பிறவிதோறும் கூடவே வரும்.
* பசுவுக்கு உணவினை அதன் வாயில் தந்துவிட்டு மடியில் பாலைக் கறக்கிறோம். அதுபோல நல்லவர்களுக்கு உதவி செய்தால் ஆண்டவனாகிய மடியில் திருவருளைப் பெற்று வாழலாம்.
* திருமால் குறள் (வாமனர்) வடிவம் கொண்டு இரண்டடியால் மூவுலகையும் அளந்தார். அதுபோல திருவள்ளுவர் இரண்டடியால் எல்லா உலகங்களையும் அளந்துவிட்டார். படிப்பதற்கு எளிமையும், பெருமையும் மிக்க திருக்குறள் வழி நடந்தால் வாழ்வில் இன்பம் ஊற்றெடுக்கும்.


Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரராஜன் - தற்போதுகனெக்டிகட்அமெரிக்காவில்,இந்தியா
15-அக்-201021:30:20 IST Report Abuse
சுந்தரராஜன் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளுரைகள் அனைத்தும் அருமையிலும் அருமை. இன்று அவர் நம்மிடம் இல்லையே என ஏங்குகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X