தமிழகம்
ஜன.,2: மேகதாது அணைக்கு எதிராக லோக்சபாவில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.பி.,க்கள் 24 பேர் ஐந்து நாள் சஸ்பெண்ட்.
ஜன.,7: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து.
*1998ல் பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டு சிறை. பதவி பறிபோனது.
ஜன.,9: தமிழக அரசின் ரூ. 1000 பொங்கல் பரிசுக்கு உயர்நீதிமன்றம் தடை.
ஜன.,21: விராலிமலை ஜல்லிக்கட்டில் 9 மணி நேரத்தில் 1353 காளைகள் பங்கேற்று உலக சாதனை.
ஜன.,23: உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது.
மதுரையில் 'எய்ம்ஸ்' - ஜன.,27: மதுரையில் ரூ. 1,264 கோடி மதிப்பில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல். 2022க்குள் பணி முடிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
ஜன.,30: ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 'ஜாக்டோ ஜியோ' நடத்திய 9 நாள் போராட்டம் வாபஸ்.
இந்தியா
ஜன.,1: ஆந்திரா, தெலுங்கானா உயர்நீதிமன்றங்கள் தொடக்கம்.
*மத்திய தலைமை தகவல் ஆணையராக சுதீர் பார்கவா பொறுப்பேற்பு.
ஜன.,2: சபரிமலை கோயிலில், 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்களான பிந்து, கனகதுர்கா தரிசனம்.
ஜன.,4: மல்லையாவை, 'பொருளாதார குற்றவாளி' என மும்பை நீதிமன்றம் அறிவிப்பு.
ஜன.,8: சீனாவுக்கான இந்திய துாதராக விக்ரம் மிஸ்ரி பொறுப்பேற்பு.
*சி.பி.ஐ., இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
ஜன.,14: உயர்வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா அமல்.
மேளா... கும்பமேளா - ஜன., 15: உ.பி.,யின் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் இணையும் 'திரிவேணி சங்கமத்தில்' 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 'அர்த்த கும்பமேளா' துவக்கம். 55 நாட்கள் நிகழ்வில் 12 கோடி பேர் பங்கேற்பு.
'ஏழு' அதிசயம் - ஜன., 15: கோல்கட்டாவின் சத்யாரூப் சித்தாந்தா 35, ஏழு ஆண்டுகளில் ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகள், ஏழு எரிமலைகளில் ஏறிய உலகின் இளம் வீரரானார். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.
ஜன.,20: காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு.
ஜன.,23: மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா பயணம்.
*மும்பையில் ரூ. 100 கோடி செலவில் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல்.
*டில்லியில் நேதாஜி மியூசியத்தை பிரதமர் மோடி துவக்கினார்.
ஜன.,27: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலுக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயரிடப்பட்டது.
ஜன.,28; உலக இரும்பு உற்பத்தியில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்.
உலகம்
ஜன.,1; பிரேசில் அதிபராக ஜேர் பொல்சோனாரோ பதவியேற்பு.
*சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக, இந்தியாவின் கீதா கோபிநாத் நியமனம்.
ஜன.,7: வங்கதேச பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றார் ஷேக் ஹசீனா.
நீர் 'ஹீரோ' - ஜன., 14 முல்லைப்பெரியாறு அணையை தனது சொத்தை விற்று கட்டினார் பிரிட்டன் பொறியாளர் பென்னிகுக். தென் மாவட்ட மக்கள் நீர்வளம் பெற்று வாழ வழி செய்தார். தேனியில் இருந்து அனுப்பப்பட்ட பென்னிகுக் சிலை, லண்டனில் அவரது கல்லறை அருகே திறப்பு.
ஜன.,15: கென்யாவின் நைரோபியில் ஷாப்பிங் மாலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 21 பேர் பலி.
ஜன.,16: பிரிட்டன் பார்லிமென்ட்டில் 'பிரக்சிட்' ஒப்பந்தம் தோல்வி.
ஜன.,19: மெக்சிகோவில் பெட்ரோல் குழாயில் ஏற்பட்ட விபத்தில் 85 பேர் பலி.
ஜன.,20: மடகாஸ்கர் அதிபராக ஆன்ட்ரி ரஜோலினி பொறுப்பேற்பு.
உலகின் 'சீனியர்' - ஜன., 20: உலகின் வயதானவரான ஜப்பானின் மசாசோ நோனாக்கா 113, மரணம்.
ஜன.,22 : ஆப்கனின் உளவுத்துறை பயிற்சி மையத்தில் தலிபான் பயங்கர வாதிகள் தாக்குதலில் 65 பேர் பலி.
ஜன.,24: வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக போராட்டம். எதிர்க்கட்சி தலைவர் ஜூயன் கைடோ பொறுப்பு அதிபராக அறிவிப்பு.
ஜன.,25: மலேசிய மன்னராக சுல்தான் அப்துல்லா தேர்வு.
*பாகிஸ்தானின் தேசிய பானமாக 'கரும்பு ஜூஸ்' தேர்வு.
ஜன.,26: பிரேசிலில் இரும்பு தாது சுரங்கம் அருகே இருந்த அணை உடைந்ததில் 248 பேர் பலி.
ஜன.,28: உலக சுகாதார நிறுவனத்தின் தெற்காசிய மண்டல இயக்குநராக பூனம் கேத்ரபால் சிங் நியமனம்.
முதல் நீதிபதி - ஜன., 29: பாகிஸ்தானில் மாவட்ட சிவில் நீதிபதியாக சுமன் குமாரி பொறுப்பேற்பு. இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் ஹிந்து பெண் இவர். சிந்து மாகாணத்தில் பிறந்தார். இந்தியாவின் ஐதராபாத்தில் இளநிலை சட்டப் படிப்பும், கராச்சியில் முதுநிலை சட்டப்படிப்பும் முடித்தார்.