தமிழகம்
பிப்.,8: கொடநாடு கொலை வழக்கில் சயான் மற்றும் மனோஜூக்கு ஜாமீனை நீலகிரி நீதிமன்றம் ரத்து செய்தது.
பிப்.,10: திருச்சி விமானநிலைய ஒருங்கிணைந்த கட்டடம், சென்னை, திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை, சென்னை வண்ணாரபேட்டை - டி.எம்.எஸ்., மெட்ரோ ரயில் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கினார்.
பிப்.,13: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ. ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா தாக்கல்
பிப்.,15: உடுமலையில் அச்சுறுத்திய 'சின்னதம்பி' யானை, கும்கி யானைகள் உதவியுடன் டாப் சிலிப் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிப்.,18: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை.
பிப்.,23: விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க., எம்.பி., ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்.
பிப்.,24: சென்னை போரூரில் தனியார் வாகன காப்பக தீ விபத்தில் 176 கார்கள் எரிந்து நாசம்.
பிப்.,27: பாம்பன் துாக்கு பால பராமரிப்பு பணி முடிவு. ரயில் சேவை 84 நாட்களுக்குப்பின் தொடக்கம்.
*சென்னை கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு வளைவு திறப்பு.
இந்தியா
பிப்.,2: சி.பி.ஐ., இயக்குநராக ஆர்.கே. சுக்லா நியமனம்.
*அமெரிக்காவிடம் இருந்து 73 ஆயிரம் நவீன ரைபிள் துப்பாக்கிகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்.
பிப்.,3: சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கில் மேற்குவங்க டி.ஜி.பி., ராஜிவ் குமாரிடம் விசாரணை நடத்த வந்த சி.பி.ஐ., அதிகாரிகள், மாநில போலீசாரால் கைது. மாநில உரிமையை மத்திய அரசு மீறுவதாக முதல்வர் மம்தா போராட்டம்.
பிப்.,6: அன்னிய செலாவணி வழக்கில் ராபர்ட் வத்ரா, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்.
பிப்.,11: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு டில்லியில் உண்ணாவிரதம்.
பிப்.,12: டில்லி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி.
*பார்லிமென்ட் மைய மண்டபத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படம் திறப்பு.
பிப்.,14: இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்த்ரா நியமனம்.
எல்லைமீறிய தாக்குதல் - பிப்., 14: காஷ்மீர் புல்வாமாவில் பாக்., ஆதரவு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி, சி.ஆர்.பி.எப்., வாகனம் மீது நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், தமிழகத்தின் இருவர் உட்பட 40 வீரர்கள் வீரமரணம்.
பிப்.,15: நிதியமைச்சர் பொறுப்பை அருண்ஜெட்லி மீண்டும் ஏற்றார்.
*நாட்டின் அதிவேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் மோடி துவக்கினார்.
பிப்.,19: இந்தியா முழுவதற்கும் ஒரே அவசர கால எண்ணாக 112 அறிமுகம்.
பிப்.,20: சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வருகை.
பிப்.,21: அசாமில் கள்ளச்சாரயம் குடித்ததில் 100 தேயிலை தொழிலாளர்கள் பலி.
பிப்.,23: பெங்களூரு எலஹங்கா விமானப்படை தளத்தில் நடந்த சர்வதேச விமான கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களின் 300 கார்கள் தீயில் சேதம்.
பிப்.,24: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கினார்.
வான் வீரன் - பிப்., 27: இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாக்., எப்., 16 விமானத்தை இந்திய 'விங் கமாண்டர்' அபினந்தன் சுட்டு வீழ்த்தினார். இவரது 'மிக்- 21' விமானம் பாக்., எல்லைக்குள் விழுந்தது. பாராசூட் மூலம் தப்பிய இவரை பாக்., ராணுவம் சிறைபிடிப்பு. மார்ச் 1ல் விடுவிப்பு.
பிப்.,28: ரயில்வேயில், 'கிழக்கு கடலோர ரயில்வே' என்ற புதிய மண்டலம் துவக்கம்.
உலகம்
பிப்.,4: போப் பிரான்சிஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருகை. அரபு நாடுகளுக்கு சென்ற முதல் போப் ஆனார்.
பிப்.,10: கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரிட்டன் இளவரசர் பிலிப் 97, ஓட்டுநர் உரிமத்தை திருப்பி அளித்தார்.
ஹிந்திக்கு கவுரவம் - பிப்., 11: அபுதாபி நீதிமன்றங்களில் மூன்றாவது அலுவல் மொழியாக ஹிந்தி சேர்ப்பு.
பிப்.,12: கிரீஸ் நாட்டுடன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, மெசிடோனியா நாடு, வடக்கு மெசிடோனியா என மாற்றம்.
பிப்., 23: ஐ.நா., வுக்கான அமெரிக்க துாதர் நிக்கி ஹேலி ராஜினாமா.
பிப்., 13: ஈரானில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதலில் 27 வீரர்கள் பலி.
பிப்., 20: வங்கதேசத்தில் ரசாயான கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 70 பேர் பலி.
சரியான பதிலடி - பிப்., 26: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப்படையின் 'மிராஜ் -2000' போர் விமானங்கள் பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி தாக்கியது. பயங்கரவாதிகள் சிலர் பலியாகினர்.
பெண் உரிமை - பிப்., 24: அமெரிக்காவுக்கான சவுதி துாதரானார் இளவரசி ரிமா பண்டார். சவுதியின் முதல் பெண் துாதர். அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு அதிக அதிகாரம் தர வேண்டும் என்றவர். விளையாட்டு ஆணைய அதிகாரியாக இருந்த போது, விளையாட்டில் பெண்களை அதிகம் பங்கேற்க வைத்தார்.
மீண்டும் சந்திப்பு - பிப்.,28: வியட்நாம் தலைநகர் ஹெனாயில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இரண்டாவது முறையாக சந்திப்பு. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பு பற்றி விவாதித்தனர்.