தமிழகம்
மார்ச் 1 : அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்.
*கன்னியாகுமரி நிகழ்ச்சியில் மதுரை - ராமநாதபுரம், பனகுடி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலைகள், மதுரை - சென்னை 'தேஜஸ்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கினார்.
மஹா...யோகா - மார்ச் 3: கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
மார்ச் 4: ரூ. 358.95 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கினார்.
மார்ச் 5: ராமநாதபுரம் மூக்கையூரில் மீன்பிடி துறைமுகத்தை முதல்வர் பழனிசாமி துவக்கினார்.
*ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீடு பெற்றது.
மார்ச் 12: திருப்புவனம் பட்டு சேலை, புவிசார் குறியீடு பெற்றது.
மார்ச் 19: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன். நவ.௨௫ல் மீண்டும் மதுரை சிறையில் அடைப்பு.
மார்ச் 29: கொலை வழக்கில் 'சரவண பவன்' ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்தியா
மார்ச் 10 : 17வது லோக்சபா தேர்தலுக் கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மார்ச் 11: குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கேட்டு போராடிய ஹர்திக் படேல் காங்கிரசில் இணைந்தார்.
மார்ச் 12: பாதுகாப்பை உறுதி செய்யும் வரை, 'போயிங் 737' ரக விமானங்களுக்கு விமானத்துறை அமைச்சகம் தடை.
புதிய முதல்வர் மார்ச் 19: கோவா முதல்வராக பா.ஜ.,வின் பிரமோத் சாவந்த் பொறுப்பேற்பு.
நல்ல மனம் - மார்ச் 20: மும்பையை சேர்ந்தவர் மூன்றாம் பாலினத்தவரான கவுரி சாவந்த், மஹாராஷ்டிரா தேர்தல் ஆணையத்தின் துாதுவராக நியமனம். 'ஷாக்சி சர் சவ்கி' தொண்டு நிறுவனம் மூலம் மூன்றாம் பாலினத்தவர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறார்.
மார்ச் 23: லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஸ் பதவியேற்பு.
மார்ச் 26: ஜெட் ஏர்வேஸ் போர்டு உறுப்பினர் பதவியில் இருந்து அதன் நிறுவனர் நரேஷ் கோயல், மனைவி அனிதா கோயல் ராஜினாமா.
மார்ச் 27: ஹிமாச்சலில் உலகின் உயரமான வாக்குச்சாவடி திறப்பு. கடல் மட்டத்தில் இருந்து 15,256 அடி உயரத்தில் உள்ளது.
விண்வெளி சக்தி - மார்ச் 27: 'மிஷன் சக்தி' திட்டத்தின் கீழ் டி.ஆர்.டி.ஓ., தயாரித்த, 'செயற்கைக்கோள்களை இடைமறித்து தாக்கும் 'ஏ சாட்' ஏவுகணை' வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி அறிவிப்பு. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பின், இச்சாதனை நிகழ்த்திய நான்காவது நாடு.
மார்ச் 28: குஜராத்தில் அடானி துறைமுகம், 20 கோடி டன் சரக்குகளை கையாண்டு சாதனை.
உலகம்
மார்ச் 2: ஐ.நா., வின் தடை செய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் சேர்ப்பு.
மார்ச் 4 : உலகில் முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிப்பாளராக பெண் ரோபோவை உருவாக்கினர்.
மார்ச் 6: ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பெண் டாக்டர் பிரீத்தி ரெட்டி சூட்கேசில் சடலமாக கண்டுபிடிப்பு.
மார்ச் 9: உலகின் வயதான பெண் மணியாக ஜப்பானின் கனே டனகா 116, கின்னஸ் சாதனை.
மாயமான விமானம் - மார்ச் 10: எத்தியோப்பியாவின் 'போயிங் 737' பயணிகள் விமானம், தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய 6 நிமிடத்தில் மாயமாகி விபத்திற்குள்ளானது. 157 பேர் பலி.
மார்ச் 12: ஆப்ரிக்க நாடான மொசாம் பிக்கில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 115 பேர் பலி.
மார்ச் 14: ஈரான் அதிபர் ஹசன் ருஹானி ஈராக் பயணம். ஈரான் தலைவர் ஈராக் செல்வது இதுவே முதல்முறை.
நியூசி., சோகம் - மார்ச் 15: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 51 பேர் பலியாகினர். 'பேஸ்புக்கில்' நேரடி ஒளிபரப்பு செய்த அவனை போலீசார் கைது செய்தனர்.
மார்ச் 19: பஞ்சாப் நேஷனல் வங்கி யில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி பிரிட்டனில் கைது.
*ஐ.நா., வெளியிட்ட மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 140வது இடம் பெற்றது.
மார்ச் 20: கனடா வாழ் இந்தியரான ஜக்மத் சிங், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரானார்.
*கஜகஸ்தான் அதிபராக காசிம் ஜோமார்ட் டோகயேவ் பொறுப்பேற்பு.
*கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானா, நுர்சுல்தான் என பெயர் மாற்றம்.
மார்ச் 21: சீனாவில் ஜியாங்சு பகுதியில் கெமிக்கல் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 78 பேர் பலி.
மார்ச் 28: இஸ்ரேலில் 'மால்ஹாம்' என்ற உலகின் நீளமான(10 கி.மீ.,) உப்பு படிம குகை கண்டுபிடிப்பு.
*வங்கதேச தலைநகர் தாகாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலி.