ஏப்ரல் | வருடமலர் | Varudamalar | tamil weekly supplements
ஏப்ரல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
00:00

தமிழகம்
எம்.ஜி.ஆர்., கவுரவம் - ஏப்., 6: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர். இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த ரயில் நிலையம் 1873ல் தொடங்கப்பட்டது. 1931ல் மின்மயமாக்கம் செய்யப்பட்டது. 17 பிளாட்பார்ம்கள் உள்ளன.
ஏப்.,8: சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை.
ஏப்.,16: வாக்காளர்களுக்கு பணம் புகாரில் வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் ரத்து.
ஏப்.,19: அ.ம.மு.க., பொதுச்செயலராக தினகரன் நியமனம்.
ஏப்.,21: திருச்சி முத்தையாம் பாளையம் கருப்பசாமி கோயில் திருவிழா நெரிசலில் ஏழு பேர் பலி.
ஏப்.,24: 'டிக்டாக்' நிறுவனத்தின் உறுதிமொழியை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடையை நீக்கியது.
ஏப்.,26 : அப்பல்லோ மருத்துவமனை வழக்கில், ஜெ., மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை.
ஏப்.,30: புதுச்சேரி கவர்னருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

இந்தியா
ஏப்.,5: இந்திய தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவராக விக்ரம் கிர்லோஸ்கர் நியமனம்.
ஏப்.,6: பா.ஜ., அதிருப்தி எம்.பி., சத்ருகன் சின்ஹா காங்கிரசில் சேர்ந்தார்.
*மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி.,க்கு முதலிடம்.
ஏப்.,9: சத்தீஸ்கரின் தண்டே வாடாவில் நக்சலைட்கள் தாக்குதலில் பா.ஜ., எம்.எல்.ஏ., பிமா மந்தவி பலி.
ஏப்.,18: உலக பத்திரிகையாளர் சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 140வது இடம்.
ஏப்.,20: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ்., இம்பால்' போர்க்கப்பல், இந்திய கப்பல்படையில் சேர்ப்பு.
அரசியல் அவதாரம் - ஏப்., 23: பாலிவுட் நடிகர் சன்னி தியோல், பா.ஜ., வில் சேர்ந்தார். பஞ்சாபின் குருதாஸ்பூர் தொகுதியில் வென்று எம்.பி., ஆனார். நடிகர் தர்மேந்திரவாவின் மகன். இரு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
ஏப்.,25: வரலாற்றில் முதன்முறையாக ராணுவத்தின் போலீஸ் படைப்பிரிவில் பெண்களை சேர்ப்பதற்கு அறிவிப்பு வெளியீடு.
ஏப்.,26: புதிய 20 ரூபாய் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

உலகம்
அதிவேக '5ஜி' ஏப்., 3 : உலகில் முதன் முறையாக தென்கொரியா முழுவதும் 5ஜி இன்டர்நெட் சேவை துவக்கம்.
ஏப்.,9: உலக வங்கி தலைவராக அமெரிக்காவின் டேவிட் ராபர்ட் மல்பாஸ் பொறுப்பேற்பு.
ஏப்.,10: இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு பதவி ஏற்பு.
ஏப்.,11: சூடானில் 30 ஆண்டுகாலம் அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர், நீக்கப்பட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
அஞ்சாத அசாஞ்சே - ஏப்., 11: ஆஸி.,யின் ஜூலியன் அசாஞ்சே 'விக்கிலீக்ஸ்' இணையதளம் மூலம் பல நாடுகளின் ரகசியங்களை வெளியிட்டார். பாலியல் வழக்கில் சிக்கிய இவர், பிரிட்டனில் ஈக்குடார் துாதரகத்தில் தஞ்சம். 7 ஆண்டுக்குப்பின் கைது.
ஏப்.,13: உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 2வது ஆண்டாக பின்லாந்து முதலிடம். இந்தியாவுக்கு 140வது இடம்.
ஏப்.,14: அமெரிக்காவின் ஸ்டார்டடோலான்ச் நிறுவனத்தின் உலகின் பெரிய விமானம், முதல் பயணத்தை நிறைவு செய்தது.
ஏப்.,15: பாலஸ்தீன அதிபராக முகமது இஸ்தயி பதவியேற்பு.
இலங்கையில் பயங்கரம் - ஏப்., 21: இலங்கையில் மூன்று சர்ச் உட்பட எட்டு இடங்களில், ஒன்பது தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 359 பேர் பலி. ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பேற்பு.
சீனா சாதனை - ஏப்., 15: உலகில் முதன்முதலாக நிலம், நீரில் சென்று தாக்கும் சீனாவின் 'மரைன் லிசார்ட்' படகு வெற்றிகரமாக சோதனை. நீளம் 40 அடி. மணிக்கு நீரில் 92, நிலத்தில் 20 கி.மீ., வேகத்தில் செல்லும். தானாகவே இயங்கும்.
ஏப்.,23: உக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி.
ஏப்.,23: முதல்முறையாக மலேரியாவுக்கான 'ஆர்.டி.எஸ்., எஸ்' என்ற தடுப்பூசி ஆப்பிரிக்க நாடான மலாவியில், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போடப்பட்டது.
ஏப்.,24: கடவுள் ராமர் சிறப்பு தபால் தலையை இந்தோனேசியா வெளியிட்டது.
ஏப்.,25: முதன்முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு.
ஏப்.,27: சீனாவில் உள்ள உலகின் பெரிய புத்தர் சிலையை ஆறு மாதங்களுக்குப்பின் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி.
*இந்தோனேசியாவில் நடந்த ஒரே கட்ட தேர்தல் பணிச்சுமையால், 270 ஊழியர்கள் பலி.
ஏப்.,28: துபாயில் இந்து தந்தை -முஸ்லிம் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
*ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் பொறுப்பேற்பு.
ஏப்.,29: அமெரிக்காவில் 25 ஆண்டுகளில் இல்லாத வகையில், அம்மை நோயால் 700 பேர் பாதிப்பு.
ஏப்.,30: ஐந்தாண்டுகளுக்குப்பின் ஐ.எஸ்., பயங்கரவாத தலைவர் அல் பாக்தாதி பேசும் வீடியோ வெளியீடு.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X