தமிழகம்
மே 6: தினகரன் ஆதரவு மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை.
மே 23: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 37, அ.தி.மு.க., ஒரு இடத்தில் வெற்றி.
*சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க., 12, அ.தி.மு.க., 9 இடத்தில் வெற்றி. அ.தி.மு.க., 125 எம்.எல்.ஏ.,க்க ளுடன் ஆட்சியை தக்க வைத்தது.
இந்தியா
மே 1: மஹாராஷ்டிராவின் கட்சிரோலி யில் நக்சலைட் தாக்குதலில் 15 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி.
மே 3: ஒடிசாவில் 'போனி' புயல் பாதிப்பில் 34 பேர் பலி.
மே 6: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரணை குழு நிராகரித்தது.
மே 13: டி.ஆர்.டி.ஓ., தயாரித்த 'அப்யாஸ்' ஆளில்லா விமானம் சோதனை.
மே 14: மத்திய அரசு விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தது.
*ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முகமது ஜாவத் ஜரிப், இந்தியா வருகை.
மே 15: இந்திய விமான கேப்டன் அரோகி பண்டிட் 23, அட்லாண்டிக் பெருங்கடலை இலகு ரக விமானம் மூலம் தனியாக கடந்த உலகின் முதல் பெண் ஆனார்.
மே 19: உத்தரகண்டின் கேதர்நாத் குகையில் பிரதமர் மோடி 17 மணி நேரம் தியானம்.
மே 20: நாகாலந்தில் நாகா பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ., உட்பட 11 பேர் பலி.
மே 22: லெப்டினன்ட் பாவனா காந்த், இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானியாகி சாதனை.
மே 23: லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி 352 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. காங்., ௫௨ இடங்களில் வென்றது.
மே 24: குஜராத்தின் சூரத்தில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி.
*உச்சநீதிமன்ற நீதிபதிகளாக சூர்ய காந்த், அனிருதா போஸ், போபன்னா, ஜாவி பொறுப்பேற்பு.
இளம் எம்.பி., மே 26: ஒடிசாவின் சந்திராணி முர்மு 25 (பி.ஜே.டி.,)நாட்டின் இளம் எம்.பி., யாக பதவியேற்பு.
மே 27: சிக்கிம் முதல்வராக சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா தலைவைர் பிரேம் சிங் கோலாய் பொறுப்பேற்பு.
மே 29: அருணாச்சல முதல்வராக பா.ஜ., சார்பில் பெமா கண்டு மீண்டும் முதல்வரானார்.
மே 30: ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்., காங்., 151 இடங்களில் வென்றது. முதல்வராக ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்பு.
முத்தான முதல்வர் - மே 29: ஒடிசா சட்டசபை தேர்தலில் 112 இடங்களில் வென்று மீண்டும் முதல்வரானார் நவீன் பட்நாயக். பிஜூ ஜனதா தளம் தலைவரான இவர், 2000ல் முதன்முறையாக ஆட்சியை பிடித்தார். தொடர்ந்து ஐந்தாவது முறையாக அம்மாநில முதல்வராக பதவி வகிக்கிறார்.
மீண்டும் மோடி - மே 30: லோக்சபா தேர்தலில் பா.ஜ., 303 இடங்களில் வென்று மத்தியில் ஆட்சியை தக்க வைத்தது. இரண்டாவது முறை பிரதமராக மோடி, 57 அமைச்சர்கள் பதவியேற்பு.
மே 31: இந்திய கடற்படை தளபதியாக கரம்பிர் சிங் பொறுப்பேற்பு.
உலகம்
மே 1: பாகிஸ்தானின் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு.
மே 2 : ஜப்பான் மன்னர் அகிஹிட் டோ, 29 ஆண்டுகளுக்குப்பின் பதவி விலகினர். புதிய மன்னராக நருஹிட் டோ பதவியேற்பு.
மே 4: தாய்லாந்தின் புதிய மன்னரான மகா வஜ்ரலங்கோன் பதவியேற்பு. முன்னதாக அவரது பாதுகாவலராக இருந்த சுதிடா டிட்ஜாயை திருமணம் செய்து, ராணி ஆக்கினார்.
மே 6: பனாமா அதிபராக லாரென் டினோ கோர்டிஜோ தேர்வு.
*ரஷ்யாவில் விமான விபத்தில் 41 பேர் பலி.
'மின்னல்' ரயில் - மே 9: உலகின் அதிவேக புல்லட் ரயில் 'ஆல்பா எக்ஸ்' சோதனை ஜப்பானில் நடந்தது. மணிக்கு 400 கி.மீ., வேகத்தில் பறந்தது. 2030ல் பயன்பாட்டிற்கு வரும். நிலநடுக்க பாதிப்புகளை தாங்கும் தொழில்நுட்பம் உள்ளது.
மே 10: அயர்லாந்தில் காலநிலை தொடர்பான அவசரநிலை அறிவிப்பு.
மே 15: நேபாள மலையேற்ற வீரர் ஹாமி ரிடா, 23வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதித்தார்.
ஈபிள் '130' - மே 15: பிரான்சின் பாரிசில் உள்ள உலக அதிசயமான ஈபிள் டவர், 130வது ஆண்டை நிறைவு செய்தது. 1887 ஜன., 28ல் பணி தொடங்கப்பட்டு 1889 மே 31ல் திறக்கப்பட்டது. இதன் உயரம் 1,063 அடி. மூன்று மாடிகளை கொண்டது.
மே 17: ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடு தைவான்.
மே 19: ஆஸ்திரேலியாவின் பிரதம ராக ஸ்காட் மோரிசன், 2வது முறையாக பதவியேற்பு.
மே 21: இந்தோனேசிய அதிபராக மீண்டும் ஜோகோ விடோடா தேர்வு.
*இந்தியாவுக்கான பாகிஸ்தான் துாதராக மியூனல் ஹக் நியமனம்.
மே 23: தென் ஆப்ரிக்க அதிபராக கிரில் ரமபோசா மீண்டும் பதவியேற்பு.
மே 27: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜப்பான் பயனம். மன்னர் நருஹிட் டோவை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவரானார்.
ஐ.நா., வில் இந்தியர் - மே 31: ஐ.நா., சபையின் உதவி பொது செயலராக, இந்திய வம்சாவளி பெண் அனிதா பாட்டியா நியமனம். கோல்கட்டாவில் பி.ஏ., அமெரிக்காவில் எம்.ஏ., அரசியல் அறிவியல் முடித்தார். உலக வங்கி உள்ளிட்ட சில நிறுவனங்களில் மேலாண்மை துறையில் பணியாற்றியுள்ளார்.