தமிழகம்
ஜூன் 1: திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவை துவக்கம்.
ஜூன் 4: ஒரே நாளில் 1573 அங்கன் வாடி ஊழியர்கள் பணி நியமன ஆணை வழங்கிய மதுரை கலெக்டர் நாகராஜன் வேறு துறைக்கு மாற்றம்.
ஜூன் 18: ஆவடி நகராட்சி, மாநக ராட்சியாக தரம் உயர்வு.
ஜூன் 21: ரூ. 211 கோடியில் புதிய துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி துவக்கினார்.
ஜூன் 25: ஜூன் - ஜூலை மாதங்களுக் கான 40 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.
ஜூன் 28: அ.ம.மு.க., தங்க தமிழ் செல்வன், தி.மு.க., வில் சேர்ந்தார்.
ஜூன் 29: தலைமைச்செயலராக சண்முகம் பதவியேற்பு. டிஜி.பி., யாக திரிபாதி நியமனம்.
இந்தியா
ஜூன் 2: தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் மும்மொழி திட்டம் அறிமுகம்.
ஜூன் 3: தேசிய பாதுகாப்பு ஆலோசக ராக அஜித் தோவல் நியமனம்.
'பறக்கும்' சோகம் - ஜூன் 3: இந்திய விமானப்படையின் 'ஆன்டோனோவ் ஏ.என்.32' விமானம், அசாமின் ஜோர்காட்டில் இருந்து அருணாச்சலின் மெச்சுகா பகுதிக்கு சென்ற போது விபத்துக்குள்ளானது. தமிழக வீரர் உள்பட 13 பேர் பலி.
ஜூன் 8: ஆந்திராவில் துணை முதல்வராக ஐந்து பேர் நியமனம்.
*2வது முறை பிரதமரான மோடி, முதல் வெளிநாடாக மாலத்தீவு பயணம்.
எடைக்கு தாமரை - ஜூன் 8: கேரளா குருவாயூர் கோயிலில் எடைக்கு எடை தாமரை மலர்களை துலாபாரம் காணிக்கையாக செலுத்தினார் பிரதமர் மோடி. ௨௦௦௮ல் குஜராத் முதல்வராக இருந்தபோது இதேபோல காணிக்கை செய்தார்.
ஜூன் 10: காஷ்மீரின் கதுவாவில், 8 வயது சிறுமி பாலியல் வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை.
ஜூன் 13: பிரதமர் மோடி, கிர்கிஸ் தான் பயணம்.
ஜூன் 15: டில்லியில் பிரதமர் மோடி - தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு.
இந்திய அழகி - ஜூன் 16: ராஜஸ்தானின் சுமன் ராவ் 'மிஸ் இந்தியா - 2019 ' பட்டம் வென்றார். மும்பை பல்கலையில் பி.காம்., படிக்கிறார். கதகளி நடனம் தெரிந்தவர். 'மிஸ் ராஜஸ்தான்' பட்டம் வென்றுள்ளார். 'மிஸ் வேர்ல்டு - 2019' போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.
ஜூன் 17: பா.ஜ., செயல் தலைவராக ஜே.பி.நட்டா பொறுப்பேற்பு.
ஜூன் 18: லோக்சபா காங்., தலைவ ராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமனம்.
புதிய நாயகர் - ஜூன் 18: லோக்சபா சபாநாயகராக பா.ஜ., சார்பில், ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிர்லா தேர்வு.
ஜூன் 20: தெலுங்கு தேச 4 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் சேர்ந்தனர்.
*இமாச்சல பிரதேசத்தில் குள்ளு பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பலி.
ஜூன் 22: இந்தியாவின் வனப்பரப்பு, ஒரு சதவீதம் உயர்ந்து 24.39 ஆக உள்ளது என மத்திய அரசு தகவல்.
ஜூன் 24: வெளிநாடுகளில் 1980 - 2010 வரை இந்தியர்கள் பதுக்கி வைத்த கறுப்பு பணம் ரூ. 14 -34 லட்சம் கோடி இருக்கலாம் என பார்லியில் தகவல்.
ஜூன் 25: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பா.ஜ.,வில் சேர்ந்தார்.
*அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ இந்தியா வருகை.
ஜூன் 26: இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' தலைவராக சமந்த் கோயல் நியமனம்.
ஜூன் 30: கடலோர காவல்படை தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் நியமனம்.
'தமிழ் மறவன்' - ஜூன் 30: தமிழக அரசு சின்னமாக 'தமிழ் மறவன்' பட்டாம் பூச்சி அறிவிப்பு. வெளிப்புற இறகுகள் பழுப்பு, ஆரஞ்சு வண்ணத்தை பெற்றிருக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் 32 வகை பட்டாம்பூச்சிகளில் ஒன்று. தனியாக செல்லாது. கூட்டமாகவே செல்லும்.
உலகம்
ஜூன் 1 : எல் சால்வடோர் அதிபராக நயிப் புகிலி பதவியேற்பு.
ஜூன் 3: அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரிட்டன் பயணம், ராணி எலிச பெத்துடன் சந்திப்பு.
ஜூன் 6: பின்லாந்து அதிபராக ஜூகானி ரினி பொறுப்பேற்பு.
ஜூன் 7: தாய்லாந்து பிரதமராக பிரயூத் சான்-ஓச்சா தேர்வு.
ஜூன் 10: ஊழல் வழக்கில் பாகிஸ் தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது.
ஜூன் 11: கனடாவில் 2021ல் இருந்து பாலித்தீன்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு.
ஜூன் 15: சுலோவாக்கியாவின் முதல் பெண் அதிபராக சுஜானா கேபுடோவா பொறுப்பேற்பு.
ஜூன் 20: சீன அதிபர் ஜி ஜின்பிங் முதன்முறையாக வடகொரியா பயணம்.
அதிக வெப்பம் - ஜூன் 20: உலகின் 3 மற்றும் 4வது அதிகபட்ச வெப்பநிலை குவைத் (2016ல், 53.9 டிகிரி செல்சியஸ்), பாகிஸ்தானில் (2017ல், 53.7 டிகிரி செல்சியஸ்) பதிவானது. இதனை நீண்ட ஆய்வுக்கு பின், உலக வானிலை மையம் ஏற்றது.
ஜூன் 23: எத்தியோப்பியாவில் ராணுவ தலைமை தளபதி சியாரோ மெகோனென் சுட்டுக்கொலை.
ஜூன் 24: ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பு.
ஜூன் 27: டென்மார்க் பிரதமராக மெட்டி பிரிடெரிக்சன் பொறுப்பேற்பு.
ஜூன் 29: ஜப்பானில் நடந்த 'ஜி - 20' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.
ஜூன் 30: வடகொரியாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு.
*ஆப்கன் காந்தகார் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி.