தமிழகம்
ஜூலை 4: தி.மு.க., இளைஞரணி செயலராக உதயநிதி நியமனம்.
ஜூலை 6: பாலியல் வழக்கில் கைதான முகிலன், திருச்சி சிறையில் அடைப்பு.
ஜூலை 11: ராஜ்யசபா எம்.பி.,யாக தி.மு.க., வின் வில்சன், சண்முகம், ம.தி.மு.க.,வின் வைகோ, பா.ம.க., அன்புமணி, அ.தி.மு.க.,வின் முகமது ஜான், சந்திரசேகரன் தேர்வு.
தடை சரி - ஜூலை 11: தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜன., 1ல் அரசு தடை விதித்தது. இதை எதிர்த்த பிளாஸ்டிக் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் அரசாணை செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஜூலை 12: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர்.
ஜூலை 16: தபால் துறை தேர்வை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பு.
வைகை பெருவிழா - ஜூலை 24: மதுரையில் வைகை நதியின் புனிதம் காக்கவும், நதிகள் மேம்பாடு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வைகை பெருவிழா 10 நாட்கள் நடந்தது.
இந்தியா
ஜூலை 1: காஷ்மீரின் கிஷ்ட்வாரில் பஸ் விபத்தில் 35 பேர் பலி.
ராகுல் விலகல் ஜூலை 3: லோக்சபா தேர்தலுக்கு பொறுப்பேற்று காங்., தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா.
ஜூலை 4: ம.ஜ.த., இளைஞர் அணி செயலராக குமாரசாமி மகன் நிகில் நியமனம்.
ஜூலை 6: யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் ஜெய்ப்பூருக்கு இடம்.
*வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு.
ஜூலை 8: ஆக்ரா விரைவு சாலையில் பஸ் கவிழ்ந்து 29 பேர் பலி.
ஜூலை 11: கோவா காங்., எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர், பா.ஜ., வில் சேர்ந்தனர்.
ஜூலை 15: ஹிமாச்சலில் ஓட்டல் இடிந்து விழுந்ததில் 13 ராணுவ வீரர்கள் பலி.
*ஹிமாச்சல் கவர்னராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம்.
*மும்பை டோங்கியில் நான்கு மாடி கட்டடம் இடிந்ததில் 12 பேர் பலி.
ஜூலை 17: தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றம்.
ஜூலை 20: மோட்டார் வாகன சட்ட திருத்தம் - 2019, பார்லிமென்ட்டில் நிறைவேற்றம்.
'தாவிய' சித்து - ஜூலை 20: பஞ்சாபில் அமரிந்தர் சிங் அமைச்சரவையில் சுற்றுலா அமைச்சராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, மின்சாரத்துறைக்கு மாற்றம். இதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2017ல் பா.ஜ., வில் இருந்து விலகி காங்.,கில் சேர்ந்தவர்.
ஜூலை 24: மேற்கு வங்கத்தின் பெயரை 'பங்களா' என மாற்ற மத்திய அரசு மறுப்பு.
ஜூலை 25: தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்.
ஜூலை 27: மஹாராஷ்டிராவின் தானேயில் மழை வெள்ளத்தில் சிக்கிய ரயிலில் 1,050 பயணிகள் மீட்பு.
மீண்டும் 'எடி' - ஜூலை 28: கர்நாடகாவில் 17 காங்., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததால், நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு தோல்வி. 107 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் முதல்வராக பா.ஜ.,வின் எடியூரப்பா பதவியேற்பு. நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி.
ஜூலை 29: இந்தியாவில் 2,977 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல்.
*உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்., - எல்.சி.யு.56 போர்க்கப்பல் கப்பல்படையில் சேர்ப்பு.
ஜூலை 30: முத்தலாக் தடை சட்ட மசோதா பார்லிமென்டில் நிறை வேற்றம்.
ஜூலை 31: உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 34 ஆக உயர்த்த மத்திய அரசு அனுமதி.
உலகம்
ஜூலை 1: ஆப்கன், காபூலில் தலிபான் தாக்குதலில் 11 பேர் பலி.
ஜூலை 2: ஈரானில் நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி.
ஜூலை 3: ஐரோப்பிய பார்லிமென்ட் தலைவராக டேவிட் சசோலி நியமனம்.
*லிபியாவில் முன்னாள் ராணுவ படையினரின் வான்வழி தாக்குதலில் 40 அகதிகள் பலி.
*பாகிஸ்தான் சியால்கோட்டில் இந்து கோயில், 72 ஆண்டுகளுக்குப்பின் திறப்பு.
ஜூலை ௪: அமெரிக்க சுதந்திர தினத்தில் முதன்முறையாக ராணுவ அணிவகுப்பு.
ஜூலை 14: சோமாலியா ஒட்டலில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலி.
ஜூலை 17: மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கர வாதி ஹபீஸ் சயித், பாகிஸ்தானில் கைது.
ஜாதவ் சாதகம் - ஜூலை 17: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, இந்திய கடற்படை வீரர் ஜாதவிற்கு அந்நாடு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்த இந்தியாவின் வழக்கில் மரண தண்டனையை ரத்து செய்து சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு.
ஜூலை 18: ஜப்பானில் 'அனிமேஷன்' ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் பலி.
ஜூலை 24: பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா. புதிய பிரதமராக போரி ஜான்சன் பொறுப்பேற்பு.