தமிழகம்
ஆக.,7: தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கம்.
ஆக.,8: வேலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி.
ஆக.,11: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 'கவனித்தல், கற்றல், தலைமையேற்றல்' புத்தகம் சென்னையில் வெளியீடு.
'வீரத் தம்பதி' - ஆக., 15: நெல்லை அம்பாசமுத்திரம் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை, வயதான சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினர் மன தைரியத்துடன் விரட்டியடித்தனர். இதனை பாராட்டி சுதந்திர தின விழாவில் தமிழக அரசின் வீரதீர விருது வழங்கப்பட்டது.
உயர்ந்த பால் ஆக., 18: தமிழக அரசின் 'ஆவின்' பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்வு.
ஆக.,19: ஐந்து லட்சம் முதியோருக்கு புதிதாக உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
ஆக.,21: 'இஸ்ரோ' தலைவர் சிவனுக்கு, தமிழக அரசின் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
ஆக.,26: பள்ளிக்கல்வித்துறையின் கல்வி சேனல் துவக்கம்.
ஆக.,28: முதல்வர் பழனிசாமி, முதல் அரசு வெளிநாட்டு பயணமாக பிரிட்டன், அமெரிக்கா, யு.ஏ.இ., பயணம். செப்., 10ல் திரும்பினார்.
இந்தியா
ஆக.,1: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்.
ஆக.,2: ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத்தில் துவக்கம்.
ஆக.,8: இந்தியாவின் முதல் முப்பரிமாண ஸ்மார்ட் டிராபிக் சிக்னல் மொஹாலியில் துவக்கம்.
ஆக.,10: காங்., தலைவராக சோனியா பொறுப்பேற்பு.
ஆக.,12: டில்லி - லாகூர் பஸ் சேவையை இந்தியா ரத்து.
வந்தார் 'வனமகன்' - ஆக., 12: உத்தரகண்டின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் நடந்த 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பிரிட்டன் சாகச வீரர் பியர் கிரில்ஸ்சுடன் பங்கேற்பு. டிஸ்கவரி சேனல் 180 நாடுகளில் ஒளிபரப்பியது.
ஆக.,16: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, லிதுவேனியா, லாட்வியா எஸ்டோனியாவுக்கு பயணம்.
ஆக.,17: பிரதமர் மோடி பூடான் பயணம்.
ஆக.,19: ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக மன்மோகன் சிங் தேர்வு.
திகாரில் சிதம்பரம் - ஆக., 21: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சி.பி.ஐ.,யால் கைது. செப்., 6ல் திகார் சிறையில் அடைப்பு. அக்., 16ல் அமலாக்கத்துறை வழக்கில் கைது. டிச., 4ல் ஜாமீனில் விடுவிப்பு.
ஆக.,22: மத்திய உள்துறை செயலராக அஜய்குமார் பல்லா நியமனம்.
*பிரதமர் மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் நாடுகளுக்கு பயணம்.
*தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உலகின் பெரிய அலுவலகத்தை அமேசான் திறந்தது.
ஆக.,24: ஜம்மு-காஷ்மீர் சூழல் குறித்து ஆராய ராகுல் தலைமையில் சென்ற எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவுக்கு அனுமதி மறுப்பு.
ஆக.,25: முப்பது ஆண்டுகளாக மூன்று அரசு பணிகளில் வேலைபார்த்த பீஹாரின் சுரேஷ் ராம் கைது.
ஆக.,26: கர்நாடகாவில் துணை முதல்வர்களாக அஷ்வத் நாராயணன், கர்ஜோல் கோவிந்த், லட்சுமணன் சவடி நியமனம்.
அக்.,28: மத்திய அரசு 2020 -21ல் 75 புதிய மருத்துவக்கல்லுாரிகள் தொடங்க அனுமதி வழங்கியது.
அக்.,29: உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்த 'பிட் இந்தியா' இயக்கத்தை பிரதமர் மோடி துவக்கினார்.
ஆக.,31: அசாம் குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியலில் 3.29 கோடி பேருக்கு இடம். 19 லட்சம் பேர் நீக்கம்.
உலகம்
ஆக.,2: வங்கதேசத்தில் தலை ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள், ஆப்பரேஷன் மூலம் பிரிப்பு.
'சிறை பறவை' - ஆக., 7: பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகளும், முஸ்லிம் லீக் கட்சி துணை தலைவருமான மரியம் ஷெரீப்புக்கு பணப்பரிமாற்ற மோசடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஏழு ஆண்டு சிறை தண்டனை. நவ. 4ல் ஜாமீனில் வந்தார்.
ஆக.,10: ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் பெட்ரோல் லாரி வெடித்து 62 பேர் பலி.
ஆக.,12: ஓய்வு பெற்ற இந்திய நீதிபதி மதன் பி.லோகூர், பிஜி நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்பு.
*கவுதமாலா அதிபராக கியாமடேய் பொறுப்பேற்பு.
ஆக.,15: பிரேசிலில் உள்ள அமே சான் காடுகளில் பயங்கர தீ விபத்து. 22 லட்சம் ஏக்கர் வனப்பரப்பு அழிந்தது.
ஆக.,19: லிதுவேனியாவில் பிரதமர் சார்லஸ் ஸ்கெவர்னலிஸ் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு.
ஆக.,24: பஹ்ரைன் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கோயிலில் முதல் முறையாக 'ரூபே' கார்டினை பயன்படுத்தி பிரசாதம் பெற்றார்.
ஆக.,26: 'ஜி 7' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு.
'அய்யோ பத்திகிச்சு' - ஆக., 27: 'பூமியின் நுரையீரல்' என அழைக்கப்படும் பிரேசிலின் அமேசான் காட்டில் தீ பிடித்தது. 22 ஏக்கர் சேதம். உலகிற்கு 6 சதவீதம் 'ஆக்சிஜனை' இக்காடு வழங்குகிறது.