தமிழகம்
செப்.,6: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா.
செப்.,10: நீலகிரி வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு.
'பேனர்' கொடுமை - செப்., 12: சென்னை பள்ளிக் கரணையில் டூவீலரில் சென்ற 'சாப்ட்வேர் இன்ஜினியர்' சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து, லாரி ஏறி மரணம். அனுமதியின்றி 'பேனர்' வைத்த அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது.
செப்.,13: ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு அரசாணை.
*ஆஸ்திரேலியாவில் இருந்து ரூ. 30 கோடி மதிப்புமிக்க கல்லிடைகுறிச்சி பஞ்சலோக நடராஜர் சிலை, 37 ஆண்டுகளுக்கு பின் மீட்பு.
செப்.,24: சென்னையில் 'ஐ.சி.ஜி.எஸ்., வராஹா' போர்க்கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.
செப்.,25: 'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்த உதித் சூர்யா கைது.
செப்.,30: சென்னை ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.
இந்தியா
செப்.,1: விங் கமாண்டர் அபிநந்தனுடன், 'மிக் 21' விமானத்தில் விமானப்படை தளபதி தனோவா பறந்தார்.
*முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
நீளமான சுரங்கபாதை - செப்., 2: ஆந்திராவில், நாட்டின் நீளமான மின்சார ரயில் சுரங்கபாதையை (6.6 கி.மீ.,) துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு துவக்கினார். செலவு ரூ. 437 கோடி. பணிகாலம் 43 மாதங்கள். சுரங்கபாதையின் உயரம் 21 அடி. 33 அடி துார இடைவெளியில் எல்.இ.டி., விளக்கு உள்ளது.
செப்.,3: அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய 'அப்பாச்சி ஏ.எச் - 64இ' நவீன போர் ஹெலிகாப்டர் இந்திய ராணுவத்தில் சேர்ப்பு.
செப்.,4: ரஷ்யாவில் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு.
'தெலுங்கு இசை' - செப்., 8: தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை 57, தெலுங்கானாவின் முதல் பெண் கவர்னராக பதவியேற்பு. இவரே நாட்டின் இளம் கவர்னர். நாகர்கோவிலில் பிறந்த இவர், எம்.பி.பி.எஸ்., டாக்டர். காங்., மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள்.
செப்.,11: பிரதமர் மோடியின் முதன்மை செயலராக பிரமோத் மிஸ்ரா நியமனம்
செப்.,12: பிரதமர் மோடியின் தலைமை ஆலோசகராக பி.கே.சின்ஹா நியமனம்.
*விவசாயிகள், வணிகர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் துவக்கினார்.
செப்.,15: 'துார்தர்ஷன்' 60 ஆண்டுகளை நிறைவு செய்தது.
செப்.,17: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'அஸ்தாரா' ஏவுகணை சோதனை வெற்றி.
செப்.,18: பிரதமர் மோடி-மேற்கு வங்க முதல்வர் மம்தா சந்திப்பு.
தடைக்கு வரவேற்பு செப்., 18: இந்தியாவில் 'இ-சிகரெட்' விற்பனைக்கு மத்திய அரசு தடை.
செப்.,19: 'தேஜஸ்' விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்பு துறை அமைச்சரானார் ராஜ்நாத்சிங்.
செப்.,21: டில்லியில் பிரதமர் மோடி - மங்கோலிய அதிபர் பதுல்கா இணைந்து, மங்கோலியாவின் உலான்பாதரில் உள்ள புத்தர் சிலையை காணொலி காட்சி மூலம் திறப்பு.
செப்.,23: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கிருஷ்ண முராரி, ராமசுப்ரமணியன், ரவீந்திர பட், ஹிரிஷிகேஷ் ராய் பொறுப்பேற்பு.
செப்.,28: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்.காந்தேரி நீர்மூழ்கி கப்பல் அறிமுகம்.
செப்.,29: விலை ஏற்றத்தால் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை.
செப்.,30: விமானப்படை தளபதியாக ராகேஷ் குமார் சிங் பதுரியா பொறுப்பேற்பு.
உலகம்
செப்.,11: வெளிநாட்டு மாணவர்களுக்கு படிப்புக்கு பின், இரண்டு ஆண்டு பணி 'விசா' வழங்க பிரிட்டன் முடிவு.
செப்.,17: ஆப்கனில் தலிபான்களின் தற்கொலைப்படை தாக்குதலில் 48 பேர் பலி.
செப்.,18: கொழும்புவில் தெற்கு ஆசியாவின் மிக உயரமான டவரை இலங்கை அதிபர் சிறிசேனா திறப்பு.
மோடி நலமா - செப்.,22: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில், 50 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பு.
செப்.,23: ஐ.நா., சபையில் பருவநிலை மாற்றம் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.
'கிரேட்' கிரேட்டா - செப்., 23: நியூயார்க்கில் நடந்த ஐ.நா., மாநாட்டில், சுவீடன் மாணவி கிரேட்டா தன்பெர்க் 16, பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தடுக்க உலக தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறினார்.
செப்.,25: பாகிஸ்தானின் மிர்பூர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 38 பேர் பலி.
செப்.,26: சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா நியமனம்.
செப்.,28: சவுதி முதன்முதலாக வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்கியது.