தமிழகம்
அக்.,2: திருச்சி லலிதா ஜூவல்லரி யில் ரூ. 13 கோடி நகை கொள்ளை அடித்தவர்கள் கைது. 24 கிலோ நகை மீட்பு.
அக்.,3: ஊரகப்பகுதிகளில் சுகாதார தரம், உட்கட்டமைப்பில் சிறந்து விளங்குவதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு விருது.
அக்.,4: ராதாபுரம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., இன்பதுரை வெற்றியை எதிர்த்த தி.மு.க.,வின் அப்பாவு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறுவாக்கு எண்ணிக்கை. முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை.
அக்.,15: கோவையில் இருந்து பழநி, பொள்ளாச்சிக்கு புதிய ரயில் சேவை துவக்கம்.
அக்.,17: சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு 36 ஆண்டு களுக்குப்பின் விமான சேவை.
'பிளாஸ்டிக்' கொடூரம் - அக்., 18: சென்னையில் புல் தின்ன முடியாமல் தவித்த பசுவுக்கு வேப்பேரி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்தனர். அதன் வயிற்றில் இருந்த, 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம். இச்சம்பவம் பிளாஸ்டிக் கொடூரத்தை காட்டியது.
அக்.,20: முதல்வர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்.
அக்.,21: தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல் ஆகிய ஆறு இடங்களில் மருத்துவக்கல்லுாரி அமைக்க மத்திய அரசு அனுமதி.
அக்.,24: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி.
சுஜீத் சோகம் - அக்., 25: மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் சுஜீத் வில்சன், 600 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்தான். மீட்பு பணியில் பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. 4 நாட்கள் போராட்டத்துக்கு பின் சடலமாக மீட்பு.
அக்.,31: காற்றாலை மோசடி வழக்கில் கேரள நடிகை சரிதாவுக்கு, கோவை நீதிமன்றம் மூன்றாண்டு சிறை.
இந்தியா
அக்.,3: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகை.
தனியார் ரயில் அக்., 4: நாட்டின் முதல் தனியார் ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ், டில்லி - லக்னோ இடையே தொடக்கம்.
அக்.,7: தெலுங்கானாவில் 'ஸ்டிரைக் கில்' ஈடுபட்ட 48 ஆயிரம் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் பணி நீக்கம்.
அக்.,11: போர்ப்ஸ் பத்திரிகையின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்.
*கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் நியமனம்.
தளராத தன்னம்பிக்கை - அக்., 14: இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரஞ்சால் பட்டில், திருவனந்தபுரம் துணை கலெக்டராக பொறுப்பேற்பு. ஆறு வயதில் பார்வை இழந்தார். எம்.ஏ., எம்.பில்., பிஎச்டி., முடித்த இவர், 2016ல் ஐ.ஏ.எஸ்., ஆனார்.
அக்.,20: எல்லையில் இந்திய ராணுவத்தின் தாக்குதலில் 10 பாக்., வீரர்கள், 20 பயங்கரவாதிகள் பலி.
அக்.,21: கர்நாடகாவில் கல்கி ஆசிரமத்தில் கணக்கில் வராத ரூ. 800 கோடி சொத்துக்களை வருமான வரித்துறை கண்டுபிடித்தது.
அக்.,23: ஆதார் வழங்கும் 'உதய்' அமைப்பின் சி.இ.ஓ., வாக பங்கஜ் குமார் பொறுப்பேற்பு.
அக்.,24: ஹரியானாவில் பா.ஜ.,- ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்வராக மனோகர் கட்டார், துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்பு.
அக்.,30: ஐரோப்பிய பார்லிமென்ட் எம்.பி.,க்கள் குழு, காஷ்மீர் வருகை.
உலகம்
அக்.,1: அமெரிக்காவின் புளோரிடா வில் ஆசிரியர்கள் பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வர அனுமதி.
அக்.,5: ஈராக்கில் ஊழல், வேலை வாய்ப்பின்மைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 93 பேர் பலி.
ரட்சகன் 'ரபேல்' - அக்., 8: பிரான்சில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்திடம், முதல் 'ரபேல்' போர் விமானம் ஒப்படைப்பு. விமானத்தின் மீது குங்குமம் வைத்து பூஜை செய்தார். மே 2020ல் விமானப்படையில் சேர்க்கப்படும்.
அக்.,13: ஜப்பானில் 'ஹகிபிஸ்' சூறாவளியில் 56 பேர் பலி.
அக்.,14: வாடிகன் விழாவில் கேரளாவின் மரியம் தெரசாவுக்கு போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார்.
அக்.,15: சிரியாவில் குர்து இன மக்கள் மீது தாக்குதல் நடத்திய துருக்கிக்கு அமெரிக்கா பொருளாதார தடை.
அக்.,20: இந்தோனேஷிய அதிபர் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்தார் ஜோகோ விடூடு.
*பிலிப்பைன்சில் காந்தி சிலையை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
அக்.,22: கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்பு.
உச்சியில் பாலம் - அக்., 22: லடாக்கில் ஷியோக் நதியின் குறுக்கே 'சேவாங் ரிஞ்சேன்' பாலத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் துவக்கினார். நீளம் 1,400 அடி. கடல் மட்டத்தில் இருந்து 14,650 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
அக்.,23: பிரிட்டனில் லாரியில் 39 உடல்களை ஏற்றி வந்த டிரைவர் கைது.
*துனிசியா அதிபராக கைஸ் சயித் பொறுப்பேற்பு.
அக்.,27: ஈராக்கின் இட்லிப் நகரில் அமெரிக்க ராணுவ தாக்குதலில், ஐ.எஸ்., தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்.
அக்.,28: சவுதி அரேபியாவின் ரியாத்தில் அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு.
அக்.,31: பாகிஸ்தானின் லியாகத் பூரில் ரயில் தீ பிடித்ததில் 73 பேர் பலி.