தமிழகம்
நவ.,1: 'தமிழ்நாடு' மாநிலம் உருவான தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டது.
நவ.,5: 'அம்மா ஆம்புலன்ஸ்' சேவையை முதல்வர் பழனிசாமி துவக்கம்.
நவ.,7: கோவையில் 2010ல் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளி மனோகரின் துாக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
நவ.,8: துணை முதல்வர் பன்னீர் செல்வம், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார்.
*மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்குவது துவக்கம்.
*சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்த கேரள மாணவி பாத்திமா தற்கொலை.
நவ.,11: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பொறுப்பேற்பு.
நவ.,15: கோவையில் அ.தி.மு.க., கொடிக்கம்பம் விழுந்து அனுராதா என்ற பெண் கால் இழந்தார்.
நவ.,18: தமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ்., நியமனம்.
நவ.,22: தென்காசி மாவட்டம் உதயம்
நவ.,26: கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயம்.
நவ.,28: செங்கல்பட்டு, திருப்பத் துார், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உதயம்.
நவ.,29: மின்சாரத்தில் இயங்கும் 100 ஆட்டோக்களை முதல்வர் பழனிசாமி துவக்கினார்.
நவ.,30: நடிகர் ராதாரவி, நடிகை நமீதா பா.ஜ.,வில் சேர்ந்தனர்.
இந்தியா
நவ.,2: டில்லியில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் - பிரதமர் மோடி சந்திப்பு.
நவ.,3: பிரதமர் மோடி தாய்லாந்து பயணம்.
*கோவா கவர்னராக சத்ய பால் மாலிக் நியமனம்.
நவ.,4: தெலுங்கானாவில் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் தாசில்தார் விஜயா ரெட்டி எரித்து கொலை.
நவ.,5: கோல்கட்டாவில் சர்வதேச அறிவியல் மாநாடு நடந்தது.
சுவாச போராட்டம் - நவ., 8: தலைநகர் டில்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை எட்டியது. வட மாநிலங்களில் வயல்களில் தானிய கதிர்களை எரிப்பதே புகைக்கு முக்கிய காரணம்.
பெரிய சிவலிங்கம் - நவ., 10: உலகின் உயரமான சிவலிங்கம் கேரளாவின் திருவனந்தபுரம் அருகே செங்கல் மகேஸ்வரம் சிவ பார்வதி கோயிலில் திறப்பு. உயரம் 111 அடி. உட்பகுதி எட்டு தளங்களை கொண்டு குகை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் கட்டப்பட்டது. செலவு ரூ.10 கோடி.
நவ.,12: மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்.
நவ.,13: கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்கம் செய்தது சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
*பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மூன்று நாள் பயணமாக இந்தியா வருகை.
நவ.,18: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு. புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு.
*ராஜ்யசபாவின் 250வது கூட்டத்தொடர் துவக்கம்.
நவ.,19: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் பலி.
நவ.,23: மஹாராஷ்டிராவில் முதல்வராக பா.ஜ., வின் பட்நாவிஸ் பதவியேற்பு. துணை முதல்வராக தே.காங்., அஜித் பவார் பதவியேற்பு. பெரும்பான்மை இல்லாததால் இருவரும் ராஜினாமா.
*டில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கவர்னர்கள் மாநாடு நடந்தது.
நவ.,25: முல்லைப் பெரியாறு அணை தொடர்ந்து தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் உறுதி.
நவ.,28: மஹாராஷ்டிராவில் தே.காங்., - காங்., கூட்டணி சார்பில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பு.
உலகம்
இந்தியா மறுப்பு - நவ., 5: சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா உட்பட 15 நாடுகள் தொடங்கிய தடையற்ற வர்த்தகம் தொடர்பான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு.
தேசம் கடந்த சாலை - நவ., 9: சீக்கியர்கள் மதகுரு குருநானக் வசித்த பாக்.,கின் கர்தார்பூர் குருத்வாராவுக்கு, இந்தியாவின் பஞ்சாப் குருதாஸ்பூரில் இருந்து சீக்கியர்கள் செல்ல, சிறப்பு பாதையை பிரதமர் மோடி துவக்கினார்.
நவ.,13: பிரேசிலில் நடந்த 'பிரிக்ஸ்' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.
*மொரிசியஸ் பிரதமராக பிரவிந்த் ஜூக்நவ்த் பொறுப்பேற்பு.
நவ.,15: பாகிஸ்தானில் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான நகரை தொல்லியல் துறையினர் ஆய்வில் கண்டுபிடித்தனர்.
நவ.,16: உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம்.
அண்ணன்-தம்பி நவ., 17: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா வெற்றி. இவர் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி.
தமிழ் புகழ் - நவ., 20: கனடா வாழ் தமிழ் பெண் அனிதா ஆனந்த். சட்டப் பேராசிரியையாக பணியாற்றினார். 2019 பார்லிமென்ட் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் எம்.பி., ஆனார். கனடாவில் அமைச்சரான முதல் ஹிந்து மற்றும் தமிழ் பெண் என்ற பெருமை பெற்றார்.
நவ.,21: இலங்கை பிரதமராக ராஜபக்ஷே பொறுப்பேற்பு.