டிசம்பர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
00:00

தமிழகம்
டிச.,1: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக அன்பு நியமனம். பொன் மாணிக்கவேல் ஓய்வு.
உயிரை பறித்த 'சுவர்' - டிச., 2: மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கனமழையால், சுப்ரமணியன் வீட்டின் பெரிய சுற்றுச்சுவர் இடிந்து, அருகிலுள்ள நான்கு வீடுகளின் மேல் விழுந்தது. துாங்கிக் கொண்டிருந்த நான்கு சிறுவர் உட்பட 17 பேர் பலி.
டிச.,3: மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக கடனுதவி வழங்கியதற்காக, தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கிக்கு தேசிய விருது டிச.,27,30 : ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

இந்தியா
டிச.,3: தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூவை ஒரே யூனியனாக இணைக்கும் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றம்.
டிச.,4: லோக்சபா, சட்டசபை தேர்தலில் எஸ்.சி., / எஸ்.டி., இட ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டிப்பு
டிச.,5 : தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா, தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஒரு தீவை வாங்கி 'கைலாசம்' என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவிப்பு.
டிச.,6 : பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பியோடிய நீரவ் மோடி, தலைமறைவு நிதி மோசடியாளர் என மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு.
சபாஷ் போலீஸ் - டிச., 6: ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை, 4 பேர் பாலியல் செய்து கொலை செய்தனர். இவர்களை கைது செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர். நால்வரும் 'என்கவுன்டர்' செய்யப்பட்டனர்.
டிச.,8: டில்லியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலி.
டிச.,9: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 12ல் பா.ஜ., வென்றது. எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்தார்.
குடியுரிமை வன்முறை - டிச.,11 : மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றம். இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம். டில்லியில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
டிச.,14: போர்ப்ஸ் பத்திரிகையின் 'உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்' பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலாவுக்கு 34வது இடம்.
டிச.,16: உ.பி.,யில் உன்னாவ் பகுதியில் இளம்பெண் மீதான பாலியல் வழக்கில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., குல்தீப் சிங்-கிற்கு டில்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை.
டிச.,27: விமானப்படையில் 29 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த 'மிக்-27' போர் விமானம் விலக்கி கொள்ளப்பட்டது.
டிச.,30: முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம்.
டிச.,31: டில்லியில் 119 ஆண்டுகளுக்குப் பின் குறைந்த வெப்ப நிலை (9.4 டிகிரி செல்சியஸ்) பதிவு.
புதிய முதல்வர் டிச., 29: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜே.எம்.எம்., கட்சி தலைவர் ேஹமந்த் சோரன் பொறுப்பேற்பு.

உலகம்
டிச.,1: ஐரோப்பிய ஆணையத்தின் முதல் பெண் தலைவராக உர்சுலா வான்டர் லியான் பொறுப்பேற்பு.
டிச.,4: சூடானில் செராமிக் தொழிற் சாலையில் நடந்த தீ விபத்தில் 23 பேர் பலி.
*2019ம் ஆண்டின் 'மிஸ் யுனிவர்ஸ்' அழகியாக தென் ஆப்ரிக்காவின் ஜோஜிபினி துன்ஜி தேர்வு.
இளம் பிரதமர் - டிச., 9: பின்லாந்து பிரதமராக சன்னா மரின் 34, பொறுப்பேற்பு. இவரே தற்போது உலகின் இளம் பிரதமர். 1985 நவ., 16ல் பிறந்தார். முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர். 2006ல் அரசியலில் களமிறங்கினார். பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமர்.
டிச.,10: அர்ஜென்டினா அதிபராக ஆல்பெர்டோ பெர்னான்டெஜ் பொறுப்பேற்பு.
டிச.,12: அமெரிக்காவின் டைம் பத்திரிகையின் 2019க்கான சிறந்த நபராக கிரேட்டா தன்பெர்க் தேர்வு.
'பிரக்சிட்' நிறைவேறும் - டிச., 13: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் 'பிரக்சிட்'க்கு பெரும்பான்மை இல்லாததால் பார்லியை கலைத்து, தேர்தலை சந்தித்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன். இவரது கன்சர்வேட்டிவ் கட்சி, மொத்தமுள்ள 650 இடங்களில், 365ல் வென்றது.
டிச.,14: 2019ம் ஆண்டின் 'மிஸ் வேர்ல்டு' அழகியாக ஜமைக்காவின் டோனி அன்சிங் தேர்வு.
*உலகில் உயிரினங்கள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட 71 புதிய இனங்களை, விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.
டிச.,17: தேசத்துரோக வழக்கில் பாக்., முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு, சிறப்பு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதிப்பு.
டிச.,18 : அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம். செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, டிரம்ப் பதவி பறிக்கப்படும்.
டிச.,20: அமெரிக்க தேசிய அறிவியல் மைய தலைவராக, அமெரிக்க இந்தியர் சேதுராமன் பஞ்சநாதன் நியமனம்.
டிச.,22: கியூபாவில் 40 ஆண்டுகளுக்குப்பின் மேனுவல் மரிரோ கிருஷ் பிரதமராக நியமனம்.
*விண்வெளி போர் படை பிரிவை அமெரிக்கா துவக்கியது.
டிச.,23: வரும் 2021ல் சென்செஸ் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்.பி.ஆர்.,) புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
டிச.,25: லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X