உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு அளித்த முக்கிய தீர்ப்புகள்.
கட்டலாம் ராமர் கோயில்
நவ., 9: 'அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்' என்ற மேல்முறையீட்டு வழக்கில், 'நிலத்தின் உரிமை மத்திய அரசிடம் இருக்க வேண்டும். அதில் ராமர் கோயில் கட்ட மூன்று மாதங்களில் அறக்கட்டளை அமைத்து, அதனிடம் இடத்தை வழங்க வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்ள அயோத்தியில் 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என தீர்ப்பு.
அனைவரும் சமம்
நவ., 13: தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.,) சட்டத்துக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்ற டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கில் தள்ளுபடி செய்தது.
முறைகேடு இல்லை
நவ., 14: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவுமில்லை என்ற தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்களை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தள்ளுபடி.
சபரிமலைக்கு தீர்வு
நவ., 14: சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 'ஆராய வேண்டியிருப்பதால், ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி' தீர்ப்பு.
ராகுலுக்கு கண்டனம்
நவ., 14: உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை திரித்து, காங்., எம்.பி., ராகுல் பேசியதாக, பா.ஜ., தொடர்ந்த அவதுாறு வழக்கில், 'பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் கவனமாக பேச வேண்டும்' என ராகுலுக்கு அறிவுரை.