'குளோபல் கோல்கீப்பர்' மோடி
செப்., 24: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் 'குளோபல் கோல்கீப்பர்' விருது இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
பாரத ரத்னா
ஆக., 8: நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 'பாரதிய ஜனசங்' தலைவர் மறைந்த நானாஜி தேஷ்முக், மறைந்த பாடகர் பூபென் ஹசரிகா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்தியர்களுக்கு மகசேசே
ஆக., 2: பிலிப்பைன்சின் 'ராமன் மகசேசே' விருதுக்கு இந்திய பத்திரிகையாளர் ரவிஷ் குமார் மற்றும் மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு சேவையாற்றிய பாரத் வாத்வானி தேர்வு செய்யப் பட்டனர்.
'கிராமி'
பிப்., 10: சர்வதேச இசைக்கான 'கிராமி' விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் அமெரிக்க பாடகி, பாடலாசிரியை கேசி மஸ்கிரேவ்ஸ், அமெரிக்க பாடகர், பாடலாசிரியர் சைல்டிஷ் காம்பினோ தலா 4 விருது வென்றனர்.
தாதாசாகேப் பால்கே
டிச., ௨9: இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர்களுக்கான 'தாதாசாகேப் பால்கே 2018' விருது மூத்த 'பாலிவுட்' நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.
பத்ம விருதுகள்
மார்ச் 16: இந்த ஆண்டு 4 பத்ம விபூஷண், 14 பத்ம பூஷண், 94 பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகம் சார்பில் சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, நடன கலைஞர் நர்த்தகி நடராஜ், டாக்டர் ராமசாமி வெங்கடசாமி, ஆர்.வி. ரமணி உள்ளிட்ட 7 பேர் பத்ம ஸ்ரீ விருது பெற்றனர்.
'புக்கர்'
அக்., 14: இலக்கியத்துக்கான 'புக்கர்' விருதுக்கு கனடாவின் மார்கரேட் அட்வுட் (தி டெஸ்டமன்ட்ஸ் நாவல்), இங்கிலாந்தின் பெர்னார்டின் எவரிஸ்டோ (கேர்ள், உமன், அதர் நாவல்) தேர்வாகினர்.
'ஞானபீட' கவுரவம்
நவ., 30: மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்கர்
பிப்., 24: சிறந்த 'ஹாலிவுட்' படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை 'பீரியட் எண்ட் ஆப் சென்டென்ஸ்' என்ற இந்திய படம் வென்றது.
* 'பொஹிமியன் ராப்சோடி' என்ற படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒலி கலவை, சிறந்த எடிட்டிங் என, அதிகபட்சமாக 4 விருதுகள் கிடைத்தன.
* சிறந்த படமாக 'கிரீன் புக்' தேர்வானது.
தமிழகத்துக்கு பெருமை
நவ., 8: உலக வேளாண்மை விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டது.
சூப்பர் 'சூல்'
டிச., 18: தமிழ் மொழி பிரிவில் 'சூல்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுக்கு கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர் சோ. தர்மன் தேர்வு.
நோபல் பரிசு
இந்த ஆண்டுக்கான நோபல் விருது வென்றவர்கள்:
மருத்துவம் (அக். 7)
வில்லியம் கெலின் (அமெரிக்கா)
பீட்டர் ராட்கிலிப் (பிரிட்டன்)
கிரெக் சிமென்சா (அமெரிக்கா)
இயற்பியல் (அக். 8)
ஜேம்ஸ் பீபிள்ஸ் (கனடா)
மைக்கேல் மேயர் (சுவிட்சர்லாந்து)
டிடியர் கியூலோஸ் (சுவிட்சர்லாந்து)
வேதியியல் (அக். 9)
ஜான் கூடினாப் (அமெரிக்கா)
ஸ்டான்லி விட்டிங்ஹாம் (அமெரிக்கா)
அகிரா யோசினோ (ஜப்பான்)
இலக்கியம் (அக். 10)
ஓல்கா தோகார்ஜக் (2018, போலந்து)
பீட்டர் ஹண்ட்கே (2019, ஆஸ்திரியா)
அமைதி (அக். 11)
அபே அகமது (எதியோப்பியா)
பொருளாதாரம் (அக். 14)
மைக்கேல் கிரிமர் (அமெரிக்கா)
அபிஜித் பானர்ஜி (அமெரிக்கா, இந்தியா)
எஸ்தர் டப்லோ (அமெரிக்கா, பிரான்ஸ்)