'பாடும்' கண்ணாடி
நவீன காலத்தில், வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள, நாகரிகத்திற்காக கண்ணாடி அணிகின்றனர். இதன் அடுத்த தொழில்நுட்பம் வெளிவந்துவிட்டது. 'போஸ் பிரேம்ஸ்' என்ற கண்ணாடி அணிந்தால் பாடல் கேட்க
'ஹெட்போன்' தேவையில்லை. இதில் உள்ள 'புளூடூத்' வசதி வழியே, உங்களின் அலைபேசியை தொடர்பு கொள்ளலாம். கண்ணாடியின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள 'ஸ்பீக்கர்' வழியாக பாடல்களை கேட்க முடியும். பயணத்தின்போது பயனுள்ளதாக இருக்கும். 'மைக்' பொருத்தப்பட்டிருப்பதால் அலைபேசியை 'ஆன்' செய்யாமல் அழைப்புகளை எடுக்க முடியும்.
விலை: ரூ. 21,900
மடிக்கும் கம்ப்யூட்டர்
அளவில் பெரிதாக இருக்கும் லேப்டாப்பிற்கு மாற்றாக, லெனோவா 'திங்பேடு லெவன் போல்டபிளை' கொண்டு வந்துள்ளது. இதை மடித்து தேவைப்படும் போது திறந்து பயன்படுத்தலாம். திறக்கும்போது, 13.3 'இன்ச்' அளவில் இருக்கும். மடிக்கும்போது 9 'இன்ச்சாக' மாறிவிடும். இதிலுள்ள 'விர்ச்சுவல் கீபோர்டு' வழியாக பணி செய்ய முடியும். தொடுதிரை உதவியுடன் தேவையான விஷயத்தை தேடவும் முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் தாங்கும். அளவில் சிறியதாக இருந்தாலும், வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்தும் திருப்தி கட்டாயம் ஏற்படும்.
விலை: ரூ. 52 ஆயிரம்
நிம்மதியாக துாங்க...
துாக்கத்தை ஒழுங்கு படுத்த 'எய்ட் ஸ்லீப் பாடு' வந்துவிட்டது. 4 அடுக்கு கொண்ட மெத்தையின் மீது, தொழில்நுட்ப 'கவர்' போர்த்தப்படுகிறது. இதனுடன் தண்ணீர் குடுவை அடங்கிய 'பாடு' இணைக்கப்பட்டுள்ளது. இது மெத்தையின் மீதான வெப்பநிலையை கட்டுப்படுத்துகிறது. இரவில் வெப் பநிலையை 'செட்' செய்து கொள்ளலாம். இதை 'ஆப்' வழியாக இயக்கலாம். துாக்கத்தில் நமது இதயத்தின் துடிப்பு, துாக்கத்தின் போக்கு உள்ளிட்டவை கணக்கிடப்படும். எழ வேண்டிய நேரத்தை குறிப்பிட்டால் வெப்பநிலையை மெதுவாக மாற்றி நம்மை எழுப்பிவிடும்.
விலை: ரூ. 1.42 லட்சம்
புதுமையான 'ஹேண்ட்பேக்'
பெண்கள் பயன்படுத்தும் 'ஹேண்ட்பேக்கில்' புதுமையை பீ அன்ட் கென் உருவாக்கியுள்ளது. அலைபேசியில் குறிப்பிட்ட 'ஆப்பை இன்ஸ்டால்' செய்து புளூடூத் மூலம் இணைக்க வேண்டும். உரையாடல் எரிச்சலாக மாறும்போது, 'ஹேண்ட்பேக்கில்' உள்ள பட்டனை அழுத்தினால் உங்கள் அலைபேசிக்கு அழைப்பு சென்றுவிடும். நீங்கள் முக்கியமான அழைப்பு எனக்கூறி தப்பிக்கலாம். அதே பட்டனை இரண்டு முறை அழுத்தினால், 'டாக்சியை' அழைக்கலாம். ஒரே பட்டனின் வழியாக, பாடல் கேட்பதுடன், அலைபேசி உள்ள இடத்தையும் கண்டறியலாம்.
விலை: ரூ. 35 ஆயிரம்