விளையாட்டு | வருடமலர் | Varudamalar | tamil weekly supplements
விளையாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
00:00

ஜனவரி
ஜன.,5: புரோ கபடி, குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு சாம்பியன்.
அதிக கோல் - ஜன. 6 ஆசிய கால்பந்து தொடரில் இந்தியா (4-1) தாய்லாந்தை வென்றது. இந்தியாவின் சுனில் செத்ரி 2 கோல் அடித்தார். 115 போட்டியில் 72 கோல் அடித்த இவர், தற்போது அதிக கோல் அடித்த வீரர்களில் 2வது இடம் பிடித்தார். ரொனால்டோ (போர்ச்சுக்கல், 164ல் 99) முதலிடத்தில் உள்ளார்.
ஜன.,10: உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீராங்கனை மேரி கோம் (48 கி.கி.,) 'நம்பர்-1' ஆனார்.
ஜன.,12: ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 10,000 ரன்கள் எடுத்தார் தோனி.
ஜன.,15: இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆன முதல் இந்தியர் தமிழக செஸ் வீரர் குகேஷ்.
முதன் முறை
ஜன. 18: ஆஸி., மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி (2-1) முதன் முறையாக ஒருநாள் கோப்பை கைப்பற்றியது.
ஜன.,23: ஒருநாள் அரங்கில் அதிவேக 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.
ஒசாகா சாம்பியன் - ஜன. 26: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பைனலில் ஜப்பானின் ஒசாகா, செக் குடியரசின் கிவிட்டோவாவை சந்தித்தார். ஒசாகா 7-6, 5-7, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.
ஜன.,27: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன்.

பிப்ரவரி
பிப்.,7: ரஞ்சி கோப்பை தொடரில் விதர்பா அணி சாம்பியன்.
பிப்.,8: நியூசிலாந்து மண்ணில் இந்தியா முதல் 'டுவென்டி-20' வெற்றி.
பிப்.,19: பல்கேரிய குத்துச்சண்டை தொடர், இந்தியாவின் நிகாத் ஜரீன், மீனா குமாரி தங்கம்.
பிப்.,22: புரோ வாலிபால் லீக் தொடரில் சென்னை சாம்பியன்.
பிப்.,27: இந்திய கிராண்ட் பிரிக்ஸ்-2, 400 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் தருண் அய்யாச்சாமி தங்கம்.

மார்ச்
மார்ச் 5: நாக்பூர் போட்டியில் 8 ரன்னில் வென்ற இந்தியா, ஒருநாள் அரங்கில் 500வது வெற்றி (எதிர்-ஆஸி.,) பெற்றது.
மார்ச் 15: நியூசிலாந்து, கிறைஸ்ட் சர்ச்சில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் உயிர் தப்பினர்.
மார்ச் 17: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் பெங்களூரு சாம்பியன்.
மார்ச் 28: ஆசிய 'ஏர்கன்' துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் இந்தியாவின் இளவேனில், ரவி குமார் ஜோடி வெள்ளி.

ஏப்ரல்

ஏப்.,1: டெஸ்ட் தரவரிசை, இந்தியா தொடர்ந்து மூன்று ஆண்டாக 'நம்பர்-1' இடம் பெற்றது.
ஏப்.,10: விஸ்டன் சிறந்த வீரர் விருதை 'ஹாட்ரிக்' முறையில் (2016, 17, 18) தட்டிச்சென்றார் இந்தியாவின் கோஹ்லி.
தமிழக தங்கம் - ஏப். 22: கத்தாரில் நடந்த ஆசிய தடகள போட்டியில் திருச்சியின் கோமதி மாரிமுத்து, இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்தார். 800 மீட்டர் ஓட்டத்தில், 2 நிமிடம் 2.70 வினாடிகளில் எல்லையை அடைந்து வென்றார்.
ஏப்.,26: ஆசிய ஸ்னுாக்கர் டூர் தொடரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன்.

மே

மே 3: ரஷ்ய மல்யுத்த தொடரில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கம்.
மே 5: மலேசிய ஆசிய ஸ்குவாஷ் தொடர், இந்தியாவின் சவுரவ் கோசால், ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்.
மே 14: ஐ.சி.சி., முதல் பெண் 'மேட்ச் ரெப்ரி' ஆனார் இந்தியாவின் ஜி.எஸ். லட்சுமி.
மே 24: அசாம், இந்திய ஓபன் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்தியா 57 பதக்கங்கள் (12 தங்கம், 18 வெள்ளி, 27 வெண்கலம்) வென்றது.
மே 26-27: ஜெர்மனி, உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அபுர்வி சண்டேலா, சவுரப் தங்கம்.

ஜூன்
ஜூன் 8: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி சாம்பியன்.
ஜூன் 9: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ், ஸ்பெயின் வீரர் நடால் 12வது முறையாக சாம்பியன்.
யுவராஜ் 'குட்-பை' - ஜூன் 10: இந்திய கிரிக்கெட் 'ஆல் ரவுண்டர்' யுவராஜ் சிங் 38. கடந்த 2007 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இங்கிலாந்தின் பிராட் ஓவரில் 6 பந்திலும் 6 சிக்சர் அடித்தார். 2011 உலக கோப்பை நாயகன் விடைபெற்றார்.
ஜூன் 15: ஒடிசா, ஹாக்கி 'சீரிஸ் பைனல்ஸ்' தொடர், பைனலில் இந்தியா 5-1 என, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.
ஜூன் 16: தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப், தமிழக வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்.
ஜூன் 21: கத்தார், ஆசிய ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப், இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்.
ஜூன் 23: ஜப்பான், ஹாக்கி 'சீரிஸ் பைனல்ஸ்' தொடரில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா (3-1) சாம்பியன்.

ஜூலை
ஜூலை 13: விம்பிள்டன் டென்னிசில் ருமேனிய வீராங்கனை ஹாலெப் சாம்பியன்.
ஜூலை 14: விம்பிள்டன் டென்னிசில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன்.
ஜூலை 15-20: ஜெர்மனி, ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம்.
ஜூலை 17: செக்குடியரசு, சர்வதேச தடகளம், இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் (200 மீ.,) தங்கம்.
ஜூலை 28: இந்தோனேஷியா, பிரசிடென்ட் குத்துச்சண்டையில் இந்தியாவின் மேரி கோம் தங்கம்.

ஆகஸ்ட்

ஆக.,4: போலந்து ஓபன் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (53 கி.கி.,) தங்கம்.
* தாய்லாந்து ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன்.
ஆக.,5: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன் ஓய்வு.
ஆக.,8: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் ஆம்லா ஓய்வு.
ஆக.,11: அல்டிமேட் டேபிள் டென்னிஸ், சென்னை சாம்பியன்.
ஆக.,16: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்.
'தங்க' மங்கை - ஆக., 25: சுவிட்சர்லாந்து, உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவின் சிந்து, ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தினார். இத்தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார். இது, உலக சாம்பியன்ஷிப் அரங்கில் சிந்து கைப்பற்றிய 5வது பதக்கம்.

செப்டம்பர்
செப்.,1: கிங்ஸ்டனில் பும்ரா 'ஹாட்ரிக்' விக்கெட் (எதிரணி-விண்டீஸ்) சாதனை. டெஸ்டில் இச்சாதனை படைத்த 3வது இந்தியர் ஆனார்.
செப்.,9: யு.எஸ்., ஓபன் டென்னிஸ், ஸ்பெயினின் நடால் சாம்பியன்.
செப்.,24: 'பிபா' சிறந்த கால்பந்து வீரராக அர்ஜென்டினாவின் மெஸ்சி (பார்சிலோனா கிளப்) தேர்வு.
செப்.,25: உலக ஸ்னுாக்கர் சாம்பியன் ஷிப் தொடர், இந்தியா சாம்பியன்.

அக்டோபர்
அக்.,12: மும்பை, உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப், 18 வயது பிரிவில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா 14, சாம்பியன்.
வெற்றிநடை - அக்., 13: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான புனேயில் நடந்த 2வது டெஸ்டில் வென்ற கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை (11) கைப்பற்றி உலக சாதனை.
'தல' கங்குலி - அக்., 14: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 47, போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிய செயலராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா நியமிக்கப்பட்டார்.
அக்.,16: விஜய் ஹசாரே போட்டியில் மும்பையின் யாஷஸ்வி ஜெய்ஷ்வால், 203 ரன்கள் (எதிரணி-ஜார்க்கண்ட்) விளாசி உலக சாதனை.
அக்.,24: சீனா, உலக ராணுவ விளையாட்டில் மாற்றுத்திறனாளி ஓட்டத்தில் தமிழகத்தின் ஆனந்தன் ((100, 200, 400 மீ.,) மூன்று தங்கம்.
அக்.,29: சூதாட்ட புகாரில் வங்கதேச கிரிக்கெட் வீரர் சாகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டு தடை.

நவம்பர்
நவ.,5: கத்தார், ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாகர் தங்கம்.
நவ.,10: நாக்பூர் 'டுவென்டி-20'ல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகார் 'ஹாட்ரிக்' (எதிரணி-வங்கதேசம்).
நவ.,21: சீனா, உலக துப்பாக்கி சுடுதல், தமிழகத்தின் இளவேனில் தங்கம்.
பகலிரவு டெஸ்ட் - நவ., 22-24: கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, வங்கதேசம் மோதிய டெஸ்ட் போட்டி நடந்தது. இது, இந்திய மண்ணில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட். இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் வித்தியாசத்தில் வென்றது.
நவ.,25: டேவிஸ் கோப்பை டென்னிசில் ஸ்பெயின் சாம்பியன்.
நவ.,26: கோல்கட்டா, கிராண்ட் செஸ் டூர் தொடரில் நார்வே வீரர் கார்ல்சன் சாம்பியன்.
வெற்றிக் கூட்டணி - நவ., 30: கஜகஸ்தான், டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பயஸ், ராம்குமார் அடங்கிய இந்திய அணி 4-0 என, பாகிஸ்தானை வீழ்த்தியது. டேவிஸ் கோப்பை இரட்டையரில் பயஸ் பெற்ற 44வது வெற்றி.

டிசம்பர்
டிச.,3: தெற்காசிய விளையாட்டு 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் அர்ச்சனா தங்கம்.
* பிரான்ஸ் கால்பந்து பத்திரிகையின் 'பாலன் டி ஆர்' விருதை அர்ஜென்டினாவின் மெஸ்சி வென்றார்.
டிச.,7: தெற்காசிய விளையாட்டு பளுதுாக்குதலில் தமிழகத்தின் அனுராதா தங்கம்.
டிச.,9: ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவுக்கு போட்டிகளில் பங்கேற்க நான்கு ஆண்டு தடை.
டிச.,19: ஐ.பி.எல்., ஏலத்தில் கம்மின்ஸ்(ஆஸி.,) ரூ. 15.50 கோடிக்கு கோல்கட்டா அணியில் தேர்வு.
டிச.,21: கத்தார் பளுதுாக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம்.
டிச.,28: டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு மேரி கோம் தகுதி.
டிச.,29: ரஷ்யா, உலக 'ரேபிட்' செஸ் தொடரில் இந்திய வீராங்கனை ஹம்பி சாம்பியன்.
புதிய கவுரவம் டிச. 30: 'விஸ்டன்' இதழின் சிறந்த பத்தாண்டு 'டுவென்டி-20' அணியில் இந்தியாவின் கோஹ்லி, பும்ராவுக்கு இடம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X