தினமும் சூரிய பூஜை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2010
00:00

சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய பூஜை நடக்கிறது. பொங்கல் மற்றும் ரதசப்தமியன்று இத்தலத்தை தரிசனம் செய்வது சிறப்பு.
தல வரலாறு: சூரியபகவானின் மனைவியான சமுக்ஞாதேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். சாயாதேவி எனப்பட்ட அவள், சமுக்ஞாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள். இதையறிந்து கோபம் கொண்ட சூரியன், சமுக்ஞாதேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா யாகம் நடத்திக் கொண்டிருந்தார்.
மனைவியைத் தேடும் மனநிலையில் இருந்த சூரியன், பிரம்மாவைக்
கவனிக்கவில்லை. தன்னை சூரியன் அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன் சாபவிமோசனம் கொடுத்தருளினார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால் "ரவீஸ்வரர்' (ரவி-சூரியன்) என்று பெயர் பெற்றார்.
தினமும் சூரியபூஜை: இக்கோயிலில் சிவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் வாசல் கிடையாது. தென்திசையிலுள்ள வாசல் வழியாக நுழைந்துதான், இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில் சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைத்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி சிவலிங்க வடிவ துளையின் வழியாக, சுவாமியின் மீது விழுகிறது. ஒளிபட்ட பிறகே, காலை பூஜை செய்கின்றனர். சிவன் சன்னதி முன்மண்டபத்தில் சூரியன் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை, உத்தராயண, தெட்சிணாயண புண்ணிய கால துவக்கம், பொங்கல், ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
திருமண வரம் தரும் அம்பிகை: முற்காலத்தில் இங்கு சிவன் சன்னதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. தனக்கு அப்பாக்கியம் தரும்படி சிவனை வேண்டினான். சிவன், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார். அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை என பெயர் சூட்டி வளர்த்தான். சிவன் அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். பின், அம்பாளுக்கு சன்னதி எழுப்பப்பட்டது. சிவன் அம்பிகையை திருமணம் செய்த வைபவம் ஆனி பிரம்மோற்ஸவத்தின்போது நடக்கிறது. நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக் கொள்ள தடை நீங்குவதாக நம்பிக்கை. விஜயதசமியன்று "மகிஷன் வதம்' வைபவம் நடக்கும். அப்போது அம்பாள் சன்னதி எதிரில் ஒரு வாழை மரம் கட்டி, அதை மகிஷனாகக் கருதி வெட்டுகின்றனர்.
வியாசர்பாடி பெயர்க்காரணம்: வேதங்களை இயற்றிய வியாசர் வழிபட்ட தலம் இது.
இத்தலம் அவரது பெயரால் "வியாசர்பாடி' எனப்படுகிறது. சிவன் சன்னதிக்கு பின்புற பிரகாரத்தில் இவருக்கு சன்னதி இருக்கிறது. புலித்தோல் மீது, பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இவரது சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. வலதுகையில் சின்முத்திரை காட்டி, இடது கையில் சுவடி வைத்திருக்கிறார். பவுர்ணமியன்று இவருக்கு வில்வமாலை அணிவித்து விசேஷ பூஜை செய்கின்றனர். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன், இவரிடம் வேண்டிக் கொண்டால், கல்வி சிறக்கும். தை ரதசப்தமியன்று, வியாசர் இங்கு சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம்.
முனைகாத்த பெருமாள்: வியாசர் சன்னதி அருகில் "முனைகாத்த பெருமாள்' சன்னதி இருக்கிறது. வியாசர் மகாபாரதக் கதையைச் சொன்னபோது, விநாயகர் தனது தந்தத்தை உடைத்து எழுதினார். அப்போது, தந்தத்தின் கூரிய முனை, மழுங்கி விடாமல் இந்த பெருமாள் காத்தருளினார். எனவே இவர், "முனை காத்த பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசியின்போது இவர் புறப்பாடாகிறார்.
சிறப்பம்சம்: சிவன் சன்னதி மேலேயுள்ள இந்திர விமானம், நடுவில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டுள்ளது கட்டடக்கலைக்குச் சான்று. மூலஸ்தானத்திலிருந்து பார்த்தால், இந்த அமைப்பு தெரியும். கோயிலுக்கு எதிரே சூரிய தீர்த்தம் இருக்கிறது. பைரவர்,நடராஜர், சுந்தரவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஐயப்பன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு.
இருப்பிடம்: சென்னை எழும்பூரில் இருந்து 7 கி.மீ., பாரீசில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் வியாசர் பாடி உள்ளது. மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.
திறக்கும் நேரம்: காலை 6- மதியம் 12 மணி, மாலை 4- இரவு 9 மணி.
போன்: 044- 2551 8049, 99418 60986.


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X